சிறார் பாலியல் வீடியோ குறித்து இன்ஸ்டாகிராமில் விளம்பரம்: மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்

0
22

பாலியல் வன்கொடுமை, சிறார் பாலியல் வீடியோ தொடர்​பான விளம்​பரங்​கள் இன்​ஸ்​டாகி​ராமில் வரு​வது குறித்து ஒரு வாரத்​துக்​குள் விளக்​கம் அளிக்​கும்​படி மெட்டா நிறு​வனத்​துக்கு மத்​திய அரசு நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளது.

பிரபல​மான சமூக ஊடகங்​களான ஃபேஸ்​புக், இன்​ஸ்​டாகி​ராம் மற்​றும் வாட்​ஸ்​அப் ஆகிய​வற்றை அமெரிக்​கா​வின் கலி​போர்​னி​யா​வில் இருந்து செயல்​படும் மெட்டா நிறு​வனம் நிர்​வகிக்​கிறது. வாட்​ஸ்​அப்​பில் அறி​முகம் செய்​யப்​பட​வுள்ள ‘யூசர்​நேம்’ அம்​சம் குறித்து விளக்​கம் அளிக்க மெட்டா நிறு​வனத்​துக்கு மத்​திய அரசு சமீபத்​தில் ஒரு நோட்​டீஸ் அனுப்​பியது.

இந்​நிலை​யில் பாலியல் வன்​கொடுமை, சிறார் பாலியல் வீடியோ குறித்த விளம்​பரங்​கள் இன்​ஸ்​டாகி​ராமில் அதி​கம் வரு​வ​தாக செய்​தி​கள் வெளி​யா​யின. மெட்​டா​வின் விளம்​பரக் கொள்​கை​களில் பாலியல் வீடியோக்​கள் தடை செய்​யப்​பட்​டுள்ள நிலை​யிலும், ஃபேஸ்​புக் மற்​றும் இன்​ஸ்​டாகி​ராமில் இத்​தகைய விளம்​பரங்​கள் அதி​கம் வரு​கின்​றன. இந்த விளம்​பரங்​கள் பார்​வை​யாளர்​களை டெலிகி​ராம் சேனல்​களுக்கு அழைத்​துச் செல்​கின்​றன. அங்கு பாலியல் தொடர்​பான வீடியோக்​கள் விற்​பனை செய்​யப்​படு​கின்​றன.

இது குறித்து மெட்டா நிறு​வனத்​துக்கு சம்​மன் அனுப்​பு​மாறு மத்​திய தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் உத்​தர​விட்​டார். இதையடுத்து இந்த விவ​காரம் குறித்து ஒரு வாரத்​துக்​குள் விளக்​கம் அளிக்​கும்​படி​யும், பாலியல் வீடியோக்​கள் தொடர்​பான விளம்​பரங்​களை நீக்​கும் படி​யும் மெட்டா நிறு​வனத்​துக்கு மத்​திய அரசின் மின்​னணு மற்​றும் தகவல் தொழில்​நுட்ப அமைச்​சகம் நோட்​டீஸ்​ அனுப்​பியுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here