மின் கம்பி உரசி மூங்கில் எரிந்து சாம்பல்: விவசாயிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு – மின் ஊழியர்களுக்கு உத்தரவு
admin - 0
மூங்கில் பயிர் சேதமடைந்த விவகாரத்தில் விவசாயிக்கு மின் நிறுவன ஊழியர்கள் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மகாராஷ்டிர மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த 68 வயது விவசாயி, தனது நிலத்தில் 5,000 மூங்கில் மரங்களை நட்டு வளர்த்துள்ளார். அந்த மூங்கில்கள் விற்பனைக்கு வர பாதி காய்ந்திருந்தது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 22-ல் அந்த நிலத்துக்கு மேலே சென்ற மகாராஷ்டிரா மாநில...
பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்கள் வீரமற்றவர்கள்: பாஜக எம்.பி. ராம் சந்தர் கருத்துக்கு கண்டனம்
admin - 0
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் விஜய் ஷா, பெண் ராணுவ அதிகாரி சோபியா குரேஸியை தொடர்புபடுத்தி தெரிவித்த கருத்து சர்ச்சை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் வலுத்ததால் அவர் மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் ஹரியானாவின் பிவானி நகரில் நடைபெற்ற மராட்டிய ராணி அகில்யாபாய் ஹோல்கர் 300-வது பிறந்த தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநிலங்களவை எம்.பி ராம் சந்தர் ஜங்ரா பேசியதாவது: பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் போது கணவர்களை இழந்த...
ஹைதராபாத்தை சேர்ந்த பீபிள் பல்ஸ் நிறுவனம் கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து கருத்து கணிப்பு நடத்தியது. இதில் 10 ஆயிரத்து 481 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, அதன் முடிவுகளை தொகுத்து வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி 48.4% பேர் சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளனர். அடுத்த முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என்ற கேள்விக்கு சித்தராமையா முதலிடத்தில் இருக்கிறார். அடுத்தடுத்த இடங்களில் டி.கே.சிவகுமார், எடியூரப்பா, விஜயேந்திரா (எடியூரப்பாவின்...
உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா சீசன் தொடங்கியுள்ள நிலையில் இது போக்குவரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாரி தேவி கோயிலில் இருந்து பத்ரிநாத் செல்லும் நெடுஞ்சாலையில் நேற்று மாலை 6 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பது கூகுள் ரியல்டைம் வரைபடம் மூலம் தெரியவந்தது. இந்த சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த என்எச்-7 தேசிய நெடுஞ்சாலைதான்...
தேஜ் பிரதாப் யாதவ் தனது காதலியுடன் இருக்கும் படம் முகநூலில் வெளியானதை அடுத்து, அவரை ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியிலிருந்தும், குடும்பத்திலிருந்தும் 6 ஆண்டுகள் நீக்குவதாக லாலு பிரசாத் யாதவ் அறிவித்துள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ்(37). இவருக்கும் பிஹார் முன்னாள் முதல்வர் தரோகோ ராயின் பேத்தி ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கணவர்...
அபாயகரமான ரசாயனங்கள் உடன் சரக்கு கப்பல் கேரள கடல் பகுதியில் மூழ்கியது – 24 ஊழியர்கள் மீட்பு
admin - 0
அபாயகரமான ரசாயனங்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் கேரள கடல் பகுதியில் மூழ்கியது. அந்த கப்பலை இயக்கிய மாலுமிகள் உட்பட 24 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து லைபீரியாவை சேர்ந்த சரக்கு கப்பல் கொச்சி துறைமுகத்துக்கு புறப்பட்டது. இந்த கப்பலில் 100 கன்டெய்னர்கள் இருந்தன. இதில் 13 கன்டெய்னர்களில் அபாயகரமான ரசாயனங்களும் 12 கன்டெய்னர்களில் கால்சியம் கார்பைடும் இருந்தது. மேலும்...
டெல்லி சட்டப்பேரவையில் வீர சாவர்க்கர் மற்றும் தயானந்த் சரஸ்வதி படம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு டெல்லியின் எதிர்கட்சியான ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டெல்லி சட்டமன்ற சபாநாயகர் விஜேந்தர் குப்தா நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதில் அவர், வீர சாவர்க்கர், மகரிஷி தயானந்த சரஸ்வதி மற்றும் பண்டிட் மதன் மோகன் மாளவியா ஆகியோரின் படங்கள் விரைவில் டெல்லி சட்டமன்ற வளாகத்தில் நிறுவப்படும் எனக் கூறினார். இதற்கான...
யங் இந்தியா நிறுவனத்துக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் ரூ.3 கோடி வரை நன்கொடை வழங்கி உள்ளனர் என்று நேஷனல் ஹெரால்டு வழக்கின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 1937-ம் ஆண்டு நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஜர்னஸ்ல் லிமிடெட் நிறுவனம் (ஏஜேஎல்) சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியிடப்பட்டு வந்தது. இந்த பத்திரிகை கடந்த 2008-ம் ஆண்டில் மூடப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு...
சட்டவிரோத சூதாட்ட செயலிகளை தடை செய்வது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் சட்டவிரோத சூதாட்ட செயலிகளுக்கு தடை கோரி பொது நலன் மனுவை (பிஐஎல்) தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது:
நாட்டில் ஏராளமான சட்டவிரோத சூதாட்ட செயலிகள் செயல்பட்டு வருகின்றன. செல்போன் வழியாக செயல்படும் இந்த அனைத்து பெட்டிங் செயலிகளும் சூதாட்ட சட்டங்கள்...
மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் போலீஸாருடன் நடந்த என்கவுன்ட்டரில், 4 மாவோயிஸ்ட்கள் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தையொட்டி அமைந்துள்ளது. இந்நிலையில், கட்சிரோலி மாவட்டம் கவாண்டே பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பதாக நம்பத்தகுந்த தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. இதையடுத்து போலீஸார், போலீஸ் சிறப்பு கமாண்டோ குழு சி-60 பிரிவினர், சிஆர்பிஃஎப் வீரர்கள் நேற்று முன்தினம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை கனமழை பெய்த...










