சிறையிலேயே பாஜக கவுன்சிலர் பதவியேற்கலாம்: மக்கள் தீர்ப்பை நிராகரிக்க முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவு

0
19

பாஜக கவுன்​சிலர் சுகதன் சிறை​யிலேயே பதவியேற்​கலாம் என்று கேரள உயர் நீதி​மன்​றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த டிசம்​பரில் கேரளா​வில் உள்​ளாட்​சித் தேர்​தல் நடைபெற்றது. இதில் திருவனந்தபுரம் மாநராட்சியை பாஜக கைப்பற்றியது. புதிய கவுன்​சிலர்​கள் பதவி​யேற்​பின்​போது பாஜகவை சேர்ந்த 20 கவுன்​சிலர்​கள், உள்​ளூர் தெய்​வங்​களின் பெயரில் உறு​தி​மொழி ஏற்​றனர். இது சட்​டப்​படி செல்​லாது, 20 கவுன்​சிலர்​களும் புதி​தாக பதவி​யேற்க வேண்​டும் என்று கேரள உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

இதன்​படி 19 கவுன்​சிலர்​கள் சட்​டப்​பூர்​வ​மாக பதவி​யேற்​றுக் கொண்​டனர். ஆனால் 35-வது வார்டு பாஜக கவுன்​சிலர் சுகதன் மட்​டும் பதவி​யேற்​க​வில்​லை. உள்​ளூர் கோயில் திரு​விழா​வில் ஏற்பட்ட மோதல் தொடர்​பாக கடந்த ஜூன் மாதம் அவர் கைது செய்​யப்​பட்​டார். கேரள சமூக விரோத தடுப்பு சட்​டத்​தின் (கேஏஏபிஏ) கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்டு உள்​ளது.

கடந்த மாத இறு​தி​யில் திரு​வனந்​த​புரம் மாநக​ராட்சி கூட்​டம் நடை​பெற்​றது. அப்​போது பாஜக கவுன்​சிலர் சுகதனை பதவி நீக்கம் செய்ய வேண்​டும் என்று கம்​யூனிஸ்ட் கட்​சிகள், காங்​கிரஸ் வலி​யுறுத்​தின. இதையடுத்து மாநக​ராட்சி மன்​றக் கூட்​டத்​தில் மிகப்​பெரிய அளவில் மோதல் ஏற்​பட்​டது.

கேரள நகராட்சி சட்​டத்​தின்​படி தொடர்ந்து 3 கூட்​டங்​களில் பங்கேற்​காத கவுன்​சிலர் தகுதி நீக்​கம் செய்​யப்​ப​டலாம். இதன்​படி சுகதனை பதவி நீக்​கம் செய்ய வேண்​டும் என்று வலியுறுத்தப்பட்டு வரு​கிறது. இதனிடையே திரு​வனந்​த​புர மாநகராட்சி கவுன்​சில​ராக பதவி​யேற்க சிறப்பு அனு​மதி வழங்க வேண்​டும் என்று சுகதன் சார்​பில் கேரள உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனுவை நீதிபதி குன்னி கிருஷ்ணன் விசா​ரித்​தார்.

இரு தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி குன்​னி கிருஷ்ணன் நேற்று பிறப்பித்த உத்​தரவில், “பொது​ மக்​கள் வாக்​களித்து சுகதனை தேர்வு செய்​துள்​ளனர். மக்​களின் தீர்ப்பை நிராகரிக்க முடி​யாது. திருச்​சூரில் உள்ள வையூர் மத்​திய சிறை​யில் அடைக்கப்​பட்​டுள்ள சுகதன், சிறை​யிலேயே கவுன்​சில​ராக பதவியேற்கலாம். ஜூலை 14-ம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு சிறை​யில் பதவி​யேற்பு விழாவை நடத்த சிறை நிர்​வாகம் ஏற்​பாடு செய்ய வேண்​டும். இதில் செய்​தி​யாளர்​கள் பங்​கேற்க அனு​மதி வழங்க வேண்​டும்” என்று கூறப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here