69-வது கிராமி விருதுக்கு பாரதி பாடல் பரிந்​துரை: பாடகர்கள் தேவன் ஏகாம்பரம், சுஷாவுக்கு குவிகிறது பாராட்டு

0
22

சிறந்த உலக இசை பிரி​வில் 69-வது கிராமி விருதுக்​குப் பாரதியாரின் பாடல் பரிந்​துரை செய்​யப்​பட்டு சாதனை படைத்துள்​ளது. பாடகரும் இசையமைப்​பாள​ரு​மான, தேவன் ஏகாம்பரம் ‘காதலர் தினம்’ படத்​தில் இடம்​பெற்ற ‘ஓ மரியா’, ‘குஷி’ படத்​தில் ‘மேக்​கரினா..’ உள்​பட ஏராளமான பாடல்​களைப் பாடியுள்​ளார். இவரும் பாடகி சுபிக் ஷா ரங்​க​ராஜன் என்​கிற சுஷாவும் இணைந்து பாரதி​யார், கிருஷ்ணரை பற்றி பாடிய ‘வருவாய் வரு​வாய் கண்ணா’ என்ற பாடலை கர்னாடக மற்​றும் நவீன இசையுடன் இணைந்து புதிதாக உரு​வாக்கி வெளியிட்டிருந்தனர்.

இப்​பாடல், 69-வது கிராமி விருதுக்கு, சிறந்த உல​களாவிய இசைப் படைப்​புக்​கான பிரி​வில் பரிந்​துரைக்​கப்​பட்​டுள்​ளது. ஒரு தமிழ் பாடல் கிராமி விருதுக்குப் பரிந்​துரைக்​கப்​படுவது இதுவே முதல்​முறை. இதுபற்றி தேவன் ஏகாம்​பரம் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “எங்​களின் ‘வரு​வாய்’ பாடல் 69-வது கிராமிய விருதுகளில் சிறந்த உலக இசைப் பிரி​வில் பரிந்​துரைக்​கப்​பட்​டிருப்​ப​தால் மகிழ்ச்சியும் பெரு​மையும் பெரு​மிதமும் அடைகிறேன்.

கிராமிய விருதுக்​குப் பரிந்​துரைக்​கப்​படும் முதல் தமிழ்ப் பாடல் இது என்​ப​தால் மிகவும் சிறப்​பான தருணம். அது​வும் பாரதியாரின் பாடல் என்​ப​தில் மிகுந்த மகிழ்ச்சி. இப்​போது எனக்​குள்​ளிருக்​கும் எல்லை​யற்ற மகிழ்ச்​சி​யைக் கட்​டுப்​படுத்த முடியவில்லை! ஏஞ்​சலிக் கிட்ஜோ, பாரெல் வில்​லியம்ஸ், ஷகிரா மற்​றும் பர்னா பாய் போன்ற உல​களாவிய ஜாம்​பவான்​களு​டன் இணைந்து எனது முதல் கிராமிய விருது பரிந்​துரையைப் பெறுவது நம்​பமுடி​யாத​தாக இருக்​கிறது” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்​களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்​துகள் குவிந்து வரு​கின்றன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here