மேற்கு வங்க சாலை திட்டத்துக்கு ரூ.1 லட்சம் கோடி: மத்திய அமைச்சர் கட்கரி அறிவிப்பு

0
23

மேற்கு வங்​கத்​துக்கு ரூ.1 லட்​சம் கோடி மதிப்பிலான புதிய சாலைத் திட்​டங்​கள் நிறைவேற்​றப்​படும் என்று மத்​திய அமைச்​சர் நிதின் கட்​கரி நேற்று அறி​வித்​தார்.

ஏற்கனவே நடை​பெற்று வரும் ரூ.35,000 கோடி மதிப்​பிலான பணிகளு​டன் இவை கூடுதலாகும். கொல்​கத்தா வட்​டச் சாலைக்கு மட்​டும் ரூ.14,000 கோடி ஒதுக்​கப்​பட உள்​ளது. கோலாகாட்​டில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், முதல்​வர் சுவேந்து அதி​காரி முன்னிலை​யில் பேசிய கட்​கரி, மாநிலத்​தின் சாலை உள்கட்டமைப்பை வலுப்​படுத்த மத்​திய அரசு உறுதிபூண்​டுள்​ள​ தாகக் கூறினார்.

அண்டை மாநிலங்​களு​டனான இணைப்பை மேம்​படுத்​தும் திட்டங்​களை விரைவுபடுத்​தவும் நட​வடிக்கை எடுக்​கப்​படும் என்றும் அவர் தெரி​வித்​தார். இந்த அறி​விப்​பு​களை வரவேற்ற முதல்​வர் சுவேந்து அதி​காரி, திட்​டங்​கள் உரிய நேரத்​தில் நிறைவேற்​றப்​படுவதை உறுதிசெய்ய மாநில அரசு அனைத்து உதவி​களை​யும் வழங்​கும் என்​றார். நிலம் கையகப்​படுத்தி வழங்கு​வது, அனுமதி​களை விரைவாக வழங்​கு​வது உள்​ளிட்ட பணிகளில் மாநில அரசு முழு ஒத்​துழைப்பு அளிக்​கும் என்​றும் அவர் உறுதி​யளித்​தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here