திரிணமூல், உத்தவ் சிவசேனா, ஆம் ஆத்மி அதிருப்தி எம்.பி.க்களால் நாடாளுமன்றத்தில் பாஜக கூட்டணி பலம் அதிகரிப்பு

0
28

கடந்த ஏப்​ரல் மாத நில​வரப்​படி மக்களவை​யில் பாஜக கூட்டணிக்கு 292 எம்​.பி.க்கள் இருந்​தனர். மேற்​கு​வங்க சட்டப்​பேரவைத் தேர்​தலுக்​குப் பிறகு திரிணமூல் காங்​கிரஸ் உடைந்​தது. அந்த கட்​சி​யின் 20 மக்​களவை எம்​.பி.க்கள் தேசியவாத குடிமக்​கள் கட்​சி​யில் இணைந்து பாஜகவுக்கு ஆதரவு அளிக்​கின்​றனர்.

உத்​தவ் தாக்​கரேவின் சிவசேனா கட்​சியை சேர்ந்த 6 எம்.​பி.க்​கள், ஏக்​நாத் ஷிண்டே தலை​மையி​லான சிவசேனாவில் இணைந்​தனர். இத​னால் பாஜக கூட்​ட​ணி​யின் பலம் 318 ஆக அதி​கரித்​தது. அசாம் மாநிலம் நகோன் மக்​களவைத் தொகுதிக்கு நடை​பெற்ற இடைத்தேர்​தலில் பாஜக வெற்றி பெற்​றது. இதன்​காரண​மாக மக்களவையில் பாஜக​ கூட்டணியின் பலம் 319 ஆக அதிகரித்திருக்​கிறது.

மகளிர் இடஒதுக்​கீடு அமலாக்​கம், தொகுதி மறு​வரையறை மசோதாக்​களை நிறைவேற்ற ஆளும் பாஜக கூட்​ட​ணிக்கு 360 எம்.பி.க்​களின் ஆதரவு தேவை. மத்​திய அரசுக்கு கூடுதலாக 41 எம்.பி.க்​கள் மட்​டுமே தேவை என்ற சூழலில் திமுக (22), சரத்பவாரின் தேசி​ய​வாத காங்​கிரஸ் (8), ஒய்​எஸ்ஆர் காங்​கிரஸ் (4) உள்​ளிட்ட சில கட்​சிகள் ஆதரவு அளிக்​கும் என தெரி​கிறது. எதிர்க்​கட்​சிகளை சேர்ந்த சில எம்​.பி.க்​கள் அணி மாறி வாக்களிக்கக்​கூடும் என்​றும் சமாஜ்வாதி (37) உள்​ளிட்ட சில கட்சிகள் புறக்​கணிக்​கக்​கூடும்.

மாநிலங்​களவை நில​வரம்

ஆம் ஆத்மி கட்​சி​யின் 7 மாநிலங்​களவை எம்​.பி.க்​கள் கடந்த ஏப்ரலில் பாஜக​வில் இணைந்​தனர். இதேபோல கடந்த ஜூலை​யில் திரிணமூல் காங்​கிரஸை சேர்ந்த 4 மாநிலங்​களவை எம்.​பி.க்​கள் பாஜக​வில் இணைந்​தனர். இதன்​மூலம் மாநிலங்​களவையில் பாஜக கூட்​ட​ணி​யின் பலம் 151 ஆக உயர்ந்​திருக்​கிறது. இந்த அவை​யில் தற்​போது 243 எம்​.பி.க்​கள் உள்ள நிலை​யில் மகளிர் இடஒதுக்​கீடு அமலாக்​கம், தொகுதி மறு​வரையறை மசோதாக்​களை நிறைவேற்ற 162 எம்​.பி.க்​களின் ஆதரவு தேவை. ஆளும் பாஜக கூட்​ட​ணிக்கு திமுக (8), ஒய்​எஸ்ஆர் காங்​கிரஸ் (4) உள்​ளிட்ட சில கட்​சிகள் ஆதரவு அளிக்​கும் என்று தகவல்​கள் வெளியாகி உள்​ளன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here