‘கோர்ட்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ள நடிகர்கள் முடிவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மார்ச் 14-ம் தேதி நானி தயாரிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘கோர்ட் – ஸ்டேட் Vs எ நோபடி’. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையினைக் கைப்பற்றினார் தியாகராஜன். இதன் பணிகள் நீண்ட மாதங்களாக நடைபெற்று வந்தன. தற்போது இதில் நடிக்கவுள்ள நடிகர்கள் முடிவாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘கோர்ட்’ படத்தில் வரும் காதலர்கள் கதாபாத்திரத்தில்...
மாரீசன்’ பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.
ஜூலை 25-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘மாரீசன்’. இப்படத்தைப் பார்த்துவிட்டு கமல் பாராட்டு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கமல்ஹாசன், “‘மாரீசன்’ படத்தைப் பார்த்தேன். இது நகைச்சுவைக்கும், மனித உணர்வுகளுக்கும் இடையே சிரமமின்றி நடனமாடும் ஒரு படம். என்னை சிரிக்கவும், சிந்திக்கவும், படக்குழுவினரைப் பாராட்டவும் வைத்தது. இந்த மகிழ்ச்சியான படைப்புக்காக படக்குழுவினரை வாழ்த்த அவர்களுடன் ஓர் அற்புதமான...
ரஜினியை வில்லனாக காட்ட நினைத்த கதை குறித்து பேட்டி ஒன்றில் விவரித்து இருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
ஆகஸ்ட் 14-ம் தேதி ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியாகவுள்ள படம் ‘கூலி’. இப்படத்துக்கு முன்பாக ரஜினி வைத்து வேறொரு கதையை இயக்க இருந்தார் லோகேஷ் கனகராஜ். அது ஏன் நடக்கவில்லை என்பது குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதில் லோகேஷ் கனகராஜ், “‘கூலி’ கதைக்கு முன்பு ரஜினிக்காக வேறொரு கதை...
ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் வெளியாகி, மாபெரும் வெற்றி பெட்ரா படம் ‘அவதார்’. உலக அளவில் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை இந்தப் படம் பெற்றுள்ளது.
இதன் அடுத்த பாகம் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’, 2022-ம் ஆண்டு வெளியாகி வசூலில் சாதனை படைத்தது. இதன் 3-ம் பாகமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ இந்த ஆண்டு டிச.19-ம் தேதி வெளியாக இருக்கிறது. சாம்...
தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘அடங்கமறு’, ‘அயோக்யா’, ‘சங்கத்தமிழன்’, ‘அரண்மனை 3’. ‘சர்தார்’, ‘திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ராஷி கண்ணா.
தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வரும் அவர், இப்போது பவன் கல்யாண் நடிக்கும் ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தில் இணைந்துள்ளார். ‘ஹரி ஹர வீரமல்லு’ படத்தைத் தொடர்ந்து பவன் கல்யாண் நடிக்கும் படம் இது. இதை ஹரிஷ் ஷங்கர் இயக்குகிறார். ஸ்ரீலீலா, கே.எஸ்.ரவிகுமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் ராஷி...
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் படம், ‘பராசக்தி’. இது அவருடைய 25-வது படம். இதில் வில்லனாக ரவி மோகன் நடிக்கிறார். ஸ்ரீலீலா, அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். பீரியட் படமான இது, கல்லூரி பின்னணியில் நடக்கும் இந்தி எதிர்ப்பு கதையைக் கொண்டது என்று கூறப்படுகிறது. இதன் அடுத்தகட்டப் படப்பிடிப்பு...
ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த கன்னடப் படமான ‘காந்தாரா’, கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்தின் முதல் பாகம் இப்போது உருவாகி வருகிறது. ‘காந்தாரா: சாப்டர் 1’என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு அதிகஎதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதை கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டுப் படக்குழு அறிவித்துள்ளது.
அதில் பேசும் ரிஷப் ஷெட்டி,...
ஜீதமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, ‘டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோடட் 3’. இதில் நடனக் கலைஞர்களும் பிரபலங்களும் ஜோடியாக இணைந்து நிகழ்ச்சிகளை வழங்கிவந்தனர். நடுவர்களாக பாபா பாஸ்கர், சினேகா, வரலட்சுமி சரத்குமார் இருந்தனர். சிறப்பு விருந்தினராக விஜய் ஆண்டனி கலந்து கொண்டார். இதன் இறுதிப்போட்டிக்கு தில்லை- ப்ரீத்தா, நிதின்-தித்யா, சபரீஷ்- ஜனுஷிகா, பிரஜனா - காகனா, திலீப்- மெர்சீனா ஆகிய ஐந்து ஜோடிகள்...
எந்த தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத மலைக் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள படம், ‘போகி’. உண்மைச் சம்பவக் கதையான இதில், நபி நந்தி, சரத், சுவாஸிகா, பூனம் கவுர், வேல. ராமமூர்த்தி, சங்கிலி முருகன், ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர் என பலர் நடித்துள்ளனர். ராஜா சி சேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு மரியா மனோகர் இசை அமைத்துள்ளார்.
வி.ஐ.குளோபல் நெட்வொர்க்ஸ் தயாரித்துள்ள இதை விஜயசேகரன் இயக்கியுள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது, “ஒரு...
வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்'. அனீஸ் அஷ்ரஃப் இயக்கியுள்ளார். அரவிந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏஜிஆர் இசையமைத்துள்ளார். க்ரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தப் படத்தை சின்னத்தம்பி புரொடக் ஷன் நிறுவனம் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்துள்ளார். சாண்டி ரவிச்சந்திரன் இணை தயாரிப்பு செய்துள்ள...










