குமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தற்போது திங்கள்நகர் அருகே உள்ள ஒரு வாடகை வீட்டில் பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமியின் தந்தை வேறு மாவட்டத்தில் கொத்தனார் வேலைக்கு சென்று வருகிறார். சிறுமி பிளஸ் டூ முடித்துவிட்டு கடந்த சில மாதங்களாக கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தார். இதற்கிடையே சம்பவ தினம் காலை வழக்கம் போல் கம்ப்யூட்டர் வகுப்புக்கு கிளம்பி சென்றுள்ளார். ஆனால் வகுப்புக்கு செல்லாமல் மண்டைக்காடு புதூரில் உள்ள ஒரு தேவ ஆலயத்திற்கு சென்றுள்ளார். பின்னர் மதியம் திங்கள்நகர் செல்வதற்காக அந்த பகுதியில் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த போது, அவளது பாட்டி வீட்டருகில் சிறுமிக்கு தெரிந்த சுபாஷ் (38) என்பவர் பைக்கில் வந்துள்ளார்.
உடனடியாக சுபாஷ் அந்த மாணவியிடம் நைசாக பேச்சு கொடுத்து பைக்கில் ஏற்றியுள்ளார். தெரிந்த நபர் என்பதால் சிறுமி பைக்கில் ஏறி உள்ளார். அப்போது சுபாஷ் மாணவியை நடூவுர்கரை பகுதியில் உள்ள அவரது நண்பர் ரமேஷ் (36) என்பவர் வீட்டிற்கு கொண்டு சென்று அங்கு ரமேஷிடம் ஏதோ காரணம் சொல்லி அவரை வெளியில் அனுப்பி வைத்துவிட்டு, சுபாஷ் சிறுமியை வீட்டுக்குள் வைத்து கட்டாயப்படுத்தி மிரட்டி பாலியல் பல***ரம் செய்ததாக கூறப்படுகிறது.
அதன்பிறகு சுபாஷ் சிறுமியை பைக்கில் ஏற்றிக்கொண்டு திங்கள்நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் கொண்டு சென்று விட்டுவிட்டார். இந்த நிலையில் சிறுமி மிகவும் சோர்வாக இருப்பதை கவனித்த தாயார் மகளிடம் விசாரித்த போது சுபாஷ் தன்னை அழைத்து சென்று பலாத்காரம் செய்ததை தாயாரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ந்துபோன தாயார் உடனடியாக குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை பலா***ரம் செய்த சுபாஷ் மற்றும் நண்பர் ரமேஷ் ஆகியோர் மீது போக்சோ பிரிவினில் வழக்குப் பதிவு செய்து, இரண்டு பேரையும் கைது செய்தனர். இதில் சுபாஷுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரமேஷ் குடும்பம் ஆகி தற்போது மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக தெரிகிறது.














