Google search engine

நாகர்கோவில்: எஸ்ஐ மீது பரபரப்பு புகார்

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில் இறைச்சி வியாபாரம் செய்து வந்த சிவராஜ் என்பவரை எஸ்ஐ இங்கு வியாபாரம் செய்யக்கூடாது என்று கூறி உபகரணங்களை பறித்து சென்றதன் காரணமாக அவர் காவல் நிலையத்தில் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்தார். மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மனைவி நாகர்கோவிலில்...

குமரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 5, 313 மனுக்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுவான மனுக்கள் உட்பட 5, 313 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று தெரிவித்தார். இதில், தகுதியானவர்களுக்கு மின் இணைப்பு பெயர் மாற்றம், பட்டா, ஓபிசி சான்றிதழ், ரேஷன் கார்டு பெயர்...

குமரி: நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகங்கள் நேற்று தொடங்கி குமரி முழுவதும் நடைபெற்று வருகிறது. குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் நாளை 17-ஆம் தேதி குழித்துறை நகராட்சி வார்டு 1, 2-க்கு திருத்துவபுரம் ஆடிட்டோரியத்திலும், பாலப்பள்ளம் பேரூராட்சிக்கு செயின்ட் ஜூட்ஸ் ஹைடெக் பள்ளியிலும், நெட்டாங்கோடு ஊராட்சிக்கு தேவி திருமண...

குலசேகரம்:  பெயிண்டிங் தொழிலாளி மர்ம மரணம்

குலசேகரம் பகுதியைச் சேர்ந்தவர் கமாலியேல் (50). பெயிண்டிங் தொழிலாளியான இவர் நேற்று பிணந்தோடு பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் பெயிண்டிங் வேலைக்குச் சென்றுள்ளார். அங்கு வீட்டின் பாசிகளைத் தண்ணீர் பிரஷர் பம்பு மூலம் சுத்தம் செய்துகொண்டிருந்தார். அப்போது மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு குலசேகரத்தில்...

கொல்லங்கோடு நகராட்சி ஆணையாளர் தகவல்

கொல்லங்கோடு நகராட்சி ஆணையாளர் ஈழவேந்தன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: - கொல்லங்கோடு நகராட்சி சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளான சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபடம், குடிநீர் குழாய் உடைப்புகள், பொது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு மற்றும் அன்றாட அடிப்படை தேவைகளில் குறைபாடுகள் ஏதும்...

கிள்ளியூர்: காமராஜர் குறித்து அவதூறு; எம்எல்ஏ கண்டனம்

தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிள்ளியூர் எம்எல்ஏவுமான ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்: - தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்த கர்மவீரர் காமராஜர் குறித்து பேசுவதற்கு முன் தன்னுடைய தகுதியை பற்றி திருச்சி சிவா சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேடை கிடைத்தது விட்டது மைக் கிடைத்து...

கொல்லங்கோடு: பெண் குளிப்பதை எட்டிப் பார்த்தவர் கைது

கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதி சென்னிவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் ஜெனிபர் (38). இவரது வீட்டு அருகில் வசிக்கும் பெண் ஒருவர் குளிப்பதை ஜெனிபர் அடிக்கடி எட்டிப் பார்த்து ஆபாச செய்கைகள் செய்வது வழக்கம். இது சம்பந்தமாக பெண்ணின் குடும்பத்தார் கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தனர்....

நாகர்கோவிலில் தையல் கலைஞர்கள் மாநாடு

குமரி மாவட்ட தையல் கலைஞர்கள் சங்க மாவட்ட மாநாடு நாகர்கோவிலில் நேற்று நடந்தது. மாவட்டத் தலைவர் ஜோசப் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரவீந்திரதாஸ் கொடியேற்றி வைத்தார். துணைச் செயலாளர் சோபா அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்புக்குழு பொருளாளர் இந்திரா வரவேற்றார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகன்...

புதுக்கடை: பி எட் கல்லூரி விழாவில் இஸ்ரோ தலைவர் பங்கேற்பு

புதுக்கடை அருகே கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி பிஎட் கல்லூரியில் பட்டமளிப்பு விழா தாளாளர் ராஜகுமார் தலைமையில் நடந்தது. முதல்வர் பிரியா வரவேற்றார். 55 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி இஸ்ரோ தலைவர் நாராயணன் சிறப்புரையாற்றினார்.அறிஞர் அண்ணா கல்லூரி முன்னாள் முதல்வர் சுப்ரமணிய பிள்ளை கருத்துரை ஆற்றினார். பேராசிரியர் லேகா...

குளச்சல்: நள்ளிரவில் தீயில் கருகிய உயிர்

குளச்சல், வாணியக்குடி பகுதி சேர்ந்தவர் ஜெகன் (47) மீன்பிடி தொழிலாளி. நேற்று முன்தினம் நள்ளிரவு ஷெட்டில் நிறுத்தி இருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்தது. சத்தம் கேட்டு பார்த்தபோது அருகில் நிறுத்தி இருந்த பைக்கும் சேர்ந்து எரிந்தது. உடனே குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது....