ரஜினியின் ‘கூலி’ படத்தில் ஆமிர்கான்?

0
367

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வரும் படம், ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசை அமைக்கிறார். இதில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

கன்னட நடிகர் உபேந்திராவும் நடிக்க இருக்கிறார். அவர், இந்தப் படத்தின் லுக் டெஸ்டில் கலந்துகொண்டதாகத் தெரிவித்தார். பிறமொழிகளில் இருந்து மேலும் சில நடிகர்கள் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் இப்போது நடந்து வரும் நிலையில், பிரபல இந்தி நடிகர் ஆமிர்கான், இதில் கவுரவ வேடத்தில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here