பாகிஸ்​தானுட​னான இருதரப்பு தொடருக்​கு தடை: மத்​திய விளையாட்டு அமைச்சகம் அறிவிப்பு

0
26

பாகிஸ்​தானுட​னான இருதரப்பு விளை​யாட்டு தொடருக்​கான தடை தொடர்​கிறது என்று மத்​திய விளையாட்டு அமைச்​சகம் அறி​விப்பு வெளி​யிட்​டுள்​ளது.

தேசிய விளை​யாட்டு சம்​மேளனங்​கள் (என்​எஸ்​எஃப்), இந்​திய ஒலிம்​பிக் சங்​கம் (ஐஓஏ), இந்​திய விளை​யாட்டு ஆணை​யம் (சாய்) உள்​ளிட்ட விளை​யாட்டு அமைப்​பு​களுக்கு மத்​திய விளையாட்டுத்துறை அமைச்​சகம் சார்​பில் நேற்று ஒரு சுற்​றறிக்​கை அனுப்பப்பட்டுள்​ளது.

அதில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: பாகிஸ்​தானுட​னான இருதரப்பு விளை​யாட்​டுக்​கான தடையை விளை​யாட்​டுத் துறை அமைச்சகம் நீட்​டித்​துள்​ளது. அதாவது இந்தியா, பாகிஸ்​தான் மோதும் இரு நாடு​களிடையி​லான கிரிக்​கெட், ஹாக்​கி, கால்​பந்து உள்ளிட்ட தொடர்​களுக்​கான தடை நீடிக்​கிறது. இதனால் பாகிஸ்தானில் நடை​பெறும் இருதரப்பு போட்​டி​யில் இந்​தியா பங்கேற்காது.

அதே​போல் இந்​தி​யா​வில் நடை​பெறும் இருதரப்பு போட்​டி​யில் பாகிஸ்​தான் அணி​கள் வந்து பங்​கேற்​ப​தை​யும் விளை​யாட்டு அமைச்​சகம் அனு​ம​திக்​காது. அதே நேரத்​தில் சர்​வ​தேச விளை​யாட்டு அமைப்​பு​கள் இந்​தி​யா​விலோ அல்​லது வெளி​நாடுகளிலோ சர்​வ​தேச விளை​யாட்​டுப் போட்​டிகளையோ அல்​லது பல நாடு​கள் பங்​கேற்​கும் போட்​டிகளையோ நடத்​தும்​போது அந்​தப் போட்​டிகளில் நமது விளை​யாட்டு வீரர்​களின் நலனைக் கருத்​தில் கொண்டு இந்திய அணி, தனிப்பட்ட வீரர்கள் பங்​கேற்​பர்.

மேலும், இந்​தி​யா​வில் சர்​வ​தேச போட்​டிகள் நடை​பெறும்​போது பல்​வேறு நாடு​களைச் சேர்ந்த விளை​யாட்டு வீரர்​கள், அணி​களைச் சேர்ந்த மேலா​ளர் உள்​ளிட்ட அதி​காரி​கள், உடலியக்க நிபுணர்​கள், சர்​வ​தேச விளை​யாட்டு நிர்​வாக அமைப்​பு​களின் நிர்​வாகி​கள் ஆகியோ​ருக்​கான விசா நடை​முறை​களை எளிமைப்​படுத்த அரசு முடிவு செய்​துள்​ளது. இதன் மூலம், இந்​தி​யாவை ஒரு விருப்​பத்​துக்​குரிய விளை​யாட்டு மைய​மாக நிலைநிறுத்​து​வதற்​கான நமது உறு​திப்​பாட்டை அமைச்​சகம் மீண்​டும் முன்​னெடுத்​துள்​ளது.

அதே​போல் வெளி​நாடு​களில் சர்​வ​தேச போட்​டிகள் நடை​பெறும்​போது அதில் பாகிஸ்​தான் பங்​கேற்​றால் அந்​தப் போட்​டியில் இந்திய அணி​யோ, தனிப்​பட்ட வீரர்​களோ பங்​கேற்​கத் தடை இல்லை. அதே​போல் இந்​தியா நடத்​தும் சர்​வ​தேச போட்​டிகளில் பாகிஸ்​தான் அணி​யோ, தனிப்​பட்ட வீரர்​களோ பங்​கேற்​கத் தடை இல்லை. இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here