முத்தரப்பு ஒப்பந்தப்படி கள உதவியாளர் பதவி உயர்வு கோரி மாநிலம் முழுவதும் மின்வாரிய கேங்மேன்கள் போராட்டம்

0
13

முத்தரப்பு ஒப்​பந்​தத்​தின் அடிப்​படை​யில் கள உதவியாளர்​களாக மாற்ற வலியுறுத்தி மாநிலம் முழு​வதும் கேங்​மேன் பணி​யாளர்​கள் போராட்​டம் நடத்​தினர்.

தமிழக மின்​வாரியம் தரப்​பில் கடந்த நவ.21ம் தேதி 9,613 கேங்​மேன் பணி​யாளர்​களை கள உதவியாளர் பணிக்கு மாற்​று​வதற்​கான கருத்துருவை அரசின் ஒப்​புதலுக்கு அனுப்​பியது.

இது மட்​டும் போதாது, பதவி மாற்​றத்​துக்​கான இறுதி உத்​தரவை வெளி​யிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்​நாடு மின் ஊழியர் மத்​திய அமைப்​பினர் (சிஐடியு) சார்​பில் 6 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட கேங்​மேன் பணி​யாளர்​கள் நேற்று போராட்​டம் நடத்தினர்.

சென்​னை​யில் கே.கே.நகர் கோட்​டத்​துக்கு உள்​பட்ட துணை மின் நிலைய வளாகத்​தில் நடந்த இப்​போராட்​டம் குறித்து மின் ஊழியர் மத்​திய அமைப்​பின் மாநிலச் செய​லா​ளர் ஜெய்​சங்​கர் கூறியதாவது: கடந்த 2014-ம் ஆண்டு உடற்​தகுதி மற்​றும் எழுத்து தேர்​வில் 9,613 கேங்​மேன்பணி​யாளர்​களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்​கப்​பட்​டன.

ஆனால் மின்​வாரியத்​தில் ஆட்​கள் பற்​றாக்​குறை காரண​மாக அனைத்து வேலைகளை​யும் செய்ய நிர்​பந்​திக்​கப்​பட்​டோம். கடந்த ஆட்​சி​யில் முத்​தரப்பு ஒப்​பந்​தத்​தின்​படி கேங்​மேன் பணி​யாளர்​களை கள உதவியாளர்​களாக மாற்​று​வதற்​கான உத்​தர​விடப்​பட்ட நிலை​யில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டது.

தற்​போது புதிய ஆட்சி வந்து 7 மாதங்​கள் ஆகி​யும் கோரிக்​கையை நிறைவேற்ற அரசு முனைப்பு காட்​ட​வில்லை. பல ஆண்​டுகளாக கள உதவியாளர்​களாக மாற்​று​வதற்​கான பல போராட்​டங்​களை நடத்தி வருகிறோம். அடுத்​தக்​கட்​ட​மாக தொடர் போராட்​டத்தை நடத்த திட்​ட​மிட்டு வருகிறோம். இவ்வாறு கூறினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here