விடுதலைப் புலிகள் மறுசீரமைப்பு சதி வழக்கு: அப்ரூவராக மாறிய இலங்கை நபருக்கு ஜாமீன்

0
24

கடந்த 2021-ம் ஆண்டு கேரளாவின் விழிஞ்​ஞம் கடற்​கரைக்கு அருகே இலங்கை படகில் 300 கிலோவுக்கு அதிகமான ஹெராயின் போதைப்​பொருள், 5 ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் 1,000 தோட்​டாக்​கள் பறி​முதல் செய்யப்பட்டன.

இது தொடர்​பான வழக்​கில் இலங்​கையைச் சேர்ந்த முகமது அஸ்மினை 2022-ம் ஆண்டு டிசம்​பர் மாதம் தேசிய புலனாய்வு முகமை (என்​ஐஏ) கைது செய்​தது. தடைசெய்​யப்​பட்ட விடுதலைப் புலிகள் இயக்​கத்​தின் மறுசீரமைப்பு நட​வடிக்​கைகளுக்கு நிதி திரட்டுவதற்​காக, சர்​வ​தேச அளவி​லான போதைப்​பொருள் கடத்தலுக்கு அவர் உடந்​தையாக இருந்​த​தாக என்​ஐஏ குற்றம்சாட்டியது.

இதனிடையே, சிறை​யில் இருந்த முகமது அஸ்​மின், இந்த சதித் திட்​டம் மற்​றும் இதில் தொடர்​புடைய சக குற்​றவாளி​கள் குறித்த முழு​மையான தகவல்​களை தாமாக முன்​வந்து வாக்​குமூலமாக அளித்​தார். மேலும், இவ்​வழக்​கில் அரசுத் தரப்பு சாட்​சி​யாக (அப்ரூவர்) மாறினார். இதனை ஏற்​றுக்​கொண்ட என்​ஐஏ சிறப்பு நீதி​மன்​றம், கடந்த 2023-ம் ஆண்டு அவருக்கு மன்​னிப்பு வழங்கி உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில், நீண்ட காலமாக சிறை​யில் இருந்து வரும் தனக்கு ஜாமீன் வழங்​கக் கோரி அஸ்​மின் கேரள உயர் நீதி​மன்​றத்​தில் மனுத் தாக்​கல் செய்​திருந்​தார். இந்த மனுவை விசா​ரித்த நீதிபதிகள் ராஜா விஜயராகவன் வி. மற்​றும் கே.வி. ஜெயக்​குமார் ஆகியோர் அடங்​கிய அமர்வு, அவருக்கு நிபந்​தனை ஜாமீன் வழங்கி உத்​தர​விட்​டது. சிறப்பு நீதி​மன்​றத்​தால் ஏற்​கெனவே மன்னிப்பு வழங்​கப்​பட்​டுவிட்ட நிலை​யில், அவரைத் தொடர்ந்து சிறை​யில் வைத்​திருப்​பது நியாயமற்​றது என்று நீதிப​தி​கள் குறிப்பிட்​டனர்.

அரசுத் தரப்பு சாட்​சி​யாக மாறியுள்​ள​தால் அஸ்மினுக்கு ஏற்​படக்​கூடிய உயிர் அச்​சுறுத்​தல்​களைக் கருத்​தில் கொண்ட உயர் நீதி​மன்​றம், அவரை ‘கேரள சாட்​சிகள் பாது​காப்​புத் திட்​டத்​தின்’ கீழ் கொண்டு வந்து உரிய பாது​காப்பு வழங்​குமாறு மாநில உள்துறைச் செய​லா​ள​ருக்கு உத்​தர​விட்​டுள்​ளது. தடையில்லை அதேநேரம், சட்​ட​விரோத​மாகத் தங்​கி​யிருந்​தது தொடர்​பான குடியேற்​றத் துறை நட​வடிக்​கைகளுக்கு இந்த ஜாமீன் உத்​தரவு தடை​யாக இருக்​காது என்​றும் நீதி​மன்​றம் தெளிவுபடுத்​தி​யுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here