Google search engine

பூத்துறை: கால்வாய் சீரமைக்க காமராஜர் மக்கள் இயக்கம் தர்ணா

குமரி கடற்கரை கிராமங்கள் வழியாக செல்லும் ஏவிஎம் கால்வாய் புதர் மண்டி, தூர்வாரப்படாமல் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பயன்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்கக் கோரி, காமராஜர் மக்கள் இயக்கம் சார்பில் பூத்துறை மீனவ கிராமத்தில்...

குமரி: 117 மையங்களில் இன்று 10ம் வகுப்பு தேர்வு துவக்கம்

இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 21,466 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக மார்த்தாண்டம் பகுதியில் 67 மையங்களும், நாகர்கோவில் பகுதியில் 50 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தனித் தேர்வர்களுக்காக 5 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில்...

நாகர்கோவில்: இரவில் பெட்ரோல் திருடும் வாலிபர் -வீடியோ

நாகர்கோவிலில் ஆசாரிமார் வடக்கு தெரு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் இருந்து தொடர்ச்சியாக பெட்ரோல் திருட்டு நடைபெற்று வந்தது. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் இருந்து பெட்ரோலை திருடிச் செல்லும் வாலிபர் ஒருவர் கண்காணிப்பு கேமராவில்...

குமரி: தேர்தல் பணிக்கு துணை ராணுவ வீரர்கள் வருகை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து 11 பெண்கள் உட்பட 90 துணை ராணுவ வீரர்கள் வந்துள்ளனர். நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆயுதப்படை காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். வீரர்கள் நேற்று முதல் சோதனைச் சாவடிகளில்...

திற்பரப்பு: கோயில் கிணற்றில் உயிரிழந்து மிதக்கும் பாம்பு

குமரியில் மஹா சிவாலய ஓட்டம் நடக்கும் 12 சிவாலயங்களில் 3வது சிவாலயமான திற்பரப்பு மகாதேவர் கோயில் திற்பரப்பு அருவியோரம் அமைந்துள்ளது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் தினமும் இலவச அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானம் தயார் செய்யும் கோயில் கிணற்றில் பாம்பு ஒன்று உயிரிழந்த நிலையில் செத்து...

வள்ளவிளை: ஶ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில் தீ மிதி திருவிழா

குமரி மாவட்டத்தில் உள்ள வள்ளவிளை ஶ்ரீ ராஜராஜேஸ்வரி இசக்கி அம்மன் கோவில் திருவிழாவில் நேற்று இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் பூஜைகள் வைத்து அம்மனை வரவேற்றனர். தீ மிதிக்க விரதமிருந்த பக்தர்கள் தலையில் கும்பம், கையில் தீ சட்டி ஏந்தி தீ குண்டத்தில் இறங்கி...

தூத்தூர்: ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்த சத்தியாகிரகம்

தூத்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கிள்ளியூர் தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தக் கோரி அனைத்து கட்சியினர் மற்றும் தூத்தூர் பங்கு பேரவை நிர்வாகிகள் நேற்று ஒருநாள் அடையாள சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு பங்கு பேரவை பொருளாளர் அமல்ராஜ் தலைமை தாங்கினார். நாம்...

நாகர்கோவில்: மாணவி கர்ப்பம் – சிறுவன் போக்சோவில் கைது

நாகர்கோவில் கோட்டார் பகுதியைச் சேர்ந்த 16 வயது பாலிடெக்னிக் மாணவி, நேசமணி நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் காதல் வயப்பட்டார். சிறுவன் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததால், மாணவி 2 மாத கர்ப்பமடைந்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், நாகர்கோவில் அனைத்து...

மண்டைக்காடு: கோவிலில் இன்று நள்ளிரவு சக்கர தீவட்டி ஊர்வலம்

குமரியில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் 9ம் நாள் விழா இன்று 9-ம் தேதி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான நள்ளிரவில் நடைபெறும் பெரிய சக்கர தீவட்டி ஊர்வலத்தை சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதி விக்டோரியா கெளரி தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து செண்டை...

அருமனை: மகனின் சிகிச்சைக்காக செயின் பறித்தவர் கைது

அருமனை பகுதியில் 9 பவுன் செயின் பறிக்கப்பட்டதாக பிரபா (27) என்பவர் அளித்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தர்மன் (42) என்பவர் கைது செய்யப்பட்டார். தர்மன் தனது 4 வயது மகனின் இதய பிரச்சனைக்கான மருத்துவ செலவிற்காக செயின் பறித்ததாக முதலில் கூறிய...