காளி மலை ரத யாத்திரை: நாகர்கோவிலில் ஆலோசனை
நாகர்கோவிலில் காளி மலை சமுத்திரகிரி ரத யாத்திரையை சிறப்பாக நடத்துவது குறித்து நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் பெருமாள் உட்பட பலர் கலந்துகொண்டனர். யாத்திரையை வெற்றிகரமாக நடத்த விரிவான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டது.
குமரி: தி. மு. க. விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகள் கூட்டம்
குமரி கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நகர, பகுதி, ஒன்றிய புதிய நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் அறிமுக கூட்டம் நேற்று நாகர்கோவிலில் நடைபெற்றது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தல், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்குதல், நாகர்கோவில், கன்னியாகுமரி,...
குளச்சல் துறைமுகத்தில் மீனவர் ஓய்வறை: எம்எல்ஏ அடிக்கல்
குளச்சல் துறைமுகத்தில் மீனவர்களுக்காக ரூ. 10 லட்சம் மதிப்பில் புதிய ஓய்வறை அமைக்க சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குளச்சல் நகர்மன்ற தலைவர் நசீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பிரின்ஸ் எம்.எல்.ஏ...
தக்கலை: பார் உரிமையாளரை மிரட்டி பணம் பறிப்பு 2 பேர் கைது
மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஜான் (50) என்பவர் சாமியார்மடத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் பார் நடத்தி வருகிறார். நேற்று பார் பகுதிக்குச் சென்றபோது, அங்கு நின்றுகொண்டிருந்த சாரோன் பிரபு, ஆல்பர்ட், ஆண்டோ பிரபு மற்றும் சுனில் ஆகிய 4 பேர் ஜாணைத் தடுத்து நிறுத்தி, அவரது சட்டைப்...
நித்திரவிளை: ஆட்டோவில் கடத்திய மண்ணெண்ணெய் பறிமுதல்
நித்திரவிளை சப் இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் தலைமையிலான போலீசார் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டபோது, கேரள பதிவெண் கொண்ட பயணிகள் ஆட்டோவில் இருந்து 7 கேன்களில் 200 லிட்டர் மானிய விலை மண்ணெண்ணெயை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பொழியூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஏசுதாஸ் கைது...
குமரி: மின் சேவை பாதிப்பு: இனி 5 நிமிடங்களில் லைன்மேன் வருவார்
குமரி மாவட்டத்தில் மழைக்காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும்போது, பொதுமக்கள் இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டியதில்லை. TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில்...
கருங்கல்: ஆசிரியர் வீட்டை உடைத்து நகை திருட்டு
பாலூர் பகுதியைச் சேர்ந்த ஆஸ்லின் (33) என்ற தனியார் பள்ளி ஆசிரியை வீட்டில் நேற்று முன்தினம் யாரும் இல்லாதபோது, மர்ம நபர்கள் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த சுமார் 20 பவுன் நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து கருங்கல் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார்...
குமரி எஸ்பி அலுவலகத்தில் பாஜகவினர் புகார் மனு
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் நடைபெற்ற ஜீவா விழாவில் யூடியூபர் செந்தில் வேல் ஹிந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தி பேசியதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனைக் கண்டித்து, பூதப்பாண்டி காவல் நிலையத்தில் பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது. காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்காததால், நேற்று குமரி மாவட்ட எஸ்.பியிடம் பாஜகவினர்...
நாகர்கோவில்-தாம்பரம் சிறப்பு ரயில் சேவை: அறிவிப்பு
நாகர்கோவில் மற்றும் தாம்பரம் இடையே சிறப்பு ரயில் சேவை இம்மாதம் 26ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 26ஆம் தேதி வரை இயக்கப்படும். நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11:15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் மதியம் 12:30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். தாம்பரத்தில் இருந்து 29ஆம்...
குமரியில் கனரக வாகனங்களால் விபத்து: தமுமுக வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டத்தில், குறிப்பாக குளச்சல், திக்கணங்கோடு, கருங்கல், மார்த்தாண்டம், தக்கலை, பார்வதிபுரம் பகுதிகளில் விதிமுறைகளை மீறி அதிவேகமாக செல்லும் கனரக வாகனங்களால் விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதமும், காயங்களும் ஏற்படுவதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) குளச்சல் நகர செயலாளர் ரிபாய் கான் தெரிவித்துள்ளார். குண்டும்...













