இந்திய பாரம்பரிய இசையில் சாதனை படைத்தவர்களைக் கவுரவிக்க இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ‘கேஎம் மியூசிக் கன்சர்வட்டரி’ நிறுவனத்துடன் இணைந்து ‘பாரத் மேஸ்ட்ரோ' விருதுகளை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த திங்கள்கிழமை தனது பிறந்த நாளை கொண்டாடினர். அவருக்கு அரசியல் மற்றும் திரையுலகினர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், இந்திய பாரம்பரிய இசை மற்றும் அதன் பயிற்சியாளர்களைக் கொண்டாடும் வகையில் விருதுகளை வழங்க இருப்பதாகத்...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம், ‘கூலி’. இதில் சத்யராஜ், அமீர் கான், உபேந்திரா, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. அங்கு ஆமீர் கான் பங்குபெற்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. அடுத்து இதன் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்துக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் பேசும்போது, “கூலி படத்தின் படப்பிடிப்பு 70 சதவிகிதம் முடிவடைந்துவிட்டது. அடுத்த...
விஜய் ஆண்டனியின் ‘கொலை’, ஆர்ஜே பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’, விஜய்யின் ‘த கோட்’ படங்களில் நாயகியாக நடித்திருப்பவர் மீனாட்சி சவுத்ரி. தெலுங்கிலும் நடித்து வருகிறார்.
வெங்கடேஷுடன் அவர் நடித்துள்ள ‘சங்கராந்தி வஸ்துன்னம்’ என்ற தெலுங்கு படம் பொங்கலுக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தின் புரமோஷனில் கலந்துகொண்ட அவர், ‘த கோட்’ படம் வெளியான பிறகு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
“அந்த படம் வெளியான பிறகு சமூக வலைதளங்களில் அதிகம் ட்ரோல்...
ஜி.வி.பிரகாஷ் குமார், கதையின் நாயகனாக நடிக்கும் படம், ‘கிங்ஸ்டன்’. அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கும் இதில் திவ்ய பாரதி, ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபு மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இதை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி...
‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அனிருத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் அனிருத், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்துக் கொண்டார்கள்.
இதில் இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது, “இப்போது அனிருத் நன்றாக இசையமைக்கிறார். இவ்வளவு பெரிய படத்துக்கு ஹிட் கொடுக்கிறார். 10000 இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள், அதில்...
கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் உருவாகியுள்ள ‘தருணம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
2022ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அரவிந்த் சீனிவாசனின் இரண்டாவது படம். இதில் கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட், ராஜ் ஐயப்பா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்துள்ள இப்படத்துக்கு ராஜா பட்டாச்சர்ஜீ ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வரும் ஜன.14 திரையரங்குகளில் வெளியாகிறது.
ட்ரெய்லர் எப்படி? - 2.39...
ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. இந்தப் படத்தில் யோகிபாபு, வினய், ஜான் கொக்கன், லட்சுமி ராமகிருஷ்ணன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று (ஜன.07)...
என்னுடைய வெற்றியின் மூலம் வெறுப்பாளர்களுக்கு நான் பதில் தர விரும்பவில்லை. என் வெற்றி அவர்களுக்கானது அல்ல. என் வெற்றி என்னுடன் சேர்ந்து 100 சதவீத உழைப்பை போடும் என்னுடைய குழுவினருக்கானது என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
ஆங்கில யூடியூப் சேனல் ஒன்றுக்கு சிவகார்த்திகேயன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “இந்த துறையில் என்னை போன்ற சாதாரண ஆட்கள் வருவதை சிலர் மட்டுமே வரவேற்கின்றனர். சில குழுக்கள் அதில் மகிழ்ச்சி அடையவில்லை. இந்த...
விஜய் சேதுபதியின் 50-வது படம் ‘மகாராஜா’. இதை நித்திலன் சாமிநாதன் இயக்கியுள்ளார். கடந்த வருடம் ஜூன் மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ரூ.100 கோடியை தாண்டி வசூலித்தது. இந்தப் படம் சீன மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த நவம்பர் மாதம் அங்கு வெளியானது.
அங்குள்ள ரசிகர்களையும் கவர்ந்த மகாராஜா, 2018-ம் வருடத்துக்குப் பிறகு அதிக வசூலை ஈட்டிய இந்தியப் படமாக மாறியிருக்கிறது. ரூ.91.55 கோடியை இந்தப் படம்...
நயன்தாராவின் ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் கடந்த நவம்பரில் வெளியானது. அதில், தனது தனிப்பட்ட வாழ்க்கை முதல் திருமணம் வரையிலான விஷயங்கள் பற்றி நயன்தாரா கூறியுள்ளார்.
அதில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தின் படப்பிடிப்பு தள வீடியோ பயன்படுத்தப்பட்டு இருந்தது. தனது அனுமதி இல்லாமல் அதை பயன்படுத்தியதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு...










