சிபி சத்யராஜ் நாயகனாக நடித்துள்ள க்ரைம் த்ரில்லர் படமான ‘டென் ஹவர்ஸ்’ வரும் 18- தேதி வெளியாகிறது. இதை ஃபைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார். சரவணன், கஜராஜ், ராஜ் ஐயப்பா, தங்கதுரை, குரேஷி, முருகதாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் மூலம் இளையராஜா கலியபெருமாள் இயக்குநராக அறிமுகமாகிறார்.
படம் பற்றி சிபி சத்யராஜ் கூறும்போது, “சென்னையிலிருந்து கோவை செல்லும் ஆம்னி பேருந்தில் ஒரு கொலை நடக்கிறது. அதை...
ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ஊர்வசி ரவுதெலாவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்தியில் பிரபல நடிகையாக இருப்பவர் ஊர்வசி ரவுதெலா, தமிழில் லெஜண்ட் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதுதவிர தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். ஏராளமான ஆல்பம் பாடல்களிலும் தோன்றியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று (பிப்.25) ஊர்வசி ரவுதெலா தனது...
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா உட்பட பலர் நடித்தபடம், ‘கேம் சேஞ்சர்’. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரித்தார். ஜன.10-ம் தேதி வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்தப் படத்தில், குண்டூர் மற்றும் விஜயவாடாவைச் சேர்ந்த 350 பேர் துணை நடிகர்களாகப் பங்கேற்றனர். இணை இயக்குநர் ஸ்வர்கன் சிவா என்பவர் அவர்களுக்குத் தலா ரூ.1,200 தருவதாகக் கூறியிருந்தாராம். ஆனால் படம்...
தமிழகத்தில் ரூ.100 கோடி வசூலை கடந்து, அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ புதிய சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படம் ஏப்.10-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியான...
விஜய் சேதுபதி நடித்துள்ள ‘முத்து என்கிற காட்டான்’ வெப்தொடரை மணிகண்டனும் அஜித்குமாரும் இயக்கியுள்ளனர். இதில் இந்தி நடிகர் மிலிந்த் சோமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் தமிழுக்கு வந்துள்ளார். இத்தொடர் தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டாரில் மார்ச் 27-ம் தேதி வெளியாகிறது.
இத்தொடரில் நடித்தது பற்றி மிலிந்த் சோமன் கூறியதாவது: நான் முதல் தமிழ்ப்படத்தில் நடித்த அனுபவம் மகிழ்ச்சியானது....
நடிகருக்காக விசில் அடிக்கலாம். ஆனால், நாட்டை தூக்கிக் கொடுக்க முடியாது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
பழநி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் என்.பாண்டி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, அக்கட்சியின் இளைஞர் அணி, மாணவர்கள் அணி ஒருங்கிணைத்து நடத்திய இளைஞர் கலை விழா நேற்று நடைபெற்றது.
அதில், நடிகர் பிரகாஷ்ராஜ் பங்கேற்று பேசியதாவது: தமிழகத்தில் நடக்கவிருக்கும் தேர்தல், திராவிட மாடல், அடிமை மாடல், சினிமா மாடல்...
‘சூப்பர் சிங்கர்’ மூலம் பிரபலமான பூவையார் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ‘ராம் அப்துல்லா ஆண்டனி’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
தவறான பாதையில் செல்லும் பள்ளி மாணவர்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. த.ஜெயவேல் இயக்கி வருகிறார். அன்னை வேளாங்கண்ணி ஸ்டூடியோஸ் சார்பில் கிளமண்ட் சுரேஷ் தயாரிக்கிறார்.
அஜய் அர்னால்ட் , அர்ஜுன், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சாய் தீனா, கிச்சா ரவி, சாம்ஸ், வினோதினி வைத்தியநாதன் என பலர்...
நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் கதை எழுதி தயாரிக்கும் படத்தில் மமிதா பைஜு நாயகியாக நடிக்கிறார். நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இப்படத்தில் அஸ்வத் மாரிமுத்து, தெலுங்கு நடிகர் சிவாஜி, சுவாசிகா, அனாமிகா மகி, லிசி ஆண்டனி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப் படத்துக்குச் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். பிரதீப் ரங்கநாதனிடம் பணியாற்றிய 6 உதவி இயக்குநர்கள் இணைந்து, தி ஆல்ஃபா யூனிட் என்ற...
விஜய், சூர்யா நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் நவம்பர் 21-ம் தேதி மறுவெளியீடு செய்யப்பட இருக்கிறது.
விஜய்யின் பழைய ஹிட் படங்கள் தற்போது மறுவெளியீடு செய்யப்பட்டு வருகின்றன. ‘கில்லி’, ‘சச்சின்’ உள்ளிட்ட படங்களின் வரிசையில் ‘ப்ரண்ட்ஸ்’ படமும் இணைந்திருக்கிறது. இப்படத்தினை டிஜிட்டல் முறையில் 4கே தொழில்நுட்பத்தில் மாற்றி, நவம்பர் 21-ம் தேதி வெளியிடவுள்ளார்கள். இதற்காக போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள்.
கடந்த 2001-ம் ஆண்டு மறைந்த இயக்குநர் சித்திக் இயக்கத்தில் வெளியான படம் ‘ப்ரண்ட்ஸ்’....
‘தோனி கபடி குழு', ‘கட்சிக்காரன் ' படங்களை இயக்கிய ப.ஐயப்பன், அடுத்து இயக்கியுள்ள படம், ‘உழவர் மகன்’. இதில் நாயகனாக கவுஷிக், நாயகிகளாக சிம்ரன் ராஜ், வின்சிட்டா ஜார்ஜ் நடித்துள்ளனர். மேலும் விஜித் சரவணன், யோகிராம், ரஞ்சன் குமார், சிவசேனாதி பதி, குமர வடிவேல் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர். இதை சுபலட்சுமி ஃபிலிம்ஸ் சார்பாக கே.முருகன் தயாரித்துள்ளார். நா.ராசா, இணை தயாரிப்பு செய்கிறார். ஆக்ஷன் ரியாக்ஷன் சார்பில்...









