அருமனை: பழமையான ஈட்டி மரம் வெட்டி கடத்தல்

0
431

அருமனை அருகே மாங்கோடு ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தில் தனியார் காட்டில் பழமையான ஈட்டி மரம் காணப்பட்டது. இந்த மரத்தை சம்பந்தப்பட்ட தனியார் நில உரிமையாளர் பராமரித்து வந்தார். மேலும் ஈட்டி மரம் பாதுகாக்கப்பட்ட மரம் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (ஏப்ரல் 14) காட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பழமையான ஈட்டி மரத்தை வெட்டிக் கடத்திச் சென்றுள்ளனர். 

இன்று  (ஏப்ரல் 15)அந்த பகுதிக்கு வந்தவர்கள் மரம் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்து, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். 

மாங்கோடு ஊராட்சியில் தொடர்ந்து பழமையான மற்றும் பாதுகாக்கப்பட்ட மரங்கள் வெட்டிக் கடத்தப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட வனத்துறை மற்றும் போலீசார் மரங்கள் வெட்டிக் கடத்தும் கும்பலை கண்டறிந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here