உபேந்திரா இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம், 'யு.ஐ’. சயின்ஸ் பிக்ஷன் ஆக்ஷன் படமான இதில் ரேஷ்மா நானய்யா, சன்னி லியோன், சாது கோகிலா, ஜிஷு சென்குப்தா, முரளி சர்மா என பலர் நடித்துள்ளனர். கன்னடத்தில் உருவான இந்தப் படம், தமிழ், தெலுங்கிலும் நாளை (டிச.20) வெளியாகிறது. இந்தப் படம் பற்றி உபேந்திரா கூறும்போது, “இது உளவியல், அரசியல் நையாண்டி படம். பல உருவகங்களுடன் இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது.
இது பார்வையாளர்களுக்கு...
நடிகை மஞ்சு வாரியர் தமிழில், தனுஷின் ‘அசுரன்', அஜித்தின் ‘துணிவு’, ரஜினியின் ‘வேட்டையன்’ படங்களில் நடித்தார். இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை 2’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் நாளை வெளியாகிறது.
இவர் அளித்துள்ள பேட்டியில், நடிகர் அஜித்குமார் தனது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது, “அஜித்குமார் பல விஷயங்கள் பற்றிப் பேசுவார். அவர் பேசும்போது ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பேன். அவருக்கு பைக் மீதிருக்கும்...
வசந்தபாலன் இயக்கிய ‘வெயில்’ படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு இசை அமைக்க இருக்கிறார். இது அவருக்கு இசை அமைப்பாளராக 100-வது படம். இதையடுத்து அவர் நன்றிதெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஜி.வி.பிரகாஷ் கூறியிருப்பதாவது: 2005-ம் ஆண்டில் தொடங்கியது எனது இசைப் பயணம். 2024-ம் ஆண்டில் 100-வது திரைப் படத்துக்கு இசை அமைக்கும் நல்ல வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்....
இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ விழாவில் சிறப்பு விருந்தினராக சூர்யா கலந்துக் கொள்ள இருக்கிறார். இதில் படத்தின் சர்ச்சைகள் குறித்து அவர் பேசுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
’வணங்கான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவையும், இயக்குநர் பாலாவின் 25 ஆண்டு கலைப் பயணத்தையும் ஒரே விழாவாக நடத்த திட்டமிடப்பட்டு இந்நிகழ்வு இன்று (டிச.18) மாலை நடைபெறவுள்ளது. இதில் ‘வணங்கான்’ படக்குழுவினருடன் பாலாவுடன் பயணித்த பல்வேறு திரையுலகினரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்கள்.
இந்த...
குரு சோமசுந்தரம் நடித்துள்ள ‘பாட்டல் ராதா’ திரைப்படம் வரும் ஜனவரி 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் சார்பில் இந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘ப்ளூ ஸ்டார்’, ‘J.பேபி’ ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. அவரது தயாரிப்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள படம் ‘பாட்டல் ராதா’. இப்படத்தை பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ளார். இதில் குரு சோமசுந்தரம்,...
தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் 3வது சிங்கிள் வரும் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது.
‘பவர் பாண்டி’, ‘ராயன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள புதிய படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். மலையாள நடிகர் மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், ப்ரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ்...
நடிகர் பிரபாஸ் இப்போது ‘தி ராஜா சாப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மாருதி இயக்கும் இந்த ஹாரர் காமெடி படத்தின் படப்பிடிப்பில் அவர் காயமடைந்துள்ளார். சண்டைக் காட்சியில் நடிக்கும் போது அவருடைய கணுக்காலில் பலத்த காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அவர் கட்டாயமாக ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில் அவர் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏடி’ ஜப்பானில் அடுத்த மாதம் 3-ம்...
சூப்பர் ஹிட்டான ‘தி லயன் கிங்’ படத்தின் அடுத்த பாகமாக ‘முஃபாசா: தி லயன் கிங்’ என்ற படம் இப்போது உருவாகி இருக்கிறது. பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ள இந்தப் படம் டிச. 20-ல் வெளியாக இருக்கிறது. ஆதரவற்ற குட்டியான முஃபாசாவையும், அரச குடும்பத்தின் வாரிசான டாக்கா எனப்படும் அன்பான சிங்கத்தையும் சுற்றி இதன் கதைப் பின்னப்பட்டுள்ளது.
இதில் முஃபாசா கதாபாத்திரத்துக்கு அர்ஜுன் தாஸ், ‘டாக்கா’வுக்கு அசோக் செல்வன் குரல் கொடுத்துள்ளனர்....
ஆத்வி சேஷ் நடிக்கும் ‘டகோயிட்’ படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக மிருணாள் தாகூர் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
ஷானில் டியோ இயக்கத்தில் ஆத்வி சேஷ் நடித்து வரும் படம் ‘டகோயிட்’ (DACOIT)’. இதில் நாயகியாக ஸ்ருதிஹாசனை வைத்து முதற்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாக படத்திலிருந்து அவர் விலகிவிட்டார். அவருக்கு பதிலாக பல்வேறு நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இது...
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் படம், ‘படை தலைவன்’. அன்பு இயக்கும் இந்தப் படத்தில் கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதில் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் சிறப்புத் தோற்றத்தில் காண்பித்துள்ளனர்.
இதுகுறித்து இதன் இயக்குநர் அன்பு கூறும்போது, ‘‘இந்தப் படத்தில் விஜயகாந்தை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் சிறப்புத் தோற்றத்தில் காண்பிக்கிறோம். அவர் கேரக்டர் கண்டிப்பாக ரசிகர்களைக் கவரும். விஜயகாந்த் நடித்த ‘பொன்மனச் செல்வன்’ படத்தில்...










