விண்வெளியில் இருந்து திரும்பிய விண்கலத்தை இயந்திர கைகளால் பிடித்து சாதனை

0
19

உலக வரலாற்​றில் முதல்​முறை​யாக விண்​வெளி​யில் இருந்து பூமிக்கு திரும்​பிய “ஸ்டார்ஷிப்” விண்​கலத்தை இரும்பு கோபுரத்​தின் இயந்​திர கைகள் மிக துல்​லிய​மாகப் பிடித்து உள்ளது. இதன்மூலம் ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனம் புதிய சாதனையைப் படைத்​திருக்​கிறது.

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்​குக்கு சொந்​த​மான ஸ்​பேஸ் எக்ஸ் நிறு​வனம் விண்​வெளி ஆராய்ச்​சி​யில் முன்​னோடி​யாக விளங்​கு​கிறது. அ்தன் சார்​பில் பால்​கன் மற்​றும் ஸ்​டார்​ஷிப் ஆகிய பெயர்​களில் அதிநவீன ராக்​கெட்​டுகள் தயாரிக்​கப்​படு​கின்​றன. இரு ராக்​கெட்​டுகளை​யும் பலமுறை பயன்​படுத்த முடியும். அமெரிக்​கா​வின் டெக்​சாஸ் மாகாணம், ஸ்​டார்​பேஸ் பகுதி​யில் ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனத்​தின் ராக்​கெட் ஏவுதளம் அமைந்​துள்​ளது.

அங்கு 479 அடி உயரம், 44 அடி அகலத்​தில் இரு இரும்பு கோபுரங்கள் கட்​டப்​பட்டு உள்​ளன. இந்த கோபுரங்​களில் இருந்தே ஸ்​டார்​ஷிப் ராக்​கெட்​டுகள் ஏவப்​படு​கின்​றன. கடந்த 13-ம் தேதி டெக்​சாஸ் மாகாணம், ஸ்​டார்​பேஸ் தளத்​தின் இரும்பு கோபுரத்தில் இருந்து 403 அடி நீளம் கொண்ட ஸ்​டார்​ஷிப் ராக்கெட் விண்​ணில் சீறிப் பாய்ந்​தது.

விண்​வெளிக்​குள் நுழைந்​த​போது ராக்​கெட்​டில் இருந்து தனியாகப் பிரிந்த விண்​கலம், 26 செயற்​கைக்​கோள்​களை அடுத்​தடுத்து நிலைநிறுத்​தி​யது. விண்​வெளி சுற்​றுப் பாதையில் சுமார் 22 மணி நேரம் சுற்​றிய ஸ்​டார்​ஷிப் விண்​கலம் இந்​திய நேரப்​படி நேற்று முன்​தினம் அதி​காலை 2.48 மணிக்கு இரும்பு கோபுரத்துக்கு திரும்பி வந்​தது.

அப்​போது இரும்பு கோபுரத்​தின் இயந்​திர கைகள், விண்​கலத்தை மிகவும் துல்​லிய​மாகப் பிடித்​தது. உலக வரலாற்​றில் முதல்​முறையாக இந்த சாதனை படைக்​கப்​பட்​டிருக்​கிறது. இதற்கு முன்பு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பூஸ்டர் ராக்கெட்டுகளை இயந்திர கைகள் மூன்று முறை பிடித்துள்ளன.

ஆனால், தற்போது அதைவிட அதிக உயரத்திலிருந்து வந்த ஸ்டார்ஷிப் விண்கலத்தை இயந்திர கைகளால் பிடித்தது உலக வரலாற்றில் இதுவே முதல்முறை. இதற்கு முன்பு ஸ்​டார்​ஷிப் ராக்கெட் திரும்பி வரும் வழியில் தொழில்​நுட்ப கோளாறு காரணமாக மெக்​ஸிகோ வளைகுடாவில் விழுந்தது்.

ஸ்​பேஸ் எக்ஸ் நிறு​வனர் எலான் மஸ்க்், “முதல்​முறை​யாக இயந்திர கைகள் மூலம் விண்​கலம் பிடிக்​கப்​பட்டு, புதிய வரலாற்று சாதனை படைக்​கப்​பட்டு உள்​ளது. இதற்​காக உழைத்த குழு​வினரை வாழ்த்து​கிறேன்” என்று தெரி​வித்​துள்​ளார். கூகுள் தலைமை செயல் அதி​காரி சுந்​தர் பிச்சை், “நம்ப முடி​யாத கதை போல உள்​ளது” என்று பாராட்டியுள்​ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here