Google search engine
கொச்சியில் ஐ.டி ஊழியரை கடத்தி தாக்கியதாக நடிகை லட்சுமி மேனன் மற்றும் மூன்று பேர் மீது எர்ணாகுளம் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் போலீஸாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் கேட்டு நடிகை லட்சுமி மேனன் தரப்பில் கேரள உயர் நீதிமன்றத்தை நாடினார். இதை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பெச்சுகுரியன் தாமஸ், வரும் செப்டம்பர் 17-ம் தேதி வரை லட்சுமி மேனனை...
விமல் நடிக்கும், ஃபேமிலி காமெடி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் இயக்கத்தில், ஃபேமிலி காமெடி எண்டர்டெய்னராக உருவாகும் புதிய படத்தில் நடிகர் விமல் நாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் காரைக்குடியில் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், 45 நாட்களில் ஒரே கட்டமாக, படப்பிடிப்பை முடித்துள்ளது படக்குழு. மலையாளத் திரையுலகில் சமீபத்தில் வெளியாகி,...
பிரபல கன்னட நடிகரும் கலை இயக்குநருமான தினேஷ் மங்களூரு (வயது 63) உடல் நலக்குறைவால் காலமானார். யாஷின் ‘கேஜிஎஃப்’ படத்தில் மும்பை ரவுடியாக நடித்ததன் மூலம் பிரபலமான தினேஷ் மங்களூரு, கிச்சா, கிரிக் பார்ட்டி, ரிக்கி உள்பட பல கன்னடப் படங்களில் நடித்திருக்கிறார். அதற்கு முன் பல படங்களுக்கு கலை இயக்குநராகப் பணியாற்றி வந்தார். இவர், உடல்நலக் குறைவு காரணமாக, சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி உடுப்பி மாவட்டம் குண்டப்புராவில்...
பிரபல தெலுங்கு இயக்குநர் நாக் அஸ்வின், நானி நடித்த ‘எவடே சுப்ரமணியம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர், நடிகை சாவித்ரியின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து, ‘நடிகையர் திலகம்’ (மகாநடி) என்ற படத்தை இயக்கினார். இந்த படம், நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதைப் பெற்று தந்தது. இதையடுத்து பிரபாஸ், அமிதாப், கமல்ஹாசன் நடிப்பில் ‘கல்கி 2898 ஏடி’ படத்தை இயக்கினார். இந்தப் படம் ஆயிரம் கோடி வசூலித்தது....
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் ஹீரோவாக நடித்து வரும் படம், ‘த டாக்ஸிக்’. இதில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி என பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படம் ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிறது. ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர் ஜேஜே பெர்ரி, இதில் பணியாற்றுகிறார். இவர், ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’, ‘ஜான்விக்’ உள்பட பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ளார். ‘த டாக்ஸிக்’ படத்துக்கான ஆக்‌ஷன் காட்சிகளின் படப்பிடிப்பு மும்பையில்...
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம், ‘மதராஸி’. இதில் ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படம் செப்.5-ம் தேதி வெளியாகிறது. இதன் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன் பேசும்போது, “எனக்கு முருகதாஸ் படங்கள் மிகவும் பிடிக்கும். அவர் ஒரு பேட்டியில், ‘மதராஸி’ படத்தின் கதையை, ஷாருக்கானிடம் சொன்னதாகக் கூறியிருந்தார்....
எனது வேகமான வளர்ச்சிக்கு காரணமானவர் அஜித் சார் என்று ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அஜித்துடன் இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சிவா, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலானது. இந்தச் சந்திப்பு குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் அளித்த பேட்டியொன்றில், ”அஜித் சார் பிறந்த நாள் மற்றும் அவரது கார் ரேஸ் அணி வெற்றி இரண்டுக்குமான கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது. எனக்கு ‘தீனா’ படத்தின் மூலம் முதல் வாய்ப்பு வழங்கியவர்...
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ‘எல்.ஐ.கே’ மற்றும் ‘ட்யூட்’ ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இரண்டு படங்களின் வெளியீட்டிலுமே குழப்பம் நீடித்து வந்தது. முதலில் ‘ட்யூட்’ படமே தீபாவளிக்கு வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. தற்போது ‘எல்.ஐ.கே’ திரைப்படம் தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது....
மித்ரன் இயக்கத்தில் அடுத்ததாக இந்திப் படம் உருவாகும் என்று பாலிவுட் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ படத்தினை இயக்கி முடித்துள்ளார் மித்ரன். இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. எப்போது வெளியீடு என்பது இன்னும் முடிவாகவில்லை. இப்படத்தின் பணிகளை முடித்துவிட்டு அடுத்ததாக இந்திப் படமொன்றை இயக்கவிருப்பதாக தெரிகிறது. இதனை பாலிவுட் ஊடகங்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றன. ஷாபினா கான் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில் ‘ரவுடி ரத்தோர்...
விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் பணிபுரிய பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். ‘சர்கார்’ படத்துக்குப் பிறகு மீண்டும் சன் பிக்சர்ஸ் – விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து படம் பண்ண பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் கூறிய கதையும் விஜய்க்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. ஆனால், அப்போதைய சந்தை நிலவரம் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு, விஜய் – நெல்சன் இணைந்த ‘பீஸ்ட்’ படத்தை தயாரிக்க முடிவு...