Google search engine

குளச்சல்: மினி பஸ் – கார் மோதல்.. 7 பேர் காயம்

குளச்சலிலிருந்து குறும்பனை நோக்கிச் சென்ற மினி பஸ், குளச்சல் பீச் சந்திப்பில் எதிரே வந்த கார் மோதியதில் பஸ்ஸில் இருந்த சிறுமி மற்றும் காரில் இருந்த வினிஸ்டன், அவரது மனைவி உட்பட 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராணி என்பவர் மட்டும் உள்நோயாளியாக...

அருமனை: தொழிலாளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

அருமனை பகுதியை சேர்ந்த 52 வயது கூலித் தொழிலாளி ராபி, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். நேற்று வீட்டில் ஹாலில் படுத்திருந்த ராபி, மனைவி மற்றொரு அறையில் இருந்தபோது தற்கொலை செய்து கொண்டார்....

குமரி: வனத்துறை அலுவலர் வீட்டில் திருடிய பெண் கைது

மார்த்தாண்டம், வடக்கு தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வனத்துறை ரேஞ்சர் செல்லதுரை சாமுவேல் (73) என்பவரின் வீட்டில் இருந்த 40 பவுன் தங்க நகைகள் மாயமானது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் நடத்திய விசாரணையில், அவரது வீட்டு வேலைக்காரியான கருங்கல் பகுதியைச் சேர்ந்த பிரேமா (40) நகைகளைத் திருடியது...

கருங்கல்: வெனிசுலா அதிபர் கைது ; மார்க்சிஸ்ட் போராட்டம்

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுராவை கைது செய்த அமெரிக்காவின் ஜனநாயக படுகொலையை கண்டித்து, நேற்று கிள்ளியூர் கிழக்கு வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராஜீவ் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மாவட்ட செயற்குழு...

நாகர்கோவில் அருகே மது விற்றவர் கைது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், வடசேரி சப்–இன்ஸ்பெக்டர் குத்தாலிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியின்போது, காந்தி பூங்கா அருகே மது விற்ற புளியவிளை பகுதியைச் சேர்ந்த சிவன் (37) என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 18 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

குளச்சல்: வாக்காளர் சேர்க்கை முகாம் கலெக்டர் பங்கேற்பு

2004 சுனாமி தாக்குதலுக்குப் பிறகு குமரி கடலோர மீனவ கிராமங்களில் இருந்து இடம் பெயர்ந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விழிப்புணர்வு முகாம் குளச்சல் மீன் பிடித் துறைமுகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இதில் குளச்சல் தொகுதி வாக்காளர்...

திருவட்டாறு: தளியல் ஜடாதீஷ்வரர் கோவில் பிரதோஷ விழா

திருவட்டாறு தளியல் ஜடாதீஷ்வரர் கோவிலில் நேற்று இரவு (ஜனவரி 1) பிரதோஷத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கும், நந்தீஷ்வரருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள், குறிப்பாக பெண்கள் கலந்து கொண்டு சிவபெருமானை துதித்து பாடல்கள் பாடினர். சிவபெருமானுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கார...

திருவட்டாறு: ஆதிகேசவன் திருக்கோவில் சார்பில் மகாதீப ஆரத்தி

திருவட்டாறு ஆதி கேசவ பெருமாள் திருக்கோவில் புண்ணிய தீர்த்தங்கள் பராமரிப்பு பக்தர்கள் அறக்கட்டளை சார்பில், ரோகிணி நட்சத்திரத்தையொட்டி பரளியாற்றில் மகா தீப ஆரத்தி நேற்று இரவு நடைபெற்றது. பாபு தலைமை வகிக்க, அகில பாரதிய சன்னியாசிகள் புரவலர் குழு தலைவர் காமராஜ் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில்...

திக்குறிச்சி: மஹாதேவர் ஆலயத்தில் நந்தி ஊட்டு பூஜை

குமரியில் ரிஷப ராசி பரிகார ஸ்தலமான திக்குறிச்சி மஹா தேவர் ஆலயத்தில் நந்தி பகவானுக்கு அரிசிமாவு, பூக்கள், கரும்பு, வாழை, மாம்பழம், ஆப்பிள் போன்ற பல்வேறு வகையான பழங்களால் பிரமாண்ட படையலிட்டு நந்தி ஊட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், மஹா தேவர்...

நாகர்கோவிலில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

குமரி மாவட்டத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு பள்ளிகளில் பணிபுரியும் 20-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், ஊதிய உயர்வு மற்றும் இதர சலுகைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஐடன் சோனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்....