கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ படத்தின் டப்பிங் பணிகளைத் தொடங்கியிருக்கிறது படக்குழு.
மைசூரில் ‘சர்தார் 2’ படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. அப்போது தான் கார்த்திக்கு காலில் அடிபட்டது. இதனால் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பியது படக்குழு. கார்த்தி ஒய்வெடுத்து வரும் நிலையில், படத்தின் டப்பிங் பணிகளைத் தொடங்கிவிட்டார்கள். முதலாவதாக கார்த்தியின் காட்சிகளோடு டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
கார்த்திக்கு கால் சரியானவுடன் மீண்டும் ‘சர்தார் 2’ படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளார்கள்....
நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். விக்கி கவுஷலுடன் அவர் நடித்து பிப்.14-ல் வெளியான ‘ஜாவா’ திரைப்படம் ரூ.500 கோடி வசூலைத் தாண்டியுள்ளது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கானுடன் ‘சிக்கந்தர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவி கனிகா சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க ராஷ்மிகா மந்தனாவுக்குப் பலமுறை அழைப்பு...
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் வரவேற்பைப் பெற்றது. இதில் முத்துவேல் பாண்டியன் என்ற சிறை அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்திருந்தார். இதையடுத்து இதன் அடுத்த பாகம் ‘ஜெயிலர் 2’ என்ற பெயரில் உருவாகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இதில் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான இந்தப்...
நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர், ஜெய்ப்பூரில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனது மனைவியும் நடிகையுமான ஸ்ரீதேவி நடித்து கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மாம்’ படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. அதில் என் மகள் குஷி கபூர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் சில முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள். முடிவானதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...
பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா, லண்டனில் உள்ள ஈவன்டின் அப்போலோ அரங்கத்தில் சிம்பொனி இசையை, இந்திய நேரப்படி நேற்று முன்தினம் அதிகாலை அரங்கேற்றம் செய்தார். உலகின் சிறந்த ராயல் பில் ஹார்மோனிக் இசைக் குழுவுடன் இணைந்து இந்த சிம்பொனியை அரங்கேற்றினார்.
ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில், 45 நிமிடம் சிம்பொனி இசை அரங்கேற்றம் நடந்தது. அவரின் இசைக் குறிப்புகளை 80 இசைக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இசைத்தது பார்வையாளர்களைப்...
நடிகை குஷ்புவும் இயக்குநர் சுந்தர்.சி-யும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என்ற மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சுந்தர்.சி - குஷ்பு திருமணம் முடிந்து நேற்றோடு 25 வருடங்கள் ஆகிவிட்டன. இதையடுத்து பழநி முருகன் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று சுந்தர்.சி, வழிபட்டார். பின்னர் அவர் முடிகாணிக்கை செலுத்தினார்.
கோயில் நிர்வாகம் பிரசாதங்கள் வழங்கியது. பின்னர் சுந்தர். சி, சார்பில் பக்தர்களின் அன்னதானத்துக்கு நன்கொடை வழங்கப்பட்டது. கோயிலில் அவர்களைக் கண்ட...
ஜெய்ப்பூரைச் சேர்ந்த யோகேந்திர சிங் என்ற வழக்கறிஞர், மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், ‘‘பிரபல நடிகர்களான ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப் ஆகியோர் பான் மசாலா விளம்பரத்தில் நடித்துள்ளனர். அந்த பான் மசாலாவில், குங்குமப் பூவின் சக்தி இருப்பதாக விளம்பரத்தில் கூறப்படுகிறது. ஒரு கிலோ குங்குமப்பூ ரூ.4 லட்சத்துக்கு விற்கப்படுகிறது. ஆனால், பான் மசாலா ரூ.5 -க்கு விற்கப்படுகிறது. எனவே இதில்...
சர்வதேச விருது பெற்ற ‘மை சன் இஸ் கே’ படம் மூலம் அறியப்பட்ட சுயாதீன திரைப்பட இயக்குநர் லோகேஷ் குமார், சவுண்ட் பார்ட்டி ஸ்டூடியோஸ், தி டிரீம் கிளப் நிறுவனங்களுடன் இணைந்து மேஜிக் ரீல் திரைப்பட விழாவைத் நடத்தி வருகிறார். இப்போது நடத்தப்பட்ட விழாவில் பல்வேறு படங்கள் திரையிடப்பட்டன.
இதில் சிறந்த குறும்படமாக, விக்னேஷ் பரமசிவம் இயக்கிய ‘அன்பிற்கு எண் ஒன்றை அழுத்தவும்’ தேர்வானது. லைஃப் ஆஃப் பழம் என்ற...
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கியுள்ள படம், ‘பெருசு’. இதில் வைபவ், சுனில் ரெட்டி, கருணாகரன், பால சரவணன், ரெடின் கிங்க்லி, நிஹாரிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அடல்ட் காமெடி படமான இது மார்ச் 14-ம் தேதி வெளியாகிறது.
படம் பற்றி இயக்குநர் இளங்கோ ராம் கூறும்போது, “ இது சிங்களத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற 'டென்டிகோ' (tentigo) என்ற படத்தின் ரீமேக். பட...
ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை எழுதி, அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை படைத்து தமிழகம் திரும்பிய இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு நல்கப்பட்டது. அப்போது அவர், ”அரசு மரியாதைக்கும், மக்களின் அன்புக்கும் நன்றி” என நெகிழ்ச்சி பொங்கக் கூறினார்.
முன்னதாக இசையமைப்பாளர் இளையராஜா, தனது முதல் சிம்பொனி இசையை லண்டனில் அரங்கேற்றம் செய்தார். அங்குள்ள ஈவென்டிம் அப்போலோ அரங்கில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்தார். உலகின் மிகச்...










