Google search engine

இனயம்: மீனவர்களுக்கு மருத்துவ அட்டை வழங்க கோரிக்கை

இனயம் புத்தன்துறை ஊராட்சியில் உள்ள அலுவலகத்தில் 2024-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு முகாம் நடைபெற்றது. அன்றைய தினம் சுமார் 500-க்கு அதிகமான மீனவர்கள்  புகைபடத்துடன் விண்ணப்பங்களையும். அதற்கான ஆவணங்களையும் கொடுத்தனர். அதனை துறை சம்மந்தப்பட்ட அதிகாரிகள்  பெற்றுக்கொண்டு அடுத்த நாள் காப்பீட்டிற்கான...

மார்த்தாண்டம்: காரில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்

விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அனிதா குமாரி மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் மைக்கேல் சுந்தர் ராஜா ஆகியோர் நேற்று இரவிபுதூர் கடை என்ற பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் கார் நிற்காமல்...

நாகர்கோவிலில் லாட்டரி விற்றவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசோபன் மீனாட்சிபுரம் தளவாய் தெரு பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார். அதில் அவர், கோதைகிராமம் சிவன்கோவில் தெருவைச் சேர்ந்த சந்திரன் (வயது70) என்பதும், அங்கு...

தக்கலை: பெண்ணுக்கு கொலை மிரட்டல்; பாஸ்டர் மீது வழக்கு

தக்கலை அருகே உள்ள கோழிப்போர் விளை பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் மனைவி கில்டா விஜயகுமாரி (53). இவருக்கு சொந்தமான நிலம் திருநெல்வேலி பகுதியில் உள்ளது. இதை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் மேக்காமண்டபம் காஞ்சிரத்து கோணம் பகுதியை சேர்ந்த பெர்ஜின் (45) என்பவர் தான் கொடுக்கும்...

குழித்துறை: தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை; கோர்ட் தீர்ப்பு

மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியைச் சேர்ந்தவர் மணி மனைவி மரியாராணி (39). இந்தத் தம்பதிக்கு டார்வின் என்ற மகன் உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சுஜன் குமார் (51). இவருக்கும் டார்வினுக்கும் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சுஜன் குமார்...

கருங்கல்: சொத்து தகராறு – அண்ணனை தாக்கிய ரவுடி

கருங்கல் அருகே உள்ள மாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் மகன் வினோ ராஜ் (42). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தற்போது இவர் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இவருக்கும் அவரது சகோதரர் மனோ ராஜ் (40) என்பவருக்கும் சொத்துத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில் நேற்று...

திற்பரப்பு: சாலைகள் சீரமைக்க கேட்டு பாஜக ஆர்ப்பாட்டம்

திற்பரப்பு ஊராட்சி அலுவலகம் முன்பாக பாரதிய ஜனதா சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குமரியில் சிவாலயம் ஓட்டம் வருகிற 25-ம் தேதி தொடங்குகிறது. இந்த ஓட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வது விழாவின் சிறப்பாகும். பன்னிரண்டு சிவாலயங்களில் திற்பரப்பு மற்றும் திருநந்திக்கரை கோவில்கள் திற்பரப்பு...

குழித்துறை: முதியவருக்கு பாட்டில் குத்து; 3 பேர் மீது வழக்கு

குழித்துறை அருகே குருமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் தாஸ் (72) சம்பவ தினம் அந்த பகுதியில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக பைக்கில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த லிட்டின் (21) சிபு (21) ஷாஜி (19) ஆகியோர் ஒரே பைக்கில் வந்து கொண்டிருந்தனர். இந்த...

களியக்காவிளை: சிவபார்வதி கோயிலில் மஹா சிவராத்திரி விழா

களியக்காவிளை அருகே உதியன்குளம்கரை செங்கல் ஊராட்சிக்குட்பட்ட மகேஸ்வரத்தில் சிவ பார்வதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம், தேவலோகம், வைகுண்டம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு மகாசிவராத்திரி விழாவையொட்டி, விழாவின் முக்கியமான விழாவான உற்சவ பலி, கோயில் தலைவர் சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி மற்றும் கோயில் தந்திரி...

நித்திரவிளை: பைக் – கார் மோதல்; கூலி தொழிலாளி படுகாயம்

நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (46). கூலித் தொழிலாளி. நேற்று மதியம் இவர் வைக்கல்லூர் பகுதியைச் சேர்ந்த பாகுலேயன் நாயர் (59) என்பவரின் பைக்கில் பின்னால் உட்கார்ந்து நித்திரவிளை பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார். கூனன்விளை என்ற பகுதியில் செல்லும்போது தூத்தூர் பகுதி தாமஸ்நகரைச் சேர்ந்த...