பழனிசாமியால் அதிமுக வலுவிழந்தது: செங்கோட்டையன்

0
24

எம்​ஜிஆர், ஜெயலலிதா உரு​வாக்​கிய இயக்​கம் பழனி​சாமி​யால் வலு​விழந்​து​விட்​ட​தாக நிதி அமைச்​சர் செங்​கோட்​டையன் தெரி​வித்​தார்.

கோவை விமான நிலை​யத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் மேலும் அவர் கூறிய​தாவது: தமிழக பொருளா​தார நெருக்​கடிகளை சமாளிக்​கும் திறமை விஜய்​யிடம் உள்​ளது.

மகளிர் பாது​காப்​பு, போதைப்​பொருள் தடுப்பு போன்ற விஷ​யங்​களில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்​கப்​பட்டுவரு​கிறது. 717 டாஸ்மாக் கடைகள் அகற்​றப்​பட்​டுள்​ளன. பொறுப்​பேற்ற உடனேயே இவ்​வளவு சாதனை​கள் செய்யப்பட்டுள்ளன. அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யின் நிலைப்​பாடு​களை பார்க்​கும்​போது எம்ஜிஆர், ஜெயலலிதா உரு​வாக்​கிய இயக்​கம் வலு​விழந்து உள்​ள​து.

‘நான்’ என்று ஒரு​வர் நினைத்​தால், ஆண்​ட​வன் ‘தான்’ என்று காட்​டி​விடுவார். தான் ஒரு​வரே போதும் என்ற எண்​ணத்​தில் அவர் செயல்​படு​கிறார். அதை காலம் கட்​டா​யம் மாற்​றிக் காட்​டும். அதி​முக​வுக்கு எத்​தனை அமைச்​சர்​கள் என்​பது குறித்து நாங்​கள் இது​வரை எது​வும் கூற​வில்​லை. இவ்​வாறு அவர் கூறி​னார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here