Google search engine

குமரிக்கு வந்த 2,500 டன் ரேஷன் அரிசி

ஆந்திர மாநிலத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 2,500 டன் ரேஷன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அரிசி சரக்கு ரெயில் வேகன்கள் மூலமாக கொண்டு வரப்பட்டன. மொத்தம் 42 வேகன்களில் வந்த அரிசி மூடைகள் நேற்று நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் அந்த வேகன்களிலிருந்து லாரிகளில்...

நாகர்கோவில்: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வருவாய் கூட்டரங்கில் வைத்து தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியம் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தூய்மைப பணியாளர் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருவட்டார்: சாலை நடுவில் உள்ள மின்கம்பங்கள்

திருவட்டார் பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளாங்கோடு - பாரத பள்ளி இணைப்புச் சாலை செப்பனிடும் பணிகளை நேற்று முன்தினம் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் கலெக்டர் அழகு மீனா ஆகியோர் திருவட்டாரில் தொடங்கிவைத்தனர். இந்தச் சாலையின் நடுவில் மூன்று மின்கம்பங்கள் உள்ளன.  அந்த மின்கம்பங்களை அகற்றிய பிறகுதான் சாலையைச் செப்பனிடும்...

கருங்கல்: மூதாட்டி உயிரிழப்பு… அனைத்துக் கட்சிக் கூட்டம்

குமரியில் காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்ததாகக் கூறப்படும் மூதாட்டி சூசைமரியாள் குடும்பத்திற்கு நீதி கிடைப்பதற்குப் போராட் டம் நடத்துவதற்காக மத்திகோடு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் மரிய அருள்தாஸ் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வது என்றும், அதுவரை சூசைமரியாள் உடலை...

மார்த்தாண்டம்: போலீஸ் பாதுகாப்புடன் வர்த்தகர் சங்கக் கூட்டம்

மார்த்தாண்டத்தில் தொழில் வர்த்தகர் சங்கத்தில் கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகக் குழுவில் உள்ள செயலாளர் சுரேஷ் குமார் என்பவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் துணைச் செயலாளர், செயலாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று வர்த்தகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.  பரபரப்பான சூழ்நிலையில் மார்த்தாண்டம் போலீசார் தலைமையில்...

கருங்கல்: மூதாட்டி சாவு…  உயர்நீதிமன்றத்தில் அவசர மனு

கருங்கல் அருகே மத்திகோடு பகுதியில் சூசைமரியாள் என்ற மூதாட்டியை நேற்று முன்தினம் போலீசார் தாக்கியதில் இறந்ததாகக் கூறப்பட்டது. மூதாட்டி உடல் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளது. மூதாட்டி சாவுக்கு காரணமான போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யாமல் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் கூறினர்.  இதனால்...

நாகர்கோவில்: ஆம்புலன்ஸ் பேருந்து நேருக்கு நேர் மோதல்

நாகர்கோவில் பால்பண்ணை ஜங்ஷன் அருகே பேருந்தும் ஆம்புலன்சும் மோதல் - ஒருவர் உயிரிழப்பு, ஓட்டுநர் படுகாயம் நாகர்கோவில் பால்பண்ணை அருகே இன்று இரவு ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஒரு ஆம்புலன்சும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த சம்பவத்தில் ஆம்புலன்சில் பயணம் செய்த நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார்.  விபத்தில்...

முட்டம்:  படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் போராட்டம்

குமரி ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் நேற்று (ஜூலை 29) முட்டம் கடற்கரை கிராமத்தில் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் படகுகளில் கருப்பு கொடி கட்டி வேலை நிறுத்த போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்திற்கு பிரின்ஸ் எம்எல்ஏ ஆதரவு தெரிவித்து சிறப்புரையாற்றினார்....

மணவாளகுறிச்சி: விஷ மாத்திரை தின்று மூதாட்டி தற்கொலை

மணவாளக்குறிச்சி அடுத்த கல்படி பகுதியைச் சேர்ந்தவர் சுயம்பு மனைவி டெய்சி ராணி (65). இவர் அதே பகுதியில் உள்ள மகன் கிங்ஸ் ராஜா என்பவர் வீட்டில் தங்கி உள்ளார். கடந்த சில நாட்களாக டெய்சிராணி வீட்டில் சரியாக உணவு உட்கொள்ளாமல் உண்ணாவிரதம் இருந்துள்ளார். இதனால் மகன் கண்டித்துள்ளார். இதனால்...

மார்த்தாண்டம்: வரதட்சணை கொடுமை; 3 பேர் மீது வழக்கு

கீரிப்பாறை பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ் மகள் ஆஷ்னா (22). இவருக்கும் கோயம்புத்தூரை சேர்ந்த ஜான்தேவ் ஆனந்த் (33) என்பவருக்கும் கடந்த 2020 அக்டோபர் 29ஆம் தேதி திருமணம் நடந்தது. அப்போது வரதட்சணையாக 70 பவுன் நகைகள், 10 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசைகள் செய்துள்ளனர்.  மீண்டும் வரதட்சணை கேட்டு...