லோகேஷ் கனகராஜின் ‘இரும்புக் கை மாயாவி’யில் ஆமீர்கான்!

0
324

லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை இயக்கியுள்ளார். ரஜினியின் 171-வது படமான இதில், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர். இந்தி நடிகர் ஆமீர்கான், கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இப்போது நடந்து வருகின்றன. ஆக.14-ல் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், ஆமீர்கான் நடிப்பில் சூப்பர் ஹீரோ கதையை இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஆமிர்கான் நடித்துள்ள ‘சித்தாரே ஜமீன் பர்’ என்ற இந்திப் படம் வரும் 20-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதன் புரமோஷனில் கலந்துகொண்ட ஆமீர்கானிடம் இதுபற்றி கேட்டபோது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்தார்.

“லோகேஷ் இயக்கத்தில் நான் நடிக்கும் படம் பிரம்மாண்டமான சூப்பர் ஹீரோ கதையாக இருக்கும். அடுத்த ஆண்டு பிற்பகுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்கும்” என்றார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ‘இரும்பு கை மாயாவி’ என்ற சூப்பர் ஹீரோ கதையை வைத்திருப்பதாகவும் அதில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் முன்பு தகவல்கள் வெளியாகி இருந்தன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here