தவறாக பயன்படுத்துவதாக புகார் எழுந்ததால் இந்தியருக்கான விசா சலுகையை ரத்து செய்த மலேசியா

0
17

இந்​திய சுற்​றுலாப் பயணி​களுக்கு வழங்​கப்​பட்டு வந்த விசா விலக்கு சலுகையை 2027-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் நிறுத்த மலேசிய அரசு முடிவு செய்​துள்​ளது.

கரோனா பெருந்​தொற்​றுக்​குப் பிறகு சுற்​றுலாவை மேம்​படுத்த, இந்​தி​யர்​களுக்கு 30 நாட்​கள் விசா இல்​லாமல் தங்​கும் சலுகையை மலேசியா அரசு 2023 டிசம்​பரில் அறி​முகப்​படுத்​தி​யது. இதன் மூலம் மலேசியா செல்​லும் இந்​தி​யர்​களின் எண்​ணிக்கை பல மடங்கு அதி​கரித்​தது. ஆனால், இந்​தச் சலுகை தவறாகப் பயன்​படுத்​தப்​படு​வ​தாக கோலாலம்​பூரில் உள்ள இந்​தி​யத் தூதரகம் சமீபத்​தில் எச்​சரிக்கை விடுத்​திருந்​தது.

இந்நிலை​யில், மலேசிய குடியேற்​றத் துறை வெளி​யிட்​டுள்ள அறிவிப்​பில், “2027 ஜனவரி 1-ம் தேதி முதல் இந்​தி​யர்​களுக்கு விசா விலக்கு சலுகை கிடை​யாது. மலேசியா வரும் இந்​தி​யர்​கள், பயணத்​துக்கு முன்​பாகவே முறை​யான விசா பெற்​றிருக்க வேண்டும். இதற்​கான விசா விண்​ணப்​பங்​களை 2026 டிசம்​பர் 1-ம் தேதி முதல் ‘MyVISA’ இணை​யதளம் வழி​யாக சமர்ப்​பிக்​கலாம்.

அதற்காக செலுத்​தப்​படும் கட்​ட​ணங்​கள், விசா நிராகரிக்கப்பட்டாலோ அல்​லது எக்​காரணம் கொண்​டும் திருப்பித் தரப்​ப​டாது. சுற்​றுலா விசாவைப் பயன்​படுத்தி வேலை தேடி வருபவர்​களின் எண்​ணிக்கை அதி​கரித்​ததைத் தொடர்ந்து இந்த முக்​கிய நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது” என்​று கூறப்பட்டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here