காதலை மையப்படுத்தி உருவாகி வரும் ‘லவ் புராஜெக்ட்’ படத்தை டி.ஐ.கபில் ஹீரோவாக நடித்து இயக்குகிறார். இவர் பிரதீப் ரங்கநாதனுடன் குறும் படத்தில் பணியாற்றியவர்.
சங்கீதா, சக்திவேல், குண்டு சத்யா, வினோத் விஜய் சேனாதிபதி ஆகியோர் நடித்துள்ளனர். சாதிக் கபீர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு சிமியோன் டெல்பர் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குநர் கபில் கூறும்போது, “இன்றைய இளைஞர்களின் காதல் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் படம் இது. காதலை...
‘மன்னர் வகையறா’ படத்திற்காக வாங்கிய ரூ.4.5 கோடி கடன் வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, மேல்முறையீட்டைக் கருத்தில் கொண்டு தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் விமல் நடித்த திரைப்படம் ‘மன்னர் வகையறா’. இந்தப் படத்தை தயாரிக்க நடிகர் விமல், பைனாஸ்சியர் கோபி என்பவரிடமிருந்து ரூ.4.5 கோடி கடனாக பெற்றுள்ளார். படம் வெளியான பின்னரும் அந்தத் தொகையை அவர் வழங்கவில்லை. பின்னர்,...
கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, சென்சார் பிரச்சினை, இணையத்தில் முழுப் படமும் லீக், ஏ சான்றிதழ் என பல சிக்கல்களைக் கடந்து ஒருவழியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது தமிழக முதல்வர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’.
ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத என்டர்டெயினராக இருந்துவந்த விஜய் தனது கடைசித் திரைப்படமாக அறிவித்துவிட்ட இந்தப் படம் அவரது பிரியாவிடைக்கு நியாயம் செய்ததா என்று பார்க்கலாம்.
மதுரை சிறையில்...
மாணவர்கள் போராடுவதற்கான ஒரு இடத்தை அரசே நிர்ணயித்துக் கொடுக்க வேண்டும் என்று இயக்குநர் பா.ரஞ்சித் கோரிக்கை வைத்துள்ளார்.
டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நீலம் பண்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், பா.ரஞ்சித், நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியதாவது: “தமிழகத்தில் போராட்டத்தில்...
யோகிபாபு நடிப்பில் உருவாகி வரும் ‘காகங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
‘காக்கா முட்டை’ மற்றும் ‘குற்றமே தண்டனை’ போன்ற தேசிய விருது பெற்ற திரைப்படங்களின் எழுத்தாளரான ஆனந்த் அண்ணாமலை, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு ஆகிய அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்று இயக்கியுள்ளார். இப்படத்தில் கிஷோர், யோகி பாபு, விதார்த், லிஜோமோல் ஜோஸ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மனித...
‘தினந்தோறும்’ நாகராஜ் இயக்கும் படத்துக்கு ‘ஆகாயம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் ‘கன்னி மாடம்’ ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார்.
கதாநாயகியாக ஆலிஷா மிராணி அறிமுகமாகிறார். மேலும் ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயப்பிரகாஷ், கிரி துவாரகிஷ் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டெல்டா டாக்கீஸ் சார்பில் ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திகா தேவி இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ரகு நந்தன் இசை அமைத்துள்ளார். இந்தப்...
அர்ஜுன் தாஸ், அன்னா பென் முதன்மை பாத்திரங்களில் நடித்த படம் ‘கான் சிட்டி’. இதில் யோகிபாபு, வடிவுக்கரசி, குழந்தை நட்சத்திரம் அகிலன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். இப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படக்குழுவின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தில் பணியாற்றியவர்கள் பங்கேற்றனர்.
நடிகை வடிவுக்கரசி பேசும்போது,...
ராகவன் மற்றும் விஜயபாஸ்கர் முதன்மைக் கதா பாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘தட்டுவண்டி’.
இதில் திலீபன், மேரி பென்சி குளோரியா, தங்க துரை என பலர் நடித்துள்ளனர். இப்படத்தை, ‘பில்டர் கோல்டு’ திரைப்படத்தை இயக்கிய விஜயபாஸ்கர் இயக்கியுள்ளார்.
சர்வைவல் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. தற்போது பாடல் பதிவு, பின்னணி இசைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆடை வடிவமைப்பு, சிகை அலங்காரம்: திரையை உயிர்ப்பிக்கும் காட்சிமொழி | ஒளி என்பது வெளிச்சமல்ல 42
admin - 0
திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் திரையில் தோன்றும் தருணத்தில் பார்வையாளர்கள் முதலில் கவனிப்பது அவரது தோற்றத்தைத்தான். அந்த தோற்றத்தை உருவாக்குவதில் ஆடை வடிவமைப்பாளர், சிகை அலங்காரக் கலைஞர், ஒப்பனையாளர், கலை இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோர் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர்.
சிறந்த ஆடையலங்காரம் என்பது வெறும் உடை மட்டுமே அல்ல; அது கதாபாத்திரத்தின் வாழ்க்கை வரலாறு, சமூக நிலை, மனநிலை மற்றும் கதையின் பயணத்தை வெளிப்படுத்தும் அமைதியான காட்சி மொழியாகும்.
ஆடை வடிவமைப்பின் தொடக்கம்
ஓர்...
“இந்தியா பொய்களை உற்பத்தி செய்வதில் முதலிடத்தில் இருக்கிறது. சாதி, மதங்களை வைத்து பொய்கள் பரப்பப்படுகின்றன. ஒரு பொய், மனிதனை முட்டாளாக்கிவிடும். இதை தடுக்கச் சட்டங்கள் தேவை. ‘ஜனநாயகன்’ வெறுப்புக்கு எதிரான படம். தனி நபர்களை குறிவைத்து ‘ஜனநாயகன்’ எடுக்கப்படவில்லை” என அப்படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘ஜனநாயகன்’ படத்துக்கு நிறைய தடைகள், பிரச்சினைகள் இருக்கின்றன. இதைத் தாண்டி மக்கள் இப்படத்துக்கு ஆதரவு தர...










