காயத்ரி கோபிசந்த், திவ்யா உட்பட 17 பேருக்கு அர்ஜுனா விருது

0
22

கா​யத்ரி கோபிசந்த், திவ்யா தேஷ்​முக், விதித் குஜ்ராத்தி உட்பட 17 விளை​யாட்டு வீரர், வீராங்​க​னை​களுக்கு அர்ஜுனா விருதை மத்​திய அரசு நேற்று அறி​வித்​துள்​ளது.

விளை​யாட்​டுப் போட்​டிகளில் சிறந்து விளங்​கும் வீரர், வீராங்​க​னை​களுக்கு அர்​ஜுனா விருதும், ‘மேஜர் தயான் சந்த் கேல் ரத்​னா’ விருதும், பயிற்​சி​யாளர்​களுக்கு துரோணாச்​சார்யா விருதும் மத்​திய அரசால் ஆண்​டு​தோறும் வழங்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் நேற்​று, மத்​திய இளைஞர் விவ​காரங்​கள் மற்​றும் விளை​யாட்​டுத் துறை அமைச்​சகம் 2025-ம் ஆண்​டுக்​கான தேசிய விளை​யாட்டு விருதுகளை அறி​வித்​தது. இதில் 17 விளை​யாட்டு வீரர்​கள் அர்​ஜுனா விருதுக்​குத் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளனர். இருப்​பினும், இந்த ஆண்டு ‘மேஜர் தயான் சந்த் கேல் ரத்​னா’ விருதுக்கு எந்த விளை​யாட்டு வீரரும் தேர்ந்​தெடுக்​கப்​பட​வில்​லை.

உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி அருண் குமார் மிஸ்ரா தலை​மையி​லான தேர்​வுக் குழு​வின் பரிந்​துரைகளின் அடிப்​படை​யில் இந்த அர்​ஜுனா விருதுகள் அறிவிக்​கப்​பட்​டன. அந்​தவகை​யில், அர்​ஜுனா விருதுக்​காகத் தேர்​வுக் குழு முதலில் 24 பேர் கொண்ட பட்​டியலை முன்​மொழிந்​திருந்​தது, ஆனால் அமைச்​சகம் 17 பேருக்கு மட்​டுமே ஒப்​புதல் அளித்​துள்​ளது.

தடகள வீரர் தேஜஸ்​வின் சங்​கர், வீராங்​கனை பிரி​யங்கா கோஸ்​வாமி, செஸ் வீரர் விதித் குஜ​ராத்​தி, வீராங்​கனை திவ்யா தேஷ்​முக் உள்​ளிட்​டோருக்கு அர்​ஜுனா விருது அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

வாழ்​நாள் சாதனைக்​கான அர்​ஜுனா விருது தமிழகத்​தைச் சேர்ந்த முன்​னாள் கால்​பந்து வீரர் ஐ.அரு​மை​நாயகத்​துக்கு அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அர்​ஜுனா விருதுகள் பெறு​வோர் விவரம்:

தேஜஸ்​வின் சங்​கர் (தடகளம்), பிரி​யங்கா கோஸ்​வாமி (தடகளம்), நரேந்​தர் (குத்​துச்​சண்​டை), விதித் குஜ​ராத்தி (செஸ்), திவ்யா தேஷ்​முக் (செஸ்), தனுஷ் காந்த் (பா​ரா- துப்​பாக்கி சுடு​தல்), ராஜ்கு​மார் பால் (ஹாக்​கி), சுர்​ஜீத் (கபாடி), ருத்​ராம்ஷ் கந்​தேல்​வால் (பா​ரா-துப்​பாக்கி சுடு​தல்), ஏக்தா பயான் (பா​ரா-தடகளம்), அரவிந்த் சிங் (துடுப்​புப் படகுப் போட்​டி), அகில் ஷியோரன் (துப்​பாக்கி சுடு​தல்), ட்ரீசா ஜாலி (பாட்​மிண்​டன்), காயத்ரி கோபிசந்த் (பாட்​மிண்​டன்), லால்​ரெம்​சி​யாமி (ஹாக்​கி), முகமது அஜ்மல் (தடகளம்), பூஜா (கபடி).

அர்​ஜுனா விருது (வாழ்​நாள் சாதனை): ஐ.அரு​மை​நாயகம் (கால்​பந்​து).

துரோணாச்​சார்யா விருது: பர்​வீர் சிங், சோட்டே லால் யாதவ், நேஹா சவான்.

துரோணாச்​சார்​யா விருது (வாழ்​நாள்​ சாதனை): தர்​மேந்​திர ​யாதவ்​, வீரேந்​தர்​ கு​மார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here