திரைப்பட இயக்குநராகும் முயற்சியில் இருக்கிறார், சென்னையை சேர்ந்த குமரன் (குமரன் தங்கராஜன்). தயாரிப்பாளரை தேடி ஓய்ந்து போன அவர், தனது பூர்வீக வீட்டை விற்று, படம் எடுக்க முடிவெடுக்கிறார். இந்த நேரத்தில் வீட்டின் முதல் மாடியில் வசிக்கும் சமூக செயற்பாட்டாளர் வரதராஜன் ( இளங்கோ குமரவேல்) மர்மமாக இறந்து கிடக்கிறார். போலீஸ் விசாரணையில் குமரனும் சிக்குகிறார். வரதராஜனை கொன்றது யார்? குமரனின் சினிமா கனவு என்ன ஆனது என்பது...
ஹாட் ஸ்டாரில் வெளியான ‘ஹார்ட் பீட்’ வெப் தொடரில் குணா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சர்வா. இதன் மூலம் கவனிக்கப்பட்ட இவர், இப்போது சினிமாவில் நடித்து வருகிறார்.
அவர் கூறும்போது, “‘ஹார்ட் பீட்’ வெப் தொடரின் இரண்டு சீசனிலும் எனது குணா கேரக்டர் பேசப்பட்டது. இப்போது சினிமா படங்களிலும் நடித்துவரு கிறேன். அதர்வா நடிப்பில் வெளியாகும் ‘தணல்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
நல்ல கதாபாத்திரங்கள், அது எதிர்மறை கதாபாத்திரமாக இருந்தாலும்...
ஹனுமனின் கதையைச் சொல்லும் அனிமேஷன் படமாக ‘வாயுபுத்ரா’ உருவாகிறது. 3டி-யில் உருவாகும் இதைத் தெலுங்கு இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்குகிறார். மலைகளையே நகர்த்திய ஹனுமனின் வலிமை, ராமபிரான் மீது அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத பக்தி, நம்பிக்கை, தியாகம் ஆகியவை இந்தப் படத்தில் இடம் பெறுகின்றன.
இதை சித்தாரா என்டர்டெயின்மென்ட் சார்பில் நாக வம்சி, சாய் சவுஜன்யா, ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கிறது. கரா ஸ்டூடியோஸ் வழங்கும் இந்தப்...
விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், ரியா, மணிகண்டன், அபிஹாசன், அஞ்சு குரியன் என பலர் நடித்த படம், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’.
ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரித்த இந்தப் படம் 2022-ம் ஆண்டு வெளியாகி, பாராட்டுகளைப் பெற்றது. ரதன் இசையமைத்திருந்த இந்தப் படத்துக்கு மெய்யேந்திரன் கே ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படத்தை பிவிஆர் சினிமாஸ் ‘செப். 19-ம் தேதி மீண்டும் வெளியிடுகிறது. மறுவெளியீட்டிலும்...
கருமை அழகைப் போற்றும் விதமாக ‘ஈவா’ என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் பிரணாய் உருவாக்கிய இதன் பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். காதல், ஈர்ப்பு, அழகியல் ஆகியவை கருமையில் எவ்வாறு இருக்கின்றன என்பதையும் அந்த அழகை நேசிக்கும் ஆண்களின் பார்வையையும் இந்தப் பாடல் காட்சிப்படுத்துகிறது. பாடலின் ஒலி வடிவமைப்பு, கலவையை பஷாப் பட்டாசார்யா செய்துள்ளார். ‘ஈவா’ த்ரைவர் என்டர்டெயின்மென்ட் மற்றும் பா மியூசிக் இப்பாடலை வெளியிட்டுள்ளது....
பிருத்விராஜ் நடித்து 2024-ம் ஆண்டு வெளியான ‘ஆடுஜீவிதம்’ திரைப்படம் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. இதில் சிறப்பாக நடித்ததற்காக, பிருத்வி ராஜுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிடைக்காததால் சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் விருது கிடைக்காதது பற்றி பிருத்விராஜிடம் கேட்டபோது, “ஒரு 10 பேர் அமர்ந்து ஒரு படத்தைப் பார்த்து மதிப்பீடு செய்யவோ, அல்லது ஒரு ஜூரி படம் பற்றி தீர்மானிப்பதற்காகவோ திரைப்படங்கள் உருவாக்கப்படுவதில்லை. மக்களுக்காகவே உருவாக்கப்படுகின்றன. டிக்கெட்...
ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் கடந்த 2023 -ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘ஜெயிலர் 2’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் கவுரவ வேடத்தில் நடித்த சிலர் இதிலும் நடிக்கின்றனர். அவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்நிலையில் முதல் பாகத்தில் நடித்த சிவ ராஜ்குமார் தொடர்பான...
வ.கவுதமன் இயக்கி நடித்துள்ள படம், ‘படையாண்ட மாவீரா'. காடுவெட்டி குரு-வின் வாழ்க்கைக் கதையான இதில், சமுத்திரக்கனி, பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விகே புரொடக் ஷன்ஸ் சார்பில் நிர்மல் சரவணன்ராஜ், எஸ்.கிருஷ்ணமூர்த்தி இணைந்து தயாரித்துள்ளனர். சுஷ்மா சினிஆர்ட்ஸ் ஜி.என்.அழகர் இப்படத்தை செப்.19-ல்வெளியிடுகிறார். இதன், செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் தங்கர் பச்சான், நடிகர்ஏகன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து...
கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் சத்யன் என்ற பெயர் காணப்படுகிறது. பல வருடங்களுக்கு முன்னால் ஒரு இசைக் கச்சேரியில் அவர் பாடிய ‘காதலர் தினம்’ படத்தில் இடம்பெற்ற ‘ரோஜா ரோஜா’ பாடலின் காணொலி துணுக்கு எங்கு பார்த்தாலும் பகிரப்பட்டு வருகிறது. அதில் மேடையில் அநாயச தோரணையுடன் அவர் அந்தப் பாடலை பாடும் விதத்தை பலரும் சிலாகித்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலானதும் சமூக வலைதளங்களில்...
தமிழ் சினிமாவில் சமீப காலமாக அதிகமான திரைப் படங்கள் வெளியாகி வருகின்றன. இதனால் கடந்த ஆண்டை விட இந்த வருடம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்று தெரிகிறது. ஆக.14-ல் மெகா பட்ஜெட்டில் உருவான ரஜினியின் 'கூலி' வெளியானதால், அதற்கு முந்தைய வாரமும் அடுத்தடுத்த வாரங்களிலும் சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில் செப்.12-ம் தேதி 10 திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. அதன்படி, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள பிளாக்மெயில், அர்ஜுன் தாஸ்...










