அதிமுக ஆட்சியில் கூட ரெட் ஜெயண்ட் படம் தயாரிக்கவில்லையா என்ன என்று போஸ்ட் வெங்கட் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் உருவாகியுள்ள படம் ‘இரவின் விழிகள்’. சிக்கல் ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் தயாரிப்பாளர் மகேந்திரா, சிக்கல் ராஜேஷ், நீமா ரே, நிழல்கள் ரவி, அஸ்மிதா, கும்தாஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு...
கலைமாமணி விருது என்னுடைய மட்டுமல்ல, நம்முடையது என்று அனிருத் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. அதில் 2023-ம் ஆண்டுக்கான இசையமைப்பாளருக்கான கலைமாமணி விருது பெறவுள்ளார் அனிருத். இந்த விருது வென்றது குறித்து அனிருத் அறிக்கை ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அனிருத், ”மதிப்புமிக்க கலைமாமணி விருது எனக்கு வழங்கப்பட்டதை மிகுந்த தாழ்மையுடனும் பெருமையுடனும் ஏற்றுக் கொள்கிறேன். தமிழ்நாடு...
தெலுங்கு சினிமாத் துறையின் முன்னணி மாஸ் ஹீரோக்களில் ஒருவரும், ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாணின் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ஓஜி’. கடந்த 4 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த படம் ஒருவழியாக மிகப்பெரிய ஓபனிங் உடன் வெளியாகியுள்ளது. பவன் கல்யாணின் முந்தைய படமான ‘ஹரிஹர வீரமல்லு’ மிகப் பெரிய தோல்வியை தழுவிய சில நாட்களிலேயே வெளியாகியுள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
1970களில் ஜப்பானின் டோக்யோ நகரத்தில் இயங்கி...
சூப்பர் ஹீரோ கதையாக உருவாகும் ‘அதிரா’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். ‘ஆர்ஆர்ஆர்’, பவன் கல்யாண் நடித்து வெளிவர இருக்கும் ‘ஓஜி’ உள்பட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ள டிவிவி தனய்யாவின் மகன் கல்யாண் தாசரி, இந்தப் படம் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். ஆர்கேடி ஸ்டூடியோஸ் சார்பில் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கிறார்.
தெலுங்கில் உருவாகும் இந்தப் படம், தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. ‘ஹனுமன்’...
நடிகர் கவுதம் ராம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு பிரம்மாண்ட கோயில் செட் அமைக்கப்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படம் மூலம் நடிகராக அறிமுகமான கவுதம் கார்த்திக், தொடர்ந்து ‘என்னமோ ஏதோ’, ‘ரங்கூன்’, ‘இவன் தந்திரன்’ என பல படங்களில் நடித்தார். இப்போது தனது பெயரை கவுதம் ராம் கார்த்திக் என மாற்றியுள்ள அவர் நடிக்கும் படத்தை, கே.ஆர்.ஜி.கண்ணன் ரவி தயாரிக்கிறார். தீபக் ரவி இணை தயாரிப்பு செய்கிறார். இன்னும்...
நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், 'கல்கி 2898 ஏடி'. கமல்ஹாசன் வில்லனாக நடித்திருந்தார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்த இந்தப் படத்தின் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், 2-ம் பாகத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டுள்ளார்.
குறைவான பணி நேரம், 25 சதவீத சம்பள உயர்வு, அவருடைய குழுவினருக்கான தங்குமிடம் ஆகியவற்றில் தயாரிப்பு தரப்புக்கும்...
பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன். இவருடைய மேலாளராக இருந்த விபின் குமார் என்பவர், காக்கநாடு இன்ஃபோபார்க் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த சில மாதங்களுக்கு முன், புகார் அளித்திருந்தார்.
அதில், டோவினோ தாமஸின் ‘நரிவேட்டை’ படத்தைப் பாராட்டி, முகநூலில் பதிவிட்டிருந்தேன். இதனால் கோபமடைந்த உன்னி முகுந்தன், தன்னைத் தாக்கியதாகவும் ‘மார்கோ’ படத்துக்குப் பிறகு அவருக்குச் சரியான வாய்ப்புகள் அமையாததால் விரக்தியில் இப்படிச் செய்ததாகவும் கூறியிருந்தார். இது பரபரப்பானது. இதை உன்னி...
இதுவரை 8 ‘ஸ்பைடர் மேன்’ திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதில், டாம் ஹாலண்ட் நடித்து ‘ஸ்பைடர் மேன்: ஹோம் கமிங்' , ‘ஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம் ஹோம்’, ‘ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்’ ஆகிய 3 படங்கள் வெளியாகியுள்ளன.
இப்போது அவர் நடிப்பில் 4-வது படம் உருவாகிறது. ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இதன் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில்...
நடிகர் சங்க உறுப்பினர்கள் குறித்து அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை: பொதுக்குழுவில் தீர்மானம்
admin - 0
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69-வது பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, பொதுச்செயலாளர் விஷால், துணைத் தலைவர்கள் பூச்சி எஸ்.முருகன், கருணாஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் மறைந்த நடிகர்கள் டெல்லி கணேஷ், சரோஜாதேவி, ராஜேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தேசிய விருது பெற உள்ள ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர்,...
நட்டி, அருண் பாண்டியன் இணைந்து, முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘ரைட்’. ‘பிக் பாஸ்’ அக்ஷரா ரெட்டி, வினோதினி, மூணாறு ரமேஷ், டைகர் தங்கதுரை, உதய் மகேஷ், முத்துராமன், ரோஷன் உதயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினா பார்கவி, இதில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார். நடிகை அனுபமா குமாரின் மகன் ஆதித்யா ஷிவக் அறிமுகமாகிறார்.
சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கியுள்ளார். ஆர்டிஎஸ் பிலிம் பேக்டரி...






