Google search engine

விளவங்கோடு: 2 வாகனங்களில் 3500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பறக்கும் படை தனி வட்டாட்சியர் K. M. பாரதி தலைமையிலான குழுவினர், 19-ம் தேதி அதிகாலையில் திருத்துவபுரம் பகுதியில் சொகுசு காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1500 கிலோ ரேஷன் அரிசியையும், காரோடு பகுதியில் மற்றொரு சொகுசு காரில் 2000 கிலோ அரிசியையும் பறிமுதல்...

நித்திரவிளை: பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

நித்திரவிளை, எஸ்டி மாங்காடு பகுதியைச் சேர்ந்த சாரதா (73) என்பவர், பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றபோது, ரூட்சன் (23) ஓட்டி வந்த பைக் மோதி படுகாயமடைந்தார். குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நித்திரவிளை போலீசார்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விழிப்புணர்வு பேரணி.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகர்கோவில் மாநகரக் கிளை சார்பில் 'குமரியின் குரல்' என்ற முழக்கத்துடன் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. மீனாட்சிபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பிருந்து தொடங்கிய இந்தப் பேரணி, கோட்டாறு நாராயண குரு சிலை வரை சென்றடைந்தது. இந்தப் பேரணியின் போது,...

குளச்சல்: விடுதியில் இருந்து பள்ளி மாணவன் ஓட்டம்

குளச்சல் பகுதியில் கடந்த மாதம் 2 ஆம் தேதி பள்ளிக்குச் செல்லாமல் சுற்றித்திரிந்த 9 வயது சிறுவனை 'நிமிர்' குழுவினர் பிடித்து விசாரித்தபோது, அவன் நாகர்கோவிலைச் சேர்ந்தவன் என தெரியவந்தது. சிறுவன் குளச்சல் உடையார்விளையில் உள்ள தனியார் சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டான். அங்கிருந்த அரசு நடுநிலைப்பள்ளி மாணவன்,...

குமாரபுரம்: டாஸ்மாக் கடை அருகே முதியவர் மர்ம சாவு

குமாரபுரம், மிக்கேல் நகர் பகுதியைச் சேர்ந்த 63 வயதான செல்வராஜ், இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு டாஸ்மாக் கடையில் மது அருந்தச் சென்றுள்ளார். நேற்று காலை டாஸ்மாக் கடை அருகே அவர் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார்...

மார்த்தாண்டம்: ஆஸ்பத்திரி நர்ஸ் கோவையில் திடீர் மாயம்

மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியை சேர்ந்த சதீஷ் - கிரிஜா தம்பதியின் மகள் மோனிஷா (21), கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். சம்பவ தினத்தன்று மருத்துவமனை விடுதியில் இருந்த மோனிஷாவை திடீரென காணவில்லை என அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. பல இடங்களில்...

புதுக்கடை: வீட்டை உடைத்து பணம் பொருட்கள் திருட்டு

கீழ்குளம் பகுதியைச் சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் செல்வன்சனின் வீட்டில், அவரது மனைவி ஜேனட் புஷ்பலதா தனது மகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம், உண்டியலில் இருந்த 15 ஆயிரம்...

முதலமைச்சர் வருகை; பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 24 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். 25 ஆம் தேதி மாவட்டத்தில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இதற்கான முன்னேற்பாடுகளை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று நேரில் ஆய்வு செய்து...

மணவாளக்குறிச்சி: அக்காவை தாக்கிய தம்பி – வழக்குப்பதிவு

மணவாளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த தங்கம் (70) என்பவரை, அவரது தம்பி மணிகண்டன் (59), அவரது மனைவி மீனாராணி (50) மற்றும் மேலும் இருவர் சேர்ந்து தாக்கி, வீட்டின் காம்பவுண்ட் சுவரையும் இடித்தனர். முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது. காயமடைந்த தங்கம் குமரி அரசு மருத்துவக்...

கன்னியாகுமரி: புதிய மின் உற்பத்தி நிலையம்; நிதியமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்ரவரி 17) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை பகுதியில், 1000 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்றும் மின் உற்பத்தி நிலையம் ரூ. 5,320 கோடி முதலீட்டுடன் பொதுத்துறை, தனியார் பங்களிப்புடன் உருவாகும் என்றும்,...