எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கம் பழனிசாமியால் வலுவிழந்துவிட்டதாக நிதி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது: தமிழக பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கும் திறமை விஜய்யிடம் உள்ளது.
மகளிர் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு போன்ற விஷயங்களில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. 717 டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டுள்ளன. பொறுப்பேற்ற உடனேயே இவ்வளவு சாதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் நிலைப்பாடுகளை பார்க்கும்போது எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கம் வலுவிழந்து உள்ளது.
‘நான்’ என்று ஒருவர் நினைத்தால், ஆண்டவன் ‘தான்’ என்று காட்டிவிடுவார். தான் ஒருவரே போதும் என்ற எண்ணத்தில் அவர் செயல்படுகிறார். அதை காலம் கட்டாயம் மாற்றிக் காட்டும். அதிமுகவுக்கு எத்தனை அமைச்சர்கள் என்பது குறித்து நாங்கள் இதுவரை எதுவும் கூறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
