பள்ளிகளில் அரசு சாராத நிகழ்ச்சிகளுக்கு தடை: அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

0
19

இனிவரும் காலங்​களில் பள்ளிகளின் அனு​மதி இன்றி எவரும் உள்ளே நுழைய அனு​ம​தி​யில்​லை. அரசு நடத்​தும் அதி​காரப்​பூர்வ நிகழ்ச்​சிகளைத் தவிர, பிறந்​த​நாள் விழாக்​கள் அல்​லது அரசு சாராத எந்​த வொரு நிகழ்ச்​சி​யும் பள்​ளி​களில் நடத்​தக் கூடாது என பள்​ளிக்​கல்​வித்​ துறை அமைச்​சர் ராஜ்மோகன் தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அறி​வுப்​பண்​ணை​கள் கல்விக்​கூடங்​கள் என்​பவை காட்​சிக்​ கூடங்​கள் அல்ல; அதே​போல் பள்​ளி​கள் அரசி​யல் மேடைகளும் அல்ல. அவை அடுத்த தலை​முறையை உரு​வாக்​கும் அறி​வுப்​பண்​ணை​கள்.

எனவே, இனிவரும் காலங்​களில் பள்​ளி​களின் அனு​மதி இன்றி எவரும் உள்ளே நுழைய அனு​ம​தி​யில்​லை. அரசு நடத்​தும் அதி​காரப்​பூர்வ நிகழ்ச்​சிகளைத் தவிர, பிறந்​த​நாள் விழாக்​கள் அல்​லது அரசு சாராத எந்​தவொரு நிகழ்ச்​சி​யும் பள்​ளி​களில் நடத்​தப்​படக் கூடாது.

அரசி​யல் கட்​சி​யினரோ தனி​யார் அமைப்​பினரோ மாணவர்​களை நேரடி​யாகச் சந்​திக்க அனு​மதி இல்​லை. மாணவர்​கள் வகுப்​பறை​யில் கற்​கும் ஒவ்​வொரு நொடி​யும் இந்த நாட்​டின் எதிர்​காலத்தை வடிவ​மைக்​கும் பொன்​னான நேரம்.

அந்த நேரத்​தில் எந்த காரணத்​துக்​காக​வும் தேவையற்ற இடையூறுகள் ஏற்​படு​வதை தவிர்க்க வேண்​டும். ஆசிரியர்​களின் கற்​பித்​தல் பணி​யும், மாணவர்​களின் கவன​மும் சிதை​யாமல் இருப்​பதை உறுதி செய்​வது நமது முதன்மை பொறுப்​பு.

பள்ளி வளாகங்​கள் விழாக்​கள் நடத்​தும் இடமாக இல்​லாமல், அறி​வார்ந்த சிந்​தனை​கள் வளரும் இடமாக மாற வேண்​டும். மேலும், பள்​ளி​களில் நடை​பெறும் அனைத்து நிகழ்​வு​களுக்​கும் உரிய ஒழுங்​கு​ முறை மற்​றும் பாது​காப்பை உறுதி செய்​யும் வகை​யில் விரி​வான வழி​காட்டு நெறி​முறை​கள் பள்​ளிக்​கல்​வித் ​துறை சார்​பில் விரை​வில் வெளி​யிடப்​படும். இவ்​வாறு தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here