Google search engine
ரஜினி நடித்து வரும் ‘கூலி’ படத்தை மே 1-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025-ம் ஆண்டு வெளியாகவுள்ள படங்களின் வெளியீட்டு தேதிகள் முடிவு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது ‘கூலி’ படத்தை மே 1-ம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறது. இதற்கான அறிவிப்பை தங்களது விநியோகஸ்தர்களுக்கு தெரிவித்திருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன்...
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டீசர் எப்படி? - இந்தப் படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார் கார்த்தி. மொத்த டீசரும், இசையிலேயே நகர்கிறது. ஆனந்த் ராஜுக்கான ‘எம்ஜிஆர்’ கெட்டப், சத்யராஜின் வித்தியாசமான தோற்றம், எம்ஜிஆர் ரசிகராக ராஜ்கிரண் என கதாபாத்திரங்கள் கவர்கின்றன. இடையில் நம்பியார் ரெஃபரன்ஸ் வந்து செல்கிறது. கீர்த்தி ஷெட்டி தலையை காட்டி...
விமல், கருணாஸ் நடித்து கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான படம், ‘போகுமிடம் வெகு தூரமில்லை’. மைக்கேல் கே ராஜா இயக்கிய இந்தப் படம் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டது. ஓடிடி-யில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை அடுத்து, புதிய படத்துக்கான கதை விவாதத்தில் இருக்கிறார், இயக்குநர் மைக்கேல் கே ராஜா. அவர் கூறும்போது, “ஒரு நல்ல படம் மக்களைக் கண்டிப்பாகப் போய்ச் சேரும் என்பதற்கு இந்தப் படம் சிறந்த உதாரணம்....
97-வது ஆஸ்கர் விருது விழா, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கிறது. இந்த விருதின் சிறந்த வெளிநாட்டுப் படப் பிரிவுக்கு இந்தியா சார்பில் ஒவ்வொரு வருடமும் அதிகாரப்பூர்வமாக ஒரு படம் பரிந்துரைக்கப்படுவது வழக்கம். இந்த வருடம், ஆமிர்கான் தயாரிப்பில் அவரின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கிய ‘லாபதா லேடீஸ்’ என்ற இந்திப் படத்தை அனுப்புவதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு, சில மாதங்களுக்கு முன் அறிவித்தது. இந்நிலையில் சர்வதேச பார்வையாளர்களைச்...
நடிகர் சூர்யா நடித்துள்ள 'கங்குவா’ படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரி்த்துள்ளது. நாளை (நவ.14) வெளியாகும் இந்தப் படத்துக்கு தடை கோரி ஏற்கெனவே ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதில், ரூ.99 கோடி கடனாக கொடுத்த நிலையில் ரூ.54 கோடி பாக்கியுள்ளதாக தெரிவித்திருந்தது. உயர் நீதி்மன்ற உத்தரவுப்படி அந்நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ.54 கோடியை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் செலுத்தியது. இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர் இறந்து...
‘நவசக்தி’ என்ற நாடகக்குழு மூலம் 1940 மற்றும் 50-களில் நாடகங்கள் நடத்தி வந்தவர் என்.என்.கண்ணப்பா. இவர், மு.கருணாநிதியின் முற்போக்கு வசனங்களால் பேசப்பட்ட ‘தேவகி’ (1951) படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதில் நாயகியாக நடித்தவர் வி.என்.ஜானகி. தொடர்ந்து ‘மனிதனும் மிருகமும்’, ‘நால்வர், ‘படித்த பெண்’ உட்பட பல படங்களில் நடித்தார். அவர் நடித்து ஹிட்டான படங்களில் ஒன்று, ‘டவுன் பஸ்’. இதில் அஞ்சலி தேவி கதாநாயகியாக நடித்தார். எம்.என்.ராஜம், டி.பி.முத்துலட்சுமி,...
“இந்த 10 வருடங்கள் என்னுடைய சினிமா வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளாக இருக்கும். 6 படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளேன். இந்த காலக்கட்டத்தில் சிறந்த இயக்குநர்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்களுடன் பயணிக்க விரும்புகிறேன்” என பாலிவுட் நடிகர் ஆமீர்கான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “லால் சிங் சத்தா படத்துக்கு முன்பே நான் திரைத் துறையிலிருந்து விலக முடிவு செய்துவிட்டேன். அப்போது நான் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பயணத்தில் இருந்தேன். கரோனா...
தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கோயில் திருவிழாக்கள் துவங்கி அப்பகுதி மக்களின் சுகதுக்கங்களில் ஒன்றென கலந்திருந்தது பேண்டு இசைக் குழுக்கள். ஓர் இசைக்குழுவில் 12 முதல் 15 பேர் வரை இருப்பர். கிளாரிநெட் தான் இந்த பேண்டு இசைக் குழுக்களின் பிரதானமான இசைக்கருவி. இதற்கு இணையாக சாக்ஸபோன், ட்ரெம்பெட், இபோனியம் உள்ளிட்ட இசைக்கருவிகள் சப்போர்டிங்காக இசைக்கப்படும். இவை அனைத்துமே மேற்கத்திய இசைக்கருவிகள். தாளத்தைப் பொறுத்தவரை சைட் டிரம், டோல்,...
சென்னை: பிரபல நடிகர் டெல்லி கணேஷ் (80), வயது முதிர்வு காரணமாக சனிக்கிழமை இரவு காலமானார். அவர் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், பொதுமக்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நடிகர்கள் ரஜினி, கமல் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து இருந்தனர். அவரது இறுதிச் சடங்கு திங்கள்கிழமை நடந்தது. அவரது மகன் மகா மற்றும்...
சீனு ராமசாமி இயக்கத்தில் ஏகன், யோகி பாபு, பிரிகிடா உட்பட பலர் நடித்தப் படம் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’. டி.அருளானந்து தயாரித்த இந்தப் படம், செப்.20-ம் தேதி வெளியானது. இதையடுத்து கிராமத்துப் பின்னணியில், த்ரில்லர் கதையை சீனு ராமசாமி இயக்க இருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, “கோழிப்பண்ணை செல்லதுரை படத்துக்குச் சரியான காட்சிகளும் திரையரங்குகளும் கிடைக்காததால் பெரும்பான்மையான மக்களுக்குச் சென்று சேரவில்லை. படம் வெளியான நாளில் 8 படங்கள் வெளியானதால், பல...