ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ படம், சூப்பர் ஹிட்டானது. இதற்கிடையே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் அவர் நடித்துவருகிறார். இதை யடுத்து, சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கிறார், சிவகார்த்திகேயன். அவரது 25-வது படமான இதில் ஜெயம் ரவி வில்லனாகவும் ஸ்ரீலீலா நாயகியாகவும் நடிக்கின்றனர். அதர்வா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பூஜை,...
பல ஆண்டுகளாக கோமாவில் இருந்த ஆளுங்கட்சி நிறுவனரான கண்ணபிரானுக்கு (வாகை சந்திரசேகர்) திடீரென நினைவு திரும்புகிறது. ஊழல்வாதியான (சத்யசீலன்) ராதாரவி முதல்வராக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். தனது விசுவாசியும் நேர்மையானவருமான ஞானோதயத்தின் (எம்.எஸ்.பாஸ்கர்) மகன் அமைச்சர் அருமை பிரகாசம் (கருணாகரன்) ஊழலில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். சத்யசீலனுக்கு எதிராகக் கட்சி ஆரம்பிக்கிறார் கண்ணபிரான். ஆனால், ‘கேம் ஆப்’ மூலமாக மக்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளை அள்ளலாம்...
முன்னாள் ரவுடியான ராஜாவின் (பரத்) காதல் மனைவி சிறுநீரக பிரச்சினை காரணமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். அவரைக் காப்பாற்ற ரூ.15 லட்சம் தேவைப்படுகிறது. தூய்மை பணியாளரான சாவித்திரி (அபிராமி) திருநங்கையாகிவிட்ட தனது மகனின் மருத்துவப் படிப்புக்கு வாங்கிய கடனுக்காகப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார். திருமணமாகி கணவன் வீட்டுக்கு வரும் அஞ்சலி நாயருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. சாதி வெறியரான நாதன் (தலைவாசல் விஜய்), தன் மகள் அனிதா (பவித்ரா) வேறு...
ரோபோ சங்கர் கதையின் நாயகனாக நடிக்கும் படம், ‘அம்பி’. அவர் ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார். ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, மோகன் வைத்யா உட்பட பலர் நடித்துள்ளனர். வெற்றிவேல் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.பி. முரளிதரன் இசையமைத்துள்ளார். டி2 மீடியா சார்பில் எஃப். பிரசாந்தி பிரான்சிஸ் தயாரித்துள்ள இந்தப்படத்தை, பாஸர் ஜே எல்வின் தயாரித்துள்ளார். அவர் கூறும்போது, “இது ‘ஃபேமிலி டிராமா’ கலந்த காமெடி படம்....
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மோகன் பாபு. இவர் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது முதல் மனைவி வித்யா தேவியின் மறைவுக்கு பிறகு அவரது தங்கை நிர்மலா தேவியை மோகன் பாபு திருமணம் செய்தார். இவர்களுக்கு மஞ்சு மனோஜ் என்ற மகன் உள்ளார். நடிகர் மோகன் பாபுவுக்கு ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. சொத்து விவகாரம் தொடர்பாக மோகன் பாபுவுக்கும் மஞ்சு மனோஜுக்கும் இடையே பிரச்சினை...
உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவுக்கு மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நுரையீரல் பிரச்சினை காரணமாக அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்றுவந்த ஜாகிர் உசேன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து...
நடிகர் ரஜினிகாந்த் தனது 74-வது பிறந்தநாளை, ஜெய்ப்பூரில் நடக்கும் கூலி படப்பிடிப்பில் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு முதல்வர், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், அங்கு படக்குழுவினருடன் சேர்ந்து கேக் வெட்டி தனது 74-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவரது பிறந்தநாளையொட்டி வழக்கம்போல் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்துக்கு ரசிகர்கள் பலர்...
‘நானும் ரவுடிதான்’ படக் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் தொடர்ந்த வழக்கில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண நிகழ்வை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஆவண படமாக தயாரித்தது. நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிப்பில், நயன்தாரா நடித்து,...
சில சினிமாக்கள்தான், படம் வெளியாவதற்கு முன்பாகவே மக்கள் மத்தியில் மிகப் பிரமாண்டமான எதிர்பார்ப்பை உருவாக்கும். அதற்குப் பல காரணங்கள் இருப்பினும் பகுத்தறிய முடியாத காரணங்களும் அதன் பின்னால் தொழிற்படுகின்றன. ஏற்கெனவே சூப்பர் ஸ்டாராகியிருந்த ரஜினியை ஒரு கடவுள் உருவாக மாற்றிய ‘தளபதி’ படத்துக்கும் அப்படியான எதிர்பார்ப்பு படம் வருவதற்கு முன்பே உருவாகியிருந்தது. மகாபாரதக் கதையைச் சமகாலக் கதையாக மாற்றியுள்ளார் மணிரத்னம் என்ற செய்தி முன்பே வெளியானது. ரஜினி கர்ணன் என்றும்,...
மோகன்லால் இயக்கி நடிக்கும் ‘பரோஸ்’ திரைப்படம் டிசம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மோகன்லால் இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘பரோஸ்’. ஃபேன்டஸி கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். அந்தோணி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். குழந்தைகளைக் கவரும் விதமாக 3டி-யில் உருவான இந்தப் படம் பான் இந்தியா...