Google search engine

நாகர்கோவில்: கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்

நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் நேற்று (ஜனவரி 20) வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படை தனி தாசில்தார் பாரதி தலைமையிலான குழுவினர், கேரளாவிற்கு கடத்த முயன்ற 3½ டன் ரேஷன் அரிசியை வாழை இலைகளுக்கு அடியில் பதுக்கி வைத்திருந்த டெம்போவை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய ஓட்டுநரை...

திங்கள்நகர்: பெண்ணிடம் பணம் திருடிய 3 பெண்கள் கைது

திங்கள்நகர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த குருந்தன்கோடு பகுதியைச் சேர்ந்த லலிதா (57) என்பவரின் பையில் இருந்த 23,700 ரூபாயை நேற்று 3 பெண்கள் திருடினர். பொதுமக்கள் அவர்களைப் பிடித்து இரணியல் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணாம்மாள் (60),...

திருவட்டாறு: தொழிலாளி குளத்தில் பிணமாக மீட்பு

வேர்க்கிளம்பி பகுதியை சேர்ந்த தொழிலாளி செல்வின் ஜெபக்குமார் (44) மதுப்பழக்கத்தால் மனைவியுடன் பிரிந்து வாழ்ந்து வந்தார். நேற்று அப்பகுதியில் உள்ள குளத்தில் அவரது உடல் பிணமாக கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருவட்டாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி குமரி அரசு...

மார்த்தாண்டம்: கோயிலில் வெள்ளி முக அங்கி திருட்டு

மார்த்தாண்டம், ஆயிரம்தெங்கு பகுதியில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில், திருவிழாக் காலங்களில் அம்மனுக்கு அணிவிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான வெள்ளி முக அங்கி மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. மார்த்தாண்டத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் அம்மனுக்கு நேர்ச்சையாக வழங்கிய இந்த அங்கியை காணாமல் போனது குறித்து...

கொல்லங்கோடு: வக்கீலுக்கு கொலை மிரட்டல் – வழக்கு பதிவு

கொல்லங்கோடு அருகே சூரியகோடு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் துளசிதாஸ் (51) என்பவரின் நிலத்தின் கேட் முன்பு பாத்திமாநகர் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் (53) என்பவர் பாறாங்கற்களை இறக்கிப் போட்டு, கேட்டை சேதப்படுத்தி, நிலத்திற்குச் செல்லும் பாதையை அடைத்துள்ளார். இது குறித்து துளசிதாஸ் கேட்டபோது, ரவீந்திரன் தகாத வார்த்தைகள்...

கோட்டார், ஆரல்வாய்மொழி பகுதிகளில் நாளை மின்தடை.

கன்னியாகுமரி மாவட்டம் மீனாட்சிபுரம், ஆரல்வாய்மொழி மற்றும் முப்பந்தல் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், மாலை 5 மணி வரையிலும் குறிப்பிட்ட பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும்....

குளச்சல்: மீனவர் வீட்டில் இரவில் பயங்கர தீ விபத்து

கோடிமுனை பகுதியை சேர்ந்த ஆன்டனி என்பவரின் மனைவி, நேற்று மாலை கிரைண்டரில் மாவு அரைத்த பிறகு அதை நிறுத்தாமல் வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் சமையலறையில் தீப்பிடித்து எரிந்ததால், அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள்...

படத்தாலுமூடு: மேல்நிலைப்பள்ளி மாணவன், மாணவி மாநில சாதனை

படந்தாலுமுட்டில் உள்ள சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆர்வின் சுரேஷ், மாநில அளவிலான பாக்சிங் தரவரிசைப் போட்டியில் 60-63 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதே பள்ளியைச் சேர்ந்த மாணவி தர்ஷிகா, மாநில அளவிலான தமிழ் நுண்ணறிவு தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். மாநில...

முள்ளூர்துறை: கோர்ட் உத்தரவு ; 34 பேர் மீது வழக்கு

ராமன்துறை பகுதியைச் சேர்ந்த ராபர்ட் புரூஸ் (52) என்பவர் முள்ளூர்துறை பகுதியில் சொந்தமாக சொத்து வாங்கி காம்பவுண்டு சுவர் கட்ட பணியாளர்களுடன் சென்றிருந்தார். அப்போது சுரேஷ் தலைமையிலான 34 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் சொத்துக்குள் அத்துமீறி நுழைந்து, பணியாளர்களைத் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்து...

பைங்குளம்: இந்து முன்னணியினர் 26 பேர் மீது வழக்கு

புதுக்கடை அருகே பைங்குளத்தில் குமரி மாவட்ட இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி சட்டவிரோதமாக போராட்டம் நடத்தியதாக இந்து முன்னணி மதுரை கோட்ட செயலாளர் பழனிபாலன் உட்பட 26 பேர் மீது புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து...