பிஹாரில் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: முக்கிய குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீ​ஸார்

0
26

பிஹார் மாநிலம், ஜமு​யில் 10-ம் வகுப்பு மாண​வி​யிடம் பாலியல் அத்​து​மீறலில் ஈடு​பட்​ட​தாகக் கூறப்​படும் வழக்​கில், முக்கிய குற்​ற​வாளி நந்​தன் யாதவ் காவலில் இருந்து தப்பி ஓடிய​போது போலீ​ஸார் அவரது காலில் துப்​பாக்​கி​யால் சுட்​டுப் பிடித்தனர்.

பிஹார் மாநிலம், ஜமுய் நகரில் கடந்த 19-ம் தேதி பயிற்சி வகுப்பை முடித்​து​விட்டு 10-ம் வகுப்பு படிக்​கும் மாணவி ஒரு​வர் தன்​னுடன் படிக்​கும் சக மாணவர் ஒரு​வருடன் வீட்​டுக்கு சென்று கொண்​டிருந்​தார். அப்​போது, அவர்​களை ஒரு கும்​பல் வழிமறித்து தாக்​கியது. அந்​தக் கும்​பலில் இருந்த நந்​தன் யாதவ், மாணவியைப் பிடித்து இழுத்​துச் சென்​றதுடன், அவரிடம் பாலியல் அத்​து​மீறலில் ஈடு​பட்​ட​தாக​வும் கூறப்​படு​கிறது.

இந்த வழக்​கில் இது​வரை 5 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். மேலும், 2 சிறார்​களுக்​கும் இதில் தொடர்பு இருப்​ப​தாக போலீ​ஸார் தெரி​வித்​துள்​ளனர்.

இவ்​வழக்கு விசா​ரணை​யின் ஒரு பகு​தி​யாக சம்​பவம் நடை​பெற்ற இடத்​துக்கு நந்​தன் யாதவை போலீ​ஸார் அழைத்​துச் சென்​றனர். அப்​போது, காவலில் இருந்து தப்​பிச் செல்ல முயன்ற அவரது காலில் துப்​பாக்​கி​யால் சுட்​டுப் பிடித்​த​தாக போலீ​ஸார் தெரிவித்தனர்.

‘இந்த சம்​பவத்​தில் தொடர்​புடைய அனை​வர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்​று, பிஹார் துணை முதல்​வர் விஜய் குமார் சவுத்ரி தெரி​வித்​துள்​ளார். சிறுமி​யின் அடையாளத்தை வெளிப்​படுத்​தும் வகை​யில் வீடியோ அல்​லது தகவல்​களைப் பகிர்​வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்​று, ஜமுய் மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் விஸ்​வஜீத்தயாள்​ எச்​சரித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here