Google search engine
“வடக்கன் என்கிற வெறுப்பு மனநிலையில் செயல்படுவது சமூக சீர்குலைவிற்கே வழிவகுக்கும். வடக்கன் என்ற மனநிலை மிகவும் ஆபத்தான போக்காகும்” என திருத்தணி சம்பவம் குறித்து திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘திருவள்ளுர் மாவட்டம், திருத்தணியில் நடந்த மனிதமற்ற கொடூர செயலை கண்டு நெஞ்சம் பதறுகிறது. அண்மைக் காலமாகத் தமிழகத்தில் அதிகரித்துவரக் கூடிய போதைப் பொருள் கலாச்சாரத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சியாளர்களுடைய மெத்தனப்...
கதை​யின் நாயகர்​களாக ராதா ரவி, ரவி மரியா நடிக்​கும் படத்​தை, ‘பழகிய நாட்​கள்’, ‘மூன்​றாம் மனிதன்’ ஆகிய திரைப்படங்களைத் தயாரித்​து, இயக்​கிய ராம்​தேவ் இயக்குகிறார். கஞ்சா கருப்​பு, இயக்​குநர் பேரரசு, நிழல்​கள் ரவி, பழ.கருப்​பை​யா, நாஞ்​சில் சம்​பத் உள்​ளிட்ட பலர் இதில் நடிக்​கின்​றனர். கார்த்​திக் நாயர் ஒளிப்​ப​திவு செய்​யும் இப்​படத்​தைக் கண்​ணகி மைந்​தன் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்​கிறது. இப்​படம் பற்றி இயக்​குநர் கூறும்​போது, ”இது அரசி​யல் நையாண்டி, காமெடி திரைப்​படம். சமூகத்​துக்​குத்...
சிந்தியா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகை சிந்தியா லூர்டே தயாரித்து, ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படம், ‘அனலி’. அறிமுக இயக்குநர் தினேஷ் தீனா எழுதி இயக்கியுள்ள திரைப்படத்தில், சக்தி வாசுதேவன், குமரவேல், இனியா, கபிர் துகான் சிங், அபிஷேக் வினோத், ஜென்சன் திவாகர் உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் சிந்தியா லூர்டே கூறும்போது, “‘வர்ணாஸ்ரமம்’, ‘தினசரி’ படங்களுக்குப் பிறகு 'அனலி' என்னுடைய மூன்றாவது தயாரிப்பு. இந்த படத்தில் நானே நாயகியாகவும் நடித்திருக்கிறேன்....
லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு எல்லைப் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு இந்திய- சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பும் ஒருவரை ஒருவர் கட்டையாலும், இரும்புக் கம்பிகள் மற்றும் கற்களாலும் தாக்கிக்கொண்டனர். முந்தைய ஒப்பந்தங்கள் காரணமாகத் துப்பாக்கி மோதலில் ஈடுபடவில்லை. இம்மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தனர். சீன தரப்பில் 38 பேர் கொல்லப்பட்டதாக ஆஸ்திரேலிய பத்திரிகை செய்தி வெளியிட்டது. இந்த மோதல்...
தவறாக அடையாளம் காட்டப்பட்டதால் ஒரு நிரபராதியின் மொத்த குடும்பமும் சிதைந்து போவதுதான் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கின் ‘த ராங் மேன்- 1956’ திரைப்படத்தின் ஒருவரிக் கதை. நியூயார்க் நகரின் ஸ்டார்க் கிளப்பில் ‘ஸ்ட்ரிங் பேஸ்’ இசைக் கருவியை வாசிக்கும் கலைஞன், கிறிஸ்டோபர் இமானுவேல் மேனி பேலெஸ்ட்ரேரோ, கச்சேரியை முடித்துவிட்டு ஒரு ரயிலில் பயணிக்கிறான். கையில் இருக்கும் பேப்பரில், ரேஸ் பகுதியை வட்டமிடுகிறான். வீட்டுக்கு வந்தால் மனைவியும், இரு மகன்களும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்....
அறிமுக இயக்​குநர் பி.​நா​ராயணன் இயக்​கி​யுள்ள அனிமேஷன் படம், ‘கிகி அண்ட் கொகொ’. இனிகா புரொடக் ஷன்ஸ் வழங்​கும் குழந்​தைகளுக்​கான இந்​தி​யா​வின் முதல் அனிமேஷன் படம் இது. இந்​தப் படத்​தின் டீஸர் வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடைபெற்​றது. விழா​வில் இயக்​குநர் நாராயணன் பேசும்​போது, “ஸ்​பைடர்​மேன் பறப்​பது, ஹீமேன் அடிப்​பது என நிஜத்​தில் நடக்​காத பல ஃபேன்​டசி விஷ​யங்​களைத்​தான் குழந்​தைகளுக்கு சினி​மா​வில் அறிமுகப்​படுத்​து கிறோம். நடை​முறை​யில் என்ன நடக்​கிறது என்பதை இந்தப் படத்​தில் காட்​டி​யுள்​ளோம்....
பிரபல சின்னத்திரை நடிகை நந்தினி பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மற்றும் கன்னடத்தில் பிரபல சீரியல் நடிகையாக இருந்தவர் நந்தினி. பெங்களூருவில் தங்கியிருந்து சீரியல்களில் நடித்து வந்த இவர், இன்று (டிசம்பர் 29) கெங்கேரியில் உள்ள தனது ஹாஸ்டலில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். ஆந்திர மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த நந்தினி, பெங்களூருவில் பொறியியல் படிப்பில் சேர்ந்தார். ஆனால், நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு,...
​நாங்​கள் சென்னை ராயப்​பேட்டை அம்​மையப்ப முதலி தெரு​வில் குடி​யிருந்த போது (நான் பொறுப்​பற்​று, ரவுடித்​தன​மாக திரிந்து கொண்​டிருந்த போது) அதே தெரு​வில் குடி​யிருந்​தவர் நாராயண ஐயர் என்​கிற மோதிரம் நாராயணன். நாம் பழகிய சில கதா​பாத்​திரங்​களை வாழ்​வில் மறக்க முடி​யாது. சிலர் முற்​றி​லும் வித்​தி​யாச​மாக இருப்​பார்​கள். இவர்​கள் ஏன் இப்​படி இருக்​கிறார்​கள்? என்று நமக்கு தோன்​றும். அவர்​களிடம் கேட்​டால், ‘நான் நன்​றாகத்​தான் இருக்​கிறேன். எனக்​கென்ன குறைச்​சல்’ என்​பார்​கள். அது போல்​தான்...
விஜய் நடித்துள்ள ’ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். ஜன. 9 -ல் வெளியாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் விஜய் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். மலேசிய நிகழ்ச்சியை முடித்துவிட்டு விஜய், நேற்று முன் தினம் இரவு சென்னை திரும்பினார். அவரை வரவேற்க ரசிகர்கள், தொண்டர்கள் என பலர் திரண்டிருந்தனர். அவர்களுக்கு கைகாட்டிவிட்டு தனது காரில் விஜய் ஏற முயன்றார். அப்போது, அவருடன்...
வெங்கட்பிரபு படத்தில் சிவகார்த்திகேயன் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் என தெரிகிறது. இதற்கு இசையமைப்பாளர் அனிருத்தா அல்லது யுவனா என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இதனிடையே இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இதில் படப்பிடிப்புக்கான தேதிகள்...