Google search engine
அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் படம், ‘லவ் மேரேஜ்’. சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். அஸ்யூர் பிலிம்ஸ், ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் ஸ்வேதா, நிதி சாகர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில்...
உமா பிக்​சர்ஸ் மூலம் படங்​கள் தயாரித்து வந்த ஆர்​.எம்​.ராம​நாதன் செட்​டி​யார், தியாக​ராஜ பாகவதரின் நெருங்​கிய நண்​பர். சென்​னை​யில் இருந்த நியூடோன் ஸ்டூடியோ​வின் நிறு​வனர்​களில் ஒரு​வ​ராக​வும் இருந்த அவருக்​கு, ‘ஆடியோகி​ராஃபி’​யில் தீவிர ஆர்​வம். அதனால் தனது நிறு​வனம் மூலம் தயாரித்த பெரும்​பாலான படங்​களில் ‘ரெக்​கார்​டிஸ்​டா’க​வும் பணி​யாற்​றி​னார். அவர் தயாரித்த ‘உதயணன் வாசவதத்​தா’ படத்​தி​லும் அப்​படித்​தான். இது புராணம் கலந்த கற்​பனை கதை. உத்தர பிரதேசத்​தில் கங்கை மற்​றும் யமுனை ஆற்​றின் அரு​கில்...
விக்ரம் பிரபு நடித்துள்ள ‘லவ் மேரேஜ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் ‘லவ் மேரேஜ்’. இப்படம் ஜூன் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ் உள்ளிட்ட பலர் விக்ரம் பிரவு உடன் நடித்துள்ளனர். இதில் சத்யராஜ் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒளிப்பதிவாளராக மதன் கிறிஸ்டோபர்,...
தமிழில் ‘வழக்கு எண் 18/9’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘மாநகரம்’, ‘இறுகப்பற்று’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரீ. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பகிர்ந்த புகைப்படங்கள், வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. மெலிந்த உடல், நீண்ட தலைமுடி என வித்தியாசமாக தோற்றத்துடன் காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து பலரும் அவர் எங்கே இருக்கிறார், அவருக்கு என்ன ஆனது? என்று சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். ஸ்ரீ...
‘ஆர்.ஆர்.ஆர்’ பட வெற்றிக்குப் பிறகு மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இதில் பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மாதவனும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கதைப்படி, இந்த படத்தின் முக்கியமான காட்சிகள் வாரணாசியில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் அதிகமுள்ள அங்கு படமாக்கப்பட முடியாது என்பதால், ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைக்க உள்ளனர். நிஜ வாரணாசியை பிரதிபலிக்கும் வகையில் ரூ.50...
சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன், விஷ்வா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘மெட்ராஸ் மேட்னி’. கார்த்திகேயன் மணி இயக்கிய இந்தப் படம் கடந்த 6-ம் தேதி வெளியானது. இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் வெற்றிவிழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர். நடிகர் காளி வெங்கட் பேசும்போது, ‘‘இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் என் தந்தையை நினைவுபடுத்தியது. அவருக்குச் சமர்ப்பிக்க, இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது...
சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள மலையாளப் படம், 'ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா'. ஜூன் 27-ல் வெளியாக இருக்கிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனுபமா, மலையாள சினிமாவில் தன்னை நிராகரித்ததாகத் தெரிவித்துள்ளார். 'பிரேமம்' படம் மூலம் அறிமுகமான அனுபமா, தமிழ், தெலுங்கில் நடித்து வந்தாலும் மலையாளத்தில் அதிகம் நடிக்கவில்லை. இதனால், மலையாள படங்களில் அதிகம் நடிக்காதது ஏன் என்று அவரிடம் கேட்டபோது, “மலையாள சினிமாவில் என்னை...
‘தடயம்’ படத்துக்குப் பிறகு எழுத்தாளர் தமயந்தி இயக்கியிருக்கும் திரைப்படம், ‘காயல்’. காயத்ரி சங்கர், லிங்கேஷ் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஜே ஸ்டூடியோஸ் சார்பில் ஜேசு சுந்தர்மாறன் தயாரித்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கிற இந்தப் படம் பற்றி தமயந்தியிடம் பேசினோம். ‘காயல்’ எதை பேசுற படம்? காதலுக்கு எதிரா சாதி மாதிரியான கொடுமைகள் இன்னும் இருக்குங்கறதை சொல்ற படம் இது. தற்கொலையை எதிர்த்து இயக்கம் நடத்திட்டு இருக்கிற ஒரு பொண்ணு,...
விஜய் பிறந்த நாளன்று ‘ஜனநாயகன்’ படத்தின் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. ஜூன் 22-ம் தேதி விஜய் தனது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். அன்றைய தினம் ‘ஜனநாயகன்’ படத்தின் டீஸரை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் ஹெச்.வினோத்...
அதர்வா நடித்திருக்கும் ‘டிஎன்ஏ’, வரும் 20-ம் தேதி வெளியாகிறது. ஒருநாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நிமிஷா சஜயன் நாயகியாக நடித்திருக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம் பற்றி அதர்வாவிடம் பேசினோம். ‘டிஎன்ஏ’ என்ன மாதிரியான கதையை பேசுது? இது ஃபேமிலி ஆடியன்ஸை குறி வச்சு எடுத்திருக்கிற படம். சமூகத்துல புறக்கணிக்கப்படற இரண்டு பேர், ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்கிறாங்க. அவங்க...