குற்றியாறு: குடியிருப்பில் நள்ளிரவில் யானைகள் அட்டகாசம்
கோதையாறு அருகிலுள்ள குற்றியாறு பகுதி அரசு ரப்பர் கழக தோட்டங்கள் நிறைந்ததாகும். இந்த பகுதியில் ரப்பர் பால்வடிப்பு தொழிலாளர்களின் குடியிருப்புகள், அரசு தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் போன்றவை உள்ளன. சுற்றுலா தலமும் ஆகும். நேற்று முன்தினம் நள்ளிரவில் அங்கு உள்ள குடியிருப்பு அருகில் யானைகள் தென்னைகள் மற்றும்...
தக்கலை: தலைமை ஆசிரியரிடம் பணம் மோசடி; கணவன் மனைவி கைது
தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் அருள் சகாய சேகர் (56). இவர் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ததேயுஸ் (54). இவர் தனக்கு சொந்தமான ஐந்து சென்ட் நிலத்தை அருள் சகாய சேகரின் மகனுக்கு விற்பதாக கூறி...
வாறுத்தட்டு: பள்ளியில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் போக்சோ குற்றங்கள் இல்லாத கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்கும் பொருட்டு "நிமிர்" என்ற போக்சோ சட்ட விழிப்புணர்வு இயக்கத்தை செயல்படுத்தியுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக களியக்காவிளை அருகே வாறுத்தட்டு பள்ளியில் நிமிர் குழுவின் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது....
குழித்துறை: இரவில் டாரஸ் லாரி மோதி வாலிபர் சாவு
திருத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவர் கொத்தனார். இன்று 7-ம் தேதி வெளிநாட்டிற்குச் செல்ல உள்ள நிலையில் நேற்று இரவு தனது இரண்டு சிறுகுழந்தைகளுக்குப் பிரியாணி வாங்கிக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
குழித்துறை சந்திப்புப் பகுதியில் வைத்து இவரது வாகனத்தின் மீது கனிமவள டாரஸ் லாரி...
குழித்துறை: கழிவு லாரியை திருப்பி அனுப்பிய போலீசார்
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சக்திகுளங்கரை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் கழிவுகள் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியை பொதுமக்கள் நேற்று குழித்துறை பகுதியில் வைத்து சிறைபிடித்தனர்.
பின்னர் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து அந்த கன்டெய்னர் லாரியை பறிமுதல் செய்தனர். பின்னர்...
மார்த்தாண்டம்: மேம்பாலத்தில் தார் போடும் பணி நிறுத்தம்
மார்த்தாண்டம் மேம்பாலம் பகுதி பழுது அடைந்து காணப்படுகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரகாலமாக மேம்பாலம் வழியாக அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. நேற்று முதல் போக்குவரத்து தொடங்கும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உறுதியாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில்...
மணலோடை: பழங்குடியினர் நல மாணவர் விடுதி திறப்பு
திருவட்டார் வட்டம், மணலோடை பழங்குடியினர் நல உண்டு உறைவிட அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் விடுதியினை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, தலைமையில் இன்று (06. 06. 2025) திறந்து வைத்து, மாணவ மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கி, கூறியதாவது: -
பத்மநாபபுரம் சட்டமன்ற...
களியக்காவிளை: உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்று நடவு
களியக்காவிளை அருகே உள்ள செம்மான்விளை பகுதியில் உலக சுற்றுச்சூழல் தினமான இன்று வாழ்வுதட்டு அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் சாலை ஓரத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இயக்க நிறுவனர் பிரேம்ராஜ், நித்திரவிளை ஜோஸ் தீரஜ், பண்பாட்டு சேவா அறக்கட்டளையைச் சேர்ந்த தீரஜ் ஆகியோர் இணைந்து மரக்கன்றுகளை...
கொல்லங்கோடு: பஸ் நிலையம் அமைக்க அதிகாரிகள் நியமனம்
கிள்ளியூர் தாலுகாவுக்கு உட்பட்ட கொல்லங்கோட்டில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 1.32 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் இது தொடர்பான அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பத்மநாதபுரம் உதவி ஆட்சியர் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே கொல்லங்கோடு பி...
நாகர்கோவிலில் ரூ. 7.20 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 10-வது வார்டு நெசவாளர் காலனி அரசு தொடக்கப்பள்ளியில் ரூ. 2.20 லட்சத்தில் சீரமைப்பு மற்றும் 11-வது வார்டு பரதர் தெரு மற்றும் புளியடி பகுதியில் உள்ள கழிவறையை ரூ. 5 லட்சத்தில் சீரமைப்பு ஆகிய பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது....













