தீபாவளி பலகாரம் தயாரிப்பில் விதி மீறினால் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

0
28

சென்னை மாவட்ட ஆட்சி​யர் எஸ்.மாலதி ஹெலன் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: இனிப்பு, கார வகைகள் தயாரிக்​கும் அனைத்து உணவு வணிகர்​களும், கட்​டாயம் உரிய உரிமம் அல்​லது பதிவு சான்​றிதழ் பெற்​றிருக்க வேண்​டும்.

தற்​காலிக​மாக அமைக்​கப்​பட்​டுள்ள பல​காரகூடங்​கள், திரு​மண மண்​டபங்​கள், வீடுகளில் ஆர்​டரின் பேரில் பலகாரம் தயாரிப்​பவர்​களும் உணவுப் பாது​காப்​புத் துறை​யில் பதிவு செய்த பிறகே விற்​பனையைத் தொடங்க வேண்​டும்.

தவறினால் சட்​டப்​படி நட​வடிக்கை எடுக்​கப்​படும். மேலும் விற்​பனை செய்​யப்​படும் இனிப்பு பெட்​டிகள் மற்​றும் பொட்​டலங்​களில் பல​காரம் தயாரிக்​கப்​பட்ட தேதி, காலா​வதி காலம், உணவுப் பாது​காப்​புத் துறை பதிவு எண் மற்​றும் சைவ, அசைவ குறியீடு உள்​ளிட்ட விவரங்​கள் அச்​சிடப்​பட்​டிருக்க வேண்​டும்.

கிரு​மித்​தொற்று இல்​லாத சுகாதா​ர​மான சூழலில் மட்​டுமே விற்​பனை செய்ய வேண்​டும். பல​காரங்​களில் அனுமதிக்​கப்​பட்ட செயற்கை வண்​ணங்​களை மட்​டுமே பயன்​படுத்த வேண்​டும்.

கார வகைகளில் கார்​மோசின், எரித்​ரோசின், பாஸ்ட் கிரீன், மெட்​டானில் எல்லோ, ஆரஞ்சு ஆர்.என், ரோடமைன் பி, டார்ட்​ராசின் போன்ற 7 வகை​யான செயற்கை வண்​ணங்​களை​யும், இனிப்பு வகைகளில் ஆரஞ்சு ஆர்.என், மெட்​டானில் எல்லோ, ரோடமைன் பி ஆகிய வண்​ணங்​களை​யும் சேர்க்க அனுமதி இல்லை.

பால் இனிப்​பு​கள் 3 முதல் 5 நாட்​கள் மட்​டுமே ஆயுட்​காலம் கொண்​டவை. அவற்றை நீண்ட நாட்​கள் கெடாத பிற இனிப்​பு​களு​டன் பரிசு பெட்​டிகளில் ஒன்​றாக சேர்த்து விற்​பனை செய்ய கூடாது.

புகார்​களுக்கு 94440 42322 என்ற வாட்​ஸ்அப் எண், foodsafety.tn.gov.in என்ற இணை​யதளம் அல்​லது உணவுப் பாது​காப்பு நுகர்​வோர் செயலி வழி​யாக பொது​மக்​கள் தங்​களது புகார்​களை பதிவு செய்​ய​லாம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here