Google search engine
வ.கவுதமன் இயக்கி நடித்துள்ள படம், ‘படையாண்ட மாவீரா'. காடுவெட்டி குரு-வின் வாழ்க்கைக் கதையான இதில், சமுத்திரக்கனி, பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விகே புரொடக் ஷன்ஸ் சார்பில் நிர்மல் சரவணன்ராஜ், எஸ்.கிருஷ்ணமூர்த்தி இணைந்து தயாரித்துள்ளனர். சுஷ்மா சினிஆர்ட்ஸ் ஜி.என்.அழகர் இப்படத்தை செப்.19-ல்வெளியிடுகிறார். இதன், செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் தங்கர் பச்சான், நடிகர்ஏகன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து...
கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் சத்யன் என்ற பெயர் காணப்படுகிறது. பல வருடங்களுக்கு முன்னால் ஒரு இசைக் கச்சேரியில் அவர் பாடிய ‘காதலர் தினம்’ படத்தில் இடம்பெற்ற ‘ரோஜா ரோஜா’ பாடலின் காணொலி துணுக்கு எங்கு பார்த்தாலும் பகிரப்பட்டு வருகிறது. அதில் மேடையில் அநாயச தோரணையுடன் அவர் அந்தப் பாடலை பாடும் விதத்தை பலரும் சிலாகித்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலானதும் சமூக வலைதளங்களில்...
தமிழ் சினிமாவில் சமீப காலமாக அதிகமான திரைப் படங்கள் வெளியாகி வருகின்றன. இதனால் கடந்த ஆண்டை விட இந்த வருடம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்று தெரிகிறது. ஆக.14-ல் மெகா பட்ஜெட்டில் உருவான ரஜினியின் 'கூலி' வெளியானதால், அதற்கு முந்தைய வாரமும் அடுத்தடுத்த வாரங்களிலும் சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகவில்லை. இந்நிலையில் செப்.12-ம் தேதி 10 திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. அதன்படி, ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள பிளாக்மெயில், அர்ஜுன் தாஸ்...
தென்னிந்திய இயக்குநர்கள் பாலிவுட்டில் படம் இயக்குவது பற்றி இன்று பெருமையாகப் பேசுகிறோம். ஆனால், 1940-களில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் படங்கள் இயக்கிய முதல் இயக்குநர், ஒய்.வி.ராவ் என்றழைக்கப்படும் எறகுடிப்பட்டி வரத ராவ். அவர் காலத்தில் இது பெரிய சாதனை. அவர் தமிழில் இயக்கிய படங்களில் ஒன்று, ‘சாவித்திரி’. மகாபாரதத்தில் வரும் ‘சத்யவான் சாவித்திரி’ கதைதான். துயுமத்சேனன் என்னும் சால்வ நாட்டு மன்னன் போரில் தோல்வியடைந்து,...
முதன்முதலில் இப்படத்தின் டீசர் வெளியான போதே இப்படம் குறித்த சர்ச்சைகளும் சமூக வலைதளங்களில் தீயாய் எரியத் தொடங்கிவிட்டது. குறிப்பிட்ட சமூக உணர்வுகளை புண்படுத்துவதாகவும், பதின்பருவ பிள்ளைகள் மனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி எனவும் இப்படத்துக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. நீதிமன்றம் வரை சென்று சென்சாரில் பல ‘கட்’களை பெற்று ஒருவழியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது ‘பேட் கேர்ள்’. கதை நாயகியான ரம்யா (அஞ்சலி சிவராமன்) என்ற பெண்ணின் வாழ்க்கையின் மூன்று பருவங்களை,...
பிரபல பாடலாசிரியர் பூவைச் செங்குட்டுவன் (90) சென்னையில் காலமானார். சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடியைச் சேர்ந்த, பூவை செங்குட்டுவன், 1967-ம் ஆண்டு முதல், திரைப்பாடல்கள் எழுதி வந்தார். ஆயிரத்துக்கு அதிகமான திரைப் பாடல்களை எழுதியுள்ள இவர், பக்தி பாடல்கள் உள்பட 4 ஆயிரத்துக்கும் அதிகமான தனிப் பாடல்களையும் எழுதி உள்ளார். எம்.ஜி.ஆரின் ‘புதிய பூமி’ படத்தில் இடம்பெறும், ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை’, அகத்தியர் படத்தில் ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை’, ராஜராஜ சோழன்...
‘அங்காடித் தெரு’ மகேஷ், குணா பாபு, கே.எம்.பாரி வள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ள படம், ‘தடை அதை உடை’. நாகராஜ், டெல்டா சரவணன், ஆம்பல் சதீஷ், எம்.கே.ராதாகிருஷ்ணன், வேல்முருகன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சாய் சுந்தர் இசையமைத்துள்ளார். தங்கப்பாண்டியன், சோட்டா மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். காந்திமதி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை எழுதி இயக்கியுள்ள அறிவழகன் முருகேசன் கூறும்போது, “1990-க்கு முன் பட்டுக்கோட்டையில் கொத்தடிமையாக...
தமிழகத்தில் துப்பாக்கிக் கலாச்சாரத்தைக் கொண்டு வர, வட மாநிலத்தைச் சேர்ந்த விராட் (வித்யுத் ஜம்வால்), சிராக் (சபீர் கல்லரக்கல்) தலைமையில் ஒரு கூட்டம் திட்டமிடுகிறது. தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) பிரேம் (பிஜூ மேனன்), தலைமையில் ஒரு குழு, அதைத் தடுக்க முயற்சிக்கிறது. இதில் காதல் பிரச்சினையால் தற்கொலைக்கு முயலும் ரகு (சிவகார்த்திகேயன்) என்ஐஏ வட்டத்துக்குள் வருகிறார். அவருடைய உயிரை பணயம் வைத்து துப்பாக்கிக் கடத்தல் கும்பலை அழிக்க,...
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை இயக்கிய விவேக் அக்னிகோத்ரி, இப்போது ‘த பெங்கால் ஃபைல்ஸ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், தர்ஷன் குமார், பல்லவி ஜோஷி என பலர் நடித்துள்ளனர். செப்.5-ல் வெளியாக இருக்கும் இந்தப் படம், 1946-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில், நவகாளி மாவட்டத்தில் நடந்த மதக் கலவரத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இதனால் இந்தப் படத்துக்கு அம்மாநிலத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. படத்தை...
ரஜினியின் ‘கூலி’ படம் மூலம் தமிழிலும் அறிமுகமானவர் மலையாள நடிகர், சவுபின் சாஹிர். இவர், 'மஞ்சும்மள் பாய்ஸ்' மூலம் மற்ற மொழிகளிலும் பிரபலமானார். இந்தப் படத்தை ஷான் ஆண்டனியுடன் இணைந்து சவுபின் சாஹிர் தயாரித்தார். இந்நிலையில் இந்தப் படத்துக்கு, ரூ.7 கோடி முதலீடு செய்ததாகவும் படத்தின் லாபத்தில் 40% பங்கு தருவதாகக் கூறி, தயாரிப்பாளர்கள் ஏமாற்றி விட்டதாகவும் கேரள மாநிலம் அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் வழக்குத்...