இந்தியில் உருவான ஹாரர் த்ரில்லர் படம், ‘ராகினி எம்எம்எஸ்’. காமெடியுடன் கூடிய இந்தப் படத்தின் முதல் இரண்டு பாகங்கள் வெற்றி பெற்றதை அடுத்து, இதன் மூன்றாம் பாகம் தற்போது உருவாகிறது. இதற்கு ‘ராகினி 3' என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இதில் தமன்னா நாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் அமீர் கானின் மகன் ஜுனைத் கான் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை சாஹிர் ராசா இயக்குவார் என்று முதலில் கூறப்பட்டது.
இப்போது ஷஷாங்கா கோஷ் இயக்குவார்...
சினிமாவில், பார்வையாளரின் இதயத்தோடு நேரடியாக இணைக்கும் பாலம் ‘க்ளோஸ்-அப்’ ஷாட்டுகள். பிரம்மாண்ட திரையில், ஒரு மனித முகம் மட்டும் ஆக்கிரமித்திருக்கும் அந்த சில நொடிகள், ஆயிரம் பக்கவசனங்கள் சொல்லாத உண்மைகளைச் சொல்லிவிடும். இது பார்வையாளரை கதாபாத்திரத்தின் அகவுலகத்துக்குள் அழைத்துச் செல்லும் உணர்ச்சிப் பாலம்.
க்ளோஸ்-அப்பின் வரையறை: சூழலில் இருந்து மனநிலைக்கு: தொழில்நுட்ப ரீதியாக, தோள்பட்டைக்கு மேல் முகம் மட்டும் தெரியும் காட்சியே க்ளோஸ்-அப் எனப்படும். ஆனால், கலைரீதியாக இது ‘சூழலைத் துண்டித்து...
மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆழி’. இதில் சரத்குமார், இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்துள்ளார்.
பிப்.27-ல் வெளியாகும் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் ரவி கொட்டாரக்கரா, இயக்குநர் உதய சங்கரன்,...
‘ப்ரோ கோட்’ படத் தலைப்பு விவகாரத்தில் ரவி மோகன் ஸ்டூடியோஸ் மற்றும் டெல்லியைச் சேர்ந்த மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு இடையே விரைவில் சமரச ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரவி மோகன் தயாரித்து நடிக்கும் ‘ப்ரோ கோட்’ (Bro Code) திரைப்படம் இந்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது. கார்த்திக் யோகி இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்தப்...
என்கவுன்ட்டர் போலீஸ் அதிகாரியாக வெற்றி நடித்துள்ள படம் ‘பரீட்’. நாயகிகளாக அக் ஷிதா, சாந்தினி தமிழரசன் நடிக்கின்றனர். பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவண சுப்பையா, ஜென்சன் திவாகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜான் ராபின்ஸ் இசையமைக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை கே.வி.கிரண் கவனிக்கிறார். ட்ரீம் ஹவுஸ் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் சார்பில் ஹாரூன், மஹேந்தர் குமார் தயாரித்துள்ளனர். ‘வெப்’ படத்தை இயக்கிய ஹாரூண் இந்த படத்தின் கதை எழுதி, இயக்கியுள்ளார்....
சுகா இயக்கத்தில், இசக்கி கார்வண்ணன் தனது லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து நடிக்கும் படத்துக்கு ‘சைலப்பன் சைக்கிள் மார்ட்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இதில் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, மூணார் ரமேஷ், இயக்குநர் சுப்ரமணிய சிவா, பூஜா மோகன்ராஜ், கதா நந்தி, சுர்ஜித் கோபிநாத், வித்யா விஜயகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கிறார். மார்ட்டின் டான்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
“தென் தமிழகத்துக் கிராமம், அங்கு வாழும் மனிதர்கள் மற்றும்...
கேப்டன் விஜயகாந்த் என் அம்மா போன்றவர் என்றும் அவரை சந்தித்தது பற்றியும் கடந்த வாரம் கூறியிருந்தேன். ஷூட்டிங் வந்தால் அவர் சேரில் உட்காரமாட்டார். ஸ்டூலில்தான் நிமிர்ந்து அமர்வார். மற்றவர்களுக்கு சாப்பாடு போட்டு அழகு பார்ப்பதில் அவருக்கு அலாதி ஆனந்தம். அவருடன் அப்போது, நெறஞ்ச மனசு, தர்மபுரி, எங்கள் அண்ணா ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன்.
படப்பிடிப்பில் நான் எங்காவது தூரத்தில் இருந்தால், “ஏய் பாஸ்கர், அங்க என்ன பண்ற? இங்க வா”...
ராஜுமுருகன் இயக்கத்தில், சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம், ‘மை லார்ட்’. சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், கோபி நயினார், வசுமித்ர உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். பிப். 13 -ல் வெளியாகும் இப்படத்தின் செய்தியாளார்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
சசிகுமார் பேசும்போது, ” இந்த படம் கோர்ட்டை மையமாக கொண்ட...
கடந்த காலத்தில் உணர்ந்து கடந்து வந்த காதலை, நிகழ்காலத்தில் அசைபோட்டுப் பார்க்கும் படங்களைக் காண்பது எப்போதும் ஜீலீர் அனுபவம். காதல் என்கிற சாகா உணர்வை அசைத்துப் பார்க்கும் விதமாக, ஒரு மீள் சந்திப்பில் உணர்வுபூர்வமான மோதலை அதனோடு நிகழ்த்தும் கதைக் களம் கொண்ட படங்கள், சி.வி.ஸ்ரீதரின் ‘கல்யாணப் பரிசு’ படக் காலத்திலிருந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன.
80கள் தலைமுறையின் பள்ளிக் காதல் வாழ்க்கையை ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படமும், 90கள் தலைமுறையின் காதல்...
தவெக தலைவர் நடிகர் விஜய் நடித்துள்ள கடைசிப் படம் ‘ஜனநாயகன்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவது தொடர்பான வழக்கை மீண்டும் முதலில் இருந்து முழுமையாக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இந்த சூழலில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ், தணிக்கை வாரியத்திற்கு எதிராக சென்னை...

