Google search engine
‘‘தீவிர சிகிச்சைக்குப்பின் கடந்த சனிக்கிழமை இரவு மருத்துவமனையில் அமைதியான இரவை கழித்தார் போப் பிரான்சிஸ்’’ என வாடிகன் தெரிவித்துள்ளது. போப் பிரான்சிஸ்(88) சுவாச பிரச்சினை காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாச பாதையில் தொற்று ஏற்பட்டு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ்க்கு கடந்த சனிக்கிழமை ஆஸ்துமா பாதிப்பு அதிகரித்தது. இதையடுத்து அவருக்கு அதிக...
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக டெல்லி புறப்பட்ட அமெரிக்க விமானம் ரோம் நகருக்கு திருப்பிவிடப்பட்டது. இத்தாலி வான் எல்லைக்குள் வந்த அந்த விமானம் அந்நாட்டின் இரண்டு ஃபைட்டர் ஜெட்கள் சூழ பாதுகாப்பாக ரோமில் தரையிறக்கப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விமானம் தரையிறங்கிய பின்னர் நடந்த சோதனையில் அந்த மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதியானது. நடந்தது என்ன? அமெரிக்காவின் ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான...
இந்திய தேர்தலுக்கு உதவுவதற்காக முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் 18 மில்லியன் டாலர் வழங்கியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் அந்தப் பணம் இந்தியாவுக்குத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார். அமெரிக்காவில் நடந்த பழமைவாத அரசியல் செயல்பாடுகள் மாநாட்டில் பேசிய அதிபர் ட்ரம்ப், "இந்திய தேர்தலுக்கு உதவுவதற்காக 18 மில்லியன் டாலர்கள். எதற்காக இது எல்லாம்? நாம் நமது பழைய வாக்குச்சீட்டு முறைக்கு ஏன் செல்லக்கூடாது? பின்பு அவர்களின்...
“உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர ஜெலன்ஸ்கியுடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் புதினுடனான ஆலோசனை சிறப்பாக அமைந்தது” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். 3 ஆண்டுகளாக நடந்துவரும் உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், அவர் அது தொடர்பாக அண்மையில் ரஷ்ய அதிபர் புதினுடன் பேசியுள்ளார். இது தொடர்பாக ஃபாக்ஸ் நியூஸ்...
அமெரிக்காவின் எஃப்பிஐ (FBI) புலனாய்வு அமைப்பின் 9-வது இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் பதவியேற்றுக் கொண்டார். இப்பதவியை இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அலங்கரிப்பது இதுவே முதன்முறை. காஷ் படேல் குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். காஷ் படேல் பதவியேற்பு விழாவில் அவருடன் அவரது காதலி மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். காஷ் படேலுக்கு அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அப்போது, காஷ் படேல்,...
காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், தாய் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள் உட்பட 4 இஸ்ரேலிய பிணைக்கைதிகளின் உடல்களை செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஹமாஸ் இன்று ஒப்படைத்தது. போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து இறந்தவர்களின் உடல்கள் ஒப்படைக்கப்படுவது இதுவே முதல்முறை. இறந்த பிணைக்கைதிகளின் உடல்கள் அடங்கிய சவப்பெட்டிகளை செஞ்சிலுவை சங்கத்தினர் இஸ்ரேலிடம் ஒப்படைத்தனர். அவர்களின் உடல்களை இஸ்ரேல் பெற்றுக்கொண்டதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் உறுதிபடுத்தியுள்ளது. இறந்தவர்களில், பிபாஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஷிரி...
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டு பனாமா வந்துள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக பனாமாவுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பனாமா, நிகராகுவா, கோஸ்டா ரிகா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அமெரிக்காவில் இருந்து பனாமா வந்துள்ள இந்தியர்கள் அனைத்து அத்தியாவசிய வசதிகளையும் கொண்ட ஒரு ஹோட்டலில் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் தங்க வைக்கப்பட்டிருப்பதாக பனாமா அதிகாரிகள் எங்களுக்குத் தெரிவித்துள்ளனர். தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களின்...
கடந்த குளிர்காலத்தில் பனிப்பொழிவு குறைவு காரணமாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் பனி உறைவு எல்லையின் அளவு 150 மீட்டர் குறைந்திருத்தது செயற்கைகோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக ஆர்க்டிக், அண்டார்டிகா துருவ பகுதிகளில் பனிப்பாறைகள் உருகி வருவதாக செய்திகள் வெளியாயின. இதே நிலை கடல் மட்டத்தில் இருந்து 8,849 மீட்டர் உயரத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்திலும் காணப்படுகிறது. எவரெஸ்ட் சிகரத்தின் உச்சி நேபாளம் மற்றும் திபெத் இடையே...
சர்வதேச திரைப்பட தயாரிப்பு மையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்ய மத்திய அரசு தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் வேளையில், இந்திய திரைப்பட திருவிழா இஸ்ரேலில் நேற்று தொடங்கியுள்ளது. மார்ச் 8-ம்தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவில் இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. தொடக்க நாளான நேற்று கிரண் ராவ் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான "லபதா லேடீஸ்" திரைப்படம் திரையிடப்பட்டது. இது, பார்வையாளர்களை வெகுவாக...
இஸ்ரேல் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட 2 குழந்தைகள், அவர்களது தாய் உட்பட 4 பேரின் உடல்கள் அடங்கிய சவப்பெட்டிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் நேற்று ஒப்படைத்தனர். இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதையடுத்து பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்ற இஸ்ரேலியர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் ஒவ்வொரு வாரமும் மூன்று, நான்கு பேராக விடுவித்து வந்தனர். பதிலுக்கு நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்து வந்தது. இதுவரை 24 இஸ்ரேல்...