Google search engine
“சரியான முறையில் விமர்சனம் செய்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை. அதை விடுத்து தரமற்ற முறையில் செய்யப்படும் விமர்சனங்களால், தொடர்ந்து திரைத் துறை மற்றும் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதால்தான் எதிர்ப்பு குரல் எழுப்பப்படுகிறது. திரையரங்குகளுக்கு வெளியே ரசிகர்கள் விமர்சனத்தை எங்களால் தடுக்க முடியாது என்றாலும், சட்ட ரீதியாக இந்த பிரச்சினையை அணுக உள்ளோம்” என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். எதிர்மறை விமர்சனங்களால் ‘கங்குவா’ திரைப்படம் கடும்...
மாநாட்டில் விஜய் பேசியதைப் பார்த்து பிரமித்துவிட்டேன் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சி தெரிவித்திருக்கிறார்.அக்டோபர் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. இதில் விஜய்யின் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. விஜய்யின் பேச்சு குறித்து அவரது தந்தை எஸ்.ஏசி, “மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார். நான் இப்படி பேசுவார் என நினைக்கவே இல்லை. அரண்டு போய்விட்டேன். என் மகனின் வேகத்தை அன்று தான்...
கரு.பழனியப்பன் தனது கல்லூரிக் கால நண்பரும் சக இயக்குநருமான சீனு ராமசாமியின் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தை முன்வைத்து அவருக்கான கடிதம் ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார். தியேட்டர்களில் எடுபடாத இந்தப் படத்தை அண்மையில் ஓடிடி-யில் பார்த்துவிட்டு திரைத் துறைப் பிரபலங்கள் பாராட்டி எழுதி வருகின்றனர். இதனைச் சுட்டிக்காட்டியிருக்கும் கரு. பழனியப்பன், ‘உங்களை பலரும் பாராட்டுவதில் எனக்கும் மகிழ்ச்சியே. ஆனால், ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ போல, குறைகளோடு கூடிய படைப்பை கோபுரத்தின் மேல் வைத்து...
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் நுரையீரல் பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல மலையாள நடிகர் மேகநாதன் இன்று காலமானார். அவருக்கு வயது 60. தேசிய விருது பெற்ற மூத்த மலையாள நடிகர் பாலன் கே நாயரின் மகன் மேகநாதன். இவர் கடந்த 1983-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘அஸ்திரம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது வில்லன்...
தன்னுடைய ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள காட்சிகளுக்கு, கேட்டதும் தடையில்லா சான்றிதழ் வழங்கிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு நடிகை நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படம்‌ வெளியாகி இருக்கிறது. பல்வேறு மகிழ்வான தருணங்கள்‌ அடங்கிய எனது திரைப்‌ பயணத்தில்‌, நாம்‌ இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள்‌ மிகவும்‌ இன்றியமையாதது. அதனால்‌, அந்த படங்கள்‌ குறித்த நினைவுகளும்‌, ஆவணப்படத்தில்‌ இடம்பெற வேண்டும்‌ என...
ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவைச் சேர்ந்த பிரபல பேஸ் கிட்டாரிஸ்ட் மோஹினி தே தனது கணவர் மார்க் ஹார்ட்சச் (Mark Hartsuch)-ஐ பிரிவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “அன்பான நண்பர்கள், குடும்பத்தினர், ரசிகர்கள், ஃபாலோயர்ஸ்களுக்கு நானும் மார்க்கும் பிரிந்துவிட்டோம் என்பதை கனத்த இதயத்துடன் அறிவிக்கிறோம். இது நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த பரஸ்பர முடிவு. நாங்கள் சிறந்த நண்பர்களாக இருப்போம். இருவருக்கும் வாழ்க்கையில் வெவ்வேறு...
நடிகர் கிருஷ்ணா தயாரித்து, நடித்துள்ள வெப் தொடர், ‘பாராசூட்'. ஹாட் ஸ்டார் தளத்தில் வரும் 29-ம் தேதி வெளியாகும் இந்த தொடரில், கிஷோர், கனி, காளி வெங்கட், சரண்யா ரவிச்சந்திரன், பாவா செல்லதுரை உட்பட பலர் நடித்துள்ளனர். இரண்டு இளம் சிறார்களின் உலகைப் பற்றியதாக உருவாகியுள்ளது இந்த வெப் தொடர். குழந்தைகளின் மீது அன்பு வைத்திருக்கும் பெற்றோர்கள், அவர்கள் நன்றாக வளர வேண்டு மென கண்டிப்பு காட்டுகிறார்கள். இருவரும் பெற்றோருக்குத்...
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் க்ரைம் திரில்லர் படம் ‘லாரா’. மணி மூர்த்தி இயக்கியுள்ளார். எம்.கே. ஃபிலிம் ஒர்க்ஸ் சார்பில் கார்த்திகேசன் தயாரித்துள்ளார். அசோக்குமார், அனு ஸ்ரேயா ராஜன், மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, வெண்மதி, தயாரிப்பாளர் கார்த்திகேசன் என பலர் நடித்துள்ளனர். ஆர்.ஜே.ரவீன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ரகு ஸ்ரவன் குமார் இசை அமைத்துள்ளார். இதன் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் இயக்குநர் சங்கத்...
பாலா இயக்​கத்​தில் அருண் விஜய் நடித்​துள்ள படம், ‘வணங்​கான்’. ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்​திரக்கனி உட்பட பலர் நடித்​துள்ளனர். தனது வி ஹவுஸ் புரொடக் ஷன்ஸ் சார்​பில் சுரேஷ் காமாட்சி தயாரித்​துள்ளார். அருண் விஜய்​யின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்​தின் ரிலீஸ் தேதியை படக்​குழு வெளி​யிட்​டுள்​ளது. அதன்படி பொங்கல் அன்று வெளியாக இருக்​கிறது. இந்தப் படத்தை, தனது குடும்பத்​தினருடன் அருண் விஜய் சமீபத்​தில் பார்த்​தார். கிளை​மாக்ஸ் முடிந்​ததும் அவருடைய குடும்பத்​தினர்...
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்வதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இது தொடர்பாக சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “பல ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தன்னுடைய கணவர் ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து பிரியும் கடினமான முடிவை சாய்ரா எடுத்துள்ளார். அவர்களுடைய உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உணர்வுரீதியான அழுத்தத்துக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் மீது ஒருவர் அவர்கள் ஆழமான அன்பை வைத்திருந்தாலும், பதட்டங்களும் சிரமங்களும்...