கவிதாவுக்கு 5 மாதத்தில் ஜாமீன் கிடைத்தது பற்றி சர்ச்சை பேச்சு: தெலங்கானா முதல்வர் மீது அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்
admin - 0
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதா நிபந்தனை ஜாமினில் சமீபத்தில் வெளியே வந்தார். இதுகுறித்து பலர் விமர்சனம் செய்து வரும் நிலையில், தெலங்கானா மாநில முதல்வர்ரேவந்த் ரெட்டியும் விமர்சித்துள்ளார்.
இது குறித்து ரேவந்த் ரெட்டி கூறுகையில், ”நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவுடன் பி.ஆர்.எஸ். கட்சி ரகசிய கூட்டணி வைத்துக்கொண்டு செயல்பட்டது. இதனை நாங்கள் பல...
தொழிநுட்பக் கோளாறு காரணமாக இந்தியர்கள் சென்ற விமானம் குவைத்தில் தரையிறக்கப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டருக்கு கல்ஃப் ஏர் விமானம் நேற்று முன்தினம் புறப்பட்டது. இதில் 60 இந்தியர்கள் உட்பட பலர் பயணித்தனர். இந்நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விமானம் குவைத்தில் தரையிறக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பயணிகள் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று அதிகாலை 4.34 மணிக்கு விமானம் குவைத்திலிருந்து...
இருபது ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகன பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணத்தை கடுமையாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பிஎஸ்-2 மாசு உமிழ்வு விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக கேடு விளைவிப்பவை என வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே, இத்தகைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து படிப்படியாக நீக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒரு வரைவு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 20 ஆண்டுகளுக்கு மேல் பழமையான...
அமராவதி: கடந்த திங்கட்கிழமை இரவு முதல் ஆந்திராவில் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நெல்லூரில் 146 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. தொடர்ந்து மேலும் 2 நாட்களுக்கு கன மழை பெய்ய கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால், நெல்லூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர் விடுமுறையை அறிவித்துள்ளார். கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால்...
7 கோடி பயணிகளை கையாளும் நொய்டா சர்வதேச விமான நிலையம்: இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
admin - 0
நொய்டா ஜேவார் சர்வதேச விமானநிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 28) தொடங்கி வைக்கவுள்ளார். டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு துணையாகச் செயல்படும் வகையில் டெல்லி - என்சிஆர் பிராந்தியத்துக்கான 2-வது சர்வதேச விமான நிலையமாக நொய்டா ஜேவார் விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியா, ஒரு உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக உருவெடுக்கும் பயணத்தில் இந்தத் திறப்பு விழா ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாக அமையும்...
உத்தர பிரதேசத்தில் சிறுமி பாலியல் வழக்கில் சிக்கிய சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மொய்த் கானின் வணிக வளாகம் நேற்று புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
2 மாதங்களுக்கு முன்பு 12 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்தது தொடர்பாக அயோத்தி மாவட்டத்தில் உள்ள பதர்சா நகரில் பேக்கரி நடத்தி வந்த மொய்த் கான் மற்றும் அவரது ஊழியர் ராஜு கான் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் ஜூலை...
இளைஞர்களின் வாழ்வில் புதிய அத்தியாயம்: 71,000 பேருக்கு அரசு பணிக்கான ஆணையை வழங்கி பிரதமர் மோடி பெருமிதம்
admin - 0
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சுமார் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு பணி வழங்கப்பட்டிருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபரில் ரோஜ்கர் மேளா என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இதன்மூலம் மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதன்படி கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் வரை 7 லட்சம் பேருக்கு அரசு பணி...
இந்திய ராணுவத்துக்கு ரூ.30,000 கோடி மதிப்பில் அதி விரைவு வான் பாதுகாப்பு ஏவுகணைகளை (க்யூஆர் - எஸ்ஏஎம்) வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் விரைவில் ஒப்புதல் அளிக்கவுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் பதில் தாக்குதலில் இறங்கியபோது தரைவழி தாக்குதலைவிட வான் வழி தாக்குதல்தான் அதிகமாக இருந்தது. இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் அனுப்பிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் எல்லாம் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இவற்றில் பெரும்பாலனவை துருக்கி மற்றும் சீன...
குஜராத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனத்தை விடுவிக்க ரூ.55 லட்சம் லஞ்சம் கேட்ட 2 ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
குஜராத்தில் நடியாத் பகுதியில் ஜிஎஸ்டி அதிகாரிகள் ஒரு சரக்கு வாகனத்தை மறித்து ஜிஎஸ்டி வரி ரசீதை ஆய்வு செய்துள்ளனர். அதில் குறைகள் இருப்பதாக கூறி சரக்கு வாகனத்தை ஜிஎஸ்டி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அந்த சரக்கு வாகனத்தின் உரிமையாளர் ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் அமர்நாத் கோவர்தன் ராம் சரோஜ், ஆய்வாளர்...
2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் ராணுவ பட்ஜெட் 5 மடங்காகும்: சிஐஐ மற்றும் கேபிஎம்ஜி அறிக்கையில் தகவல்
admin - 0
இந்தியாவின் ராணுவ பட்ஜெட் 2047-ம் ஆண்டுக்குள் 5 மடங்காக அதிகரிக்கலாம். அப்போது ராணுவத்துக்கு செலுவு செய்வதில் 3-வது பெரிய நாடாக இந்தியா மாறும் என இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் உலகளாவிய ஆலோசனை நிறுவனத்தின் (கேபிஎம்ஜி) கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
* இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி 2024-25-ம் ஆண்டில் ரூ.1.6 லட்சம் கோடியாக உள்ளது. இது 20147-ம் ஆண்டில் ரூ.8.8 லட்சம் கோடியாக...










