தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் வங்கதேசம் அணி 400 ரன்கள் குவிப்பு

0
17

 வங்கதேசம் – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசம் அணி முதல் நாள் ஆட்டத்தில் 92 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 327 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தவூஹித் ஹிர்தோய் 137, தன்ஸித் ஹசன் 67 ரன்கள் விளாசினர்.

லிட்டன்ஸ் தாஸ் 92 ரன்களுடன் களத்தில் இருந்தார். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 101.2 ஓவர்களில் 400 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தனது 8-வது சதத்தை விளாசிய லிட்டன் தாஸ் 179 பந்துகளில், ஒரு சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 120 ரன்கள் எடுத்த நிலையில் பேட்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.

மெஹிதி ஹசன் மிராஸ் 10, ஹசன் மஹ்மூத் 16, தஸ்கின் அகமது 17 ரன்களில் வெளியேறினர்.

தென் ஆப்பிரிக்க அணி சார்பில் காகிசோ ரபாடா 5, டேன் பேட்டர்சன் 4 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 62 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்திருந்தது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here