அருமனை: சாலையோரம் கிடக்கும் மரத்தால் அபாயம்

0
40

அருமனை அருகே தேவிகோடு ஊராட்சிக்கு உட்பட்ட குறக்கோடு புலியூர் சாலையோரம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பகுதியில் நின்ற மாமரம் ஒன்று வெட்டப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ராட்சத மரத்தின் துண்டுகள் அகற்றப்படாமல் சாலையோரம் பல வருடங்களாக கிடக்கிறது. அந்த மரத்தின் துண்டுகள் அரிக்கப்பட்டு விஷ ஜந்துக்கள் வாழும் இடமாக மாறியிருக்கிறது. சாலை மார்க்கமாக மக்கள் நடந்து செல்லும்போது பாம்புகள் சீறிப்பாய்ந்து சாலையை கடந்து செல்லும் சம்பவம் நடக்கிறது. எனவே அந்த பகுதி வழியாக இரவில் நடந்து செல்ல பொதுமக்கள் அச்சமடைகின்றனர். அதேபோல் சாலையில் கனரக வாகனங்கள் வரும்போது எதிரே வரும் வாகனங்கள் இடம் கொடுக்க வழியில்லாததால் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே வெட்டப்பட்ட ராட்சத மரத்தை அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here